search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை தேவாலயங்களில் சிறப்பு கூட்டு திருப்பலி
    X

    தஞ்சை திருஇருதய பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலி நடந்தது.

    தஞ்சை தேவாலயங்களில் சிறப்பு கூட்டு திருப்பலி

    • திருவிழிப்பு சடங்குகளான புதுநெருப்பு, புனித தீர்த்தம் புனிதம் செய்யும் சடங்குகள் நடைபெற்றது.
    • தொடர்ந்து உயிர்த்த ஆண்டவரின் தேர்பவனி நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிர்தெழுந்த நிகழ்வை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி இன்று ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இதனை முன்னிட்டு நள்ளிரவு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு பிரார்த்தனை திருப்பலி நடைபெற்றது.

    அதன்படி தஞ்சை திரு இருதய பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை நள்ளிரவு வழிபாடு மறைமாவட்ட பரிபாலகரும், ஆயருமான (பொறுப்பு) சகாயராஜ் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக பாஸ்கார் திருவிழிப்பு சடங்குகளான புதுநெருப்பு, புனித தீர்த்தம் புனிதம் செய்யும் சடங்குகள் நடைபெற்றது. தொடர்ந்து கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.

    இந்த வழிபாட்டில் பேராலய பங்குத்தந்தை பிரபாகர், உதவி பங்குத்தந்தை பிரவீன், ஆயரின் செயலாளர் ஆன்ட்ரூ செல்வகுமார், திருத்தொண்டர் அரவிந்த் மற்றும் குருக்கள் கலந்து கொண்டனர். திருப்பலி முடிந்தவுடன் வியாகுல அன்னை ஆலய முகப்பில் இயேசுவின் உயிர்த்த காட்சி நடைபெற்றது. தொடர்ந்து உயிர்த்த ஆண்டவரின் தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் எரியும் மெழுகுவர்த்தியுடன் கலந்து கொண்டனர்.முடிவில் ஈஸ்டர் பாண்டிகை வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.

    இதேப்போல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்க ளிலும் நள்ளிரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    Next Story
    ×