search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துளசி மாலை"

    • நாமக்கல் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாத்தி வழிபடுவதன் மூலம் சனி கிரக பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.
    • துளசியை நினைத்தால் பாவம் போகும்.

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாத்தி வழிபடுவதன் மூலம் சனி கிரக பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

    தேவர்களும், அசுரர்களும் ஒன்று கூடி பாற்கடலை கடைந்து அதில் இருந்து அமிர்தத்தை பெற முயன்றனர்.

    அப்போது பாற்கடலில் இருந்து கற்பகத்தரு, ஐராவதம், காமதேனு, மகாலட்சுமி, சந்திரன் தோன்றினர்.

    மகா விஷ்ணுவின் ஆனந்த கண்ணீர் பெருகி அந்த கண்ணீர் துளி அமிர்த கலசத்தில் விழுந்தது.

    அந்த கலசத்தில் இருந்து பச்சை நிறத்துடன் துளசி மகாதேவி தோன்றினார்.

    துளசி, லட்சுமி, கவுதுஸ்பம் என்ற மூன்றை மட்டும் மகா விஷ்ணு வைத்துக்கொண்டு மற்றவற்றை தேவர்களுக்கு வழங்கி விட்டார்.

    துளசியில் 33 கோடி தேவர்கள், 12 சூரியர், 8 வசுக்கள், அசுவினி தேவர் இருவர் வசிக்கின்றனர்.

    இலையின் நுனியில் பிரம்மன், நத்தியில் மாயோன்மற்றும், லட்சுமி, சரஸ்வதி, காயத்ரி, பார்வதி ஆகியோர் வசிக்கின்றனர்.

    துளசியை நினைத்தால் பாவம் போகும்.

    துளசி மாலை சாத்தி விஷ்ணுவை வழிபட்டால் மனதில் உள்ள குழப்பங்கள் யாவும் விலகும். மனக்கிலேசம் நீங்கும்.

    புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் உண்டாகும் என்பது ஐதீகம்.

    இதன்படி விஷ்ணுவின் திருநாமத்தில் ஊறித்திளைக்கும் ஆஞ்சநேயருக்கும் பக்தர்கள் துளசி மாலை சாத்தி வழிபடுவது பிரதானமாக உள்ளது. துளசி மாலையுடன் உள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும்.

    புகழ் கூடும், செல்வம் பெருகும், பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.

    துளசி தீர்த்தத்தை அருந்தினால் பரமபதம் செல்வார்கள் என்றும் ஒரு கருத்து உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • துளசி மாலையில் 108 மணிகள் இருப்பது வழக்கம்.
    • அனுதினமும் ஆராதித்து வர நம் சகல துன்பங்களும் நீங்கும்.

    வைத்திருப்பதற்கும் வணங்கி அணிவதற்கும் துளசியை போன்றதொரு புனித தாவரத்தை நாம் காண முடியும். துளசியை போலவே, துளசி மாலையும் பெரும் முக்கியத்துவம் பெற்றது.

    உங்கள் கழுத்திலோ அல்லது மணிகட்டிலோ நீங்கள் துளசி மாலையை அணிகிற போது அலாதியான ஒரு பாதுகாப்பு உணர்வு மேலெழும். இதை சற்று நவீன அறிவியலுடன் தொடர்புபடுத்தினால் துளசி மாலையை தொடர்ந்து அணிவதால், இன்றைய காலத்தின் மன அழுத்தங்களில் இருந்து விடுபட முடிகிறது என்கின்றனர்.

    துளசி மாலையை ஏந்தியவாறு சொல்லப்படும் மந்திரம் "ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம ஹரே ராம ஹரே ஹரே பார்ப்பதற்கு மிக எளிதான மந்திரமாக தோன்றினாலும் கலியுக பாவங்களில் இருந்து நமக்கு முக்தி அளிக்க கூடிய முக்கிய மந்திரம் இது என்கின்றனர் பெரியோர். இதில் இருக்கும் மற்றொரு முக்கிய அம்சம், பார்ப்பதற்கு இந்த சாதனா எளிமையாக இருப்பதாலேயே பலரும் எளிமையானது தானே என இதை கூட கடைப்பிடிக்காமல் விட்டு விடுகின்றனர்.

    இந்த மாலையை கையில் வைத்திருக்கும் அல்லது அணிந்திருக்கும் எவரும் இந்த வித்தியாசத்தை உணரக்கூடும். அதாவது, அவர்கள் இந்த மாலையுடன் இருக்கும் போது, அவர்களின் கவனம் சிதறாமல் மிகவும் கவனத்துடன் பிரார்த்தனையில் வழிபாட்டில் இருக்கக்கூடும். அதுமட்டுமின்றி கையில் துளசி மாலையை வைத்தவாறே மந்திரத்தை உச்ரிப்பது நம்மை கிருஷ்ண பெருமானுக்கு மிக அருகில் எடுத்து செல்லும் வல்லமை கொண்டது என நம்புகின்றனர் பக்தர்கள்.

    இந்த துளசி மாலையில் 108 மணிகள் இருப்பது வழக்கம். இந்த மணிகளை ஒவ்வொன்றாக நகர்த்தி மந்திரம் அல்லது ஸ்லோகம் சொல்கிற போது ஒலியின் சக்தி நம்மை சுற்றி உருவாகிறது. இதன் மூலம் எளிமையாக நாம் தியான நிலைக்குள் சென்று விட முடியும். இத்தனை வல்லமைகளையும் பெற்ற துளசி மாலையை நாம் அனுதினமும் ஆராதித்து வர நம் சகல துன்பங்களும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும் வெறும் தண்ணீரை கூட புனித நீராக மாற்றும் துளசி நம் வாழ்வையும் அர்த்தம் மிகுந்ததாக மாற்றும்.

    • அஞ்சனையின் மைந்தனாகத் தோன்றியவன்.
    • நித்திய சிரஞ்ஜீவியாகத் திகழ்பவன்.

    மார்கழி அமாவாசை என்றாலே அனுமன் ஜெயந்தி தினம் நினைவுக்கு வரும். அஞ்சனையின் மைந்தனாகத் தோன்றியவன். ஐம்புலன்களை வென்றவன். சூரியதேவனிடம் கல்வி கற்றவன். அசாத்திய சாதனை செய்யும் ஆற்றல் படைத்தவன். ராமதூதன். நித்திய சிரஞ்ஜீவியாகத் திகழ்பவன். வரபலம் உடையவன். மார்கழி அமாவாசையில் மூலநட்சத்திரத்தில் பிறந்தவன். ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று விரதமிருந்து ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனையை நடத்தி, வடைமாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.

    கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று ஆஞ்சநேயரை வழிபட எல்லாவிதமான நலன்களும் கிடைக்கும்.

    ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்;

    "ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,

    வாயுபுத்ராய தீமஹி,

    தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத்''

    • மதுரை கோவில்களில் சரண கோஷத்துடன் அய்யப்ப பக்தர்கள் விரதம் தொடங்கினர்.
    • குருநாதர்கள் மூலம் துளசிமாலை அணிந்து கொண்டனர்.

    மதுரை

    கார்த்திகை மாதத்தில் அய்யப்பன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பார்கள். அய்யப்ப னுக்கு உகந்த மாதமான கார்த்திகை மாதத்தின் முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் திர ளான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

    மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஆனந்த அய்யப்பன் கோவில் நடை இன்று அதிகாலை திறக்கப் பட்டு அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. இதில் நூற்றுக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்களுக்கு கோவில் தலைமை குருக்கள் துளசி மாலை அணிவித்தார். மாலை அணிந்து விரதம் மேற்கொள்ள கோவிலுக்கு திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    இதேபோல் புதூரில் உள்ள அய்யப்பன் கோவி லிலும் திரளான பக்தர்கள் குவிந்து மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர். காளவாசல் அய்யப்பன் கோவில், ரெயில்வே காலனியில் உள்ள அய்யப்பன் கோவில், விளாச் சேரியில் உள்ள அய்யப்பன் கோவிலிலும் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அழகர்மலை யில் உள்ள நூபுர கங்கை தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள் பழமு திர்ச்சோ லை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து மாலை அணிந்து கொண்ட னர். திருப்பரங்குன்றம் முருகன் கோவில், நேதாஜி ரோட்டில் உள்ள தண்ட பாணி முருகன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து கொண்டனர். சிலர் குரு நாதர்கள் மூலம் தங்கள் வீடுகளிலேயே மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

    முன்னதாக நேற்று மதுரையில் உள்ள கடை வீதிகளில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் காவி, கருப்பு, நீல நிற ஆடைகள், துளசி மாலை வாங்க குவிந்தனர்.

    • திரு வலம்- வலம் வந்த விநாயகர் திரு வீழி மிழலை-படிக்காசு விநாயகர்
    • மதுரை-முக்குறுணி பிள்ளையார் திரு வலஞ்சுழி-வெள்ளை விநாயகர்

    பிள்ளையாருக்கு விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் துளசி மாலை அணிவிக்கப்படுகிறது. அது ஏன் தெரியுமா? அதற்கு ஒரு கதை கூறப்படுகிறது.

    விநாயக பெருமானை திருமணம் செய்ய வேண்டும் என்று துளசி பல்லாண்டு காலம் தவம் இருந்தாள். எப்போது என்னை மணம் முடிப்பீர்கள் என்று விநாயகரை கேட்டுக்கொண்டே இருந்தாள்.

    இதனால் கோபம் அடைந்த விநாயக பெருமான் துளசியை பார்த்து நீ ஒரு செடியாக மாறக் கடவது என்று கூறினார். இதை கேட்ட துளசி மனம் வருந்தினாள். விநாயகரை பார்த்து என்னை இப்படி சபித்து விட்டீர்களே, ஒரு நாளேனும் உங்கள் திரு மேனியை நான் தாங்கியிருக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டினாள்.

    அவளது வேண்டுகோளை விநாயகர் ஏற்றுக்கொண்டார். விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் என் திரு மேனியில் நீ தங்கி இருக்கலாம் என்று வரம் கொடுத்தார். அதன்படி விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் பூஜையின்போது விநாயகருக்கு துளசி மாலை அணிவிக்கப்படுகிறது.

    பிள்ளையார் சிறப்பு பெற்ற தலங்கள்

    எல்லா ஆலயங்களிலும் விநாயகருக்கு தனி இடம் உண்டு. ஆனாலும் பிள்ளையார் சிறப்பாக வீற்றிருக்கும் தலங்கள் பல உள்ளன. அவை வருமாறு:-

    திருவாவடு துறை-அழகிய விநாயகர்

    திருவையாறு-ஓலமிட்ட விநாயகர்

    விருத்தாசலம் ஆழத்து பிள்ளையார்

    திருச்சி - உச்சி பிள்ளையார்

    திருக்கடவூர்-கள்ள வாரண பிள்ளையார்

    திரு முருகன் பூண்டி -கூப்பிடு பிள்ளையார்

    வேதாரண்யம்-சிந்தாமணி கணபதி

    கீழ்வேளூர்-சுந்தர கணபதி

    அன்பிலாத்துறை -செவி சாய்த்த பிள்ளையார்

    திரு நள்ளாறு-சொர்ண விநாயகர்

    செங்காட்டாங்குடி-கணபதீஸ்வரர்

    திரு வலம்- வலம் வந்த விநாயகர்

    திரு வீழி மிழலை-படிக்காசு விநாயகர்.

    பாண்டிச்சேரி- மணக்குள விநாயகர்

    திரு விடை மருதூர்-படித்துறை விநாயகர்

    திருநாரையூர்-பொல்லா பிள்ளையார்

    திருவெண்ணைநல்லூர்- பொள்ளா பிள்ளையார்

    திருவாரூர்- மாற்றுரைத்த பிள்ளையார்.

    மதுரை-முக்குறுணி பிள்ளையார்

    திரு வலஞ்சுழி-வெள்ளை விநாயகர்

    பிள்ளையார் பட்டி-கற்பக விநாயகர்

    விநாகர் சதுர்த்தி கொண்டாடுவது எப்படி?

    ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினம் விநாயகரின் அவதார தினமாக அவரது பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அவர் பூலோகத்திற்கு வந்து தனது பக்தர்களை நேரடியாக காண்பார் என்பது ஐதீகம்.

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி சிலைகளை அவரவர் விருப்பத்திற்கு ஏற்றபடி முதல் நாள் மாலையோ அல்லது விநாயகர் சதுர்த்தி அன்றோ வாங்கி வர வேண்டு ம். சுடாத களி மண்ணால் ஆன விநாயகர் பொம்மைகளை வாங்கி வருவது சிறப்பு.

    ஒரு பலகையை சுத்தப்படுத்தி அதில் கோலமிட்டு அதில் பிள்ளையாரை அமர வைக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி நாளில் காலையிலே எழுந்து குளிக்க வேண்டும்.

    பஞ்சினால் செய்த மாலையை இடையிடையே சிவப்பு நிறம் இருக்குமாறு குங்குமம் தடவி தயார் செய்து வைத்துக் கொள்ளவேண்டும்.

    அருகம்புல். எருக்க மாலை போன்றவற்றை வாங்கி வைத்து கொள்ளவேண்டும். பூக்கள், அட்சதை, குங்குமம், ஆகியவைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    பிள்ளையாருக்கு கொழுக்கட்டையும் தேங்காயும் மிக முக்கியம். எனவே கொழுக்கட்டை தயார் செய்து வைத்து கொள்ளவேண்டும். கொழுக்கட்டை குறைந்த பட்சம் 21 இருக்க வேண்டும். உப்பு கொழுக்கட்டை, சுண்டல், அப்பம் ஆகியவைகளை தயார் செய்து வைத்துக்கொண்டு பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

    பூஜை தொடங்கும் முன் விநாயகர் சிலையில் குண்டு மணியை பதித்து கண் திறந்து சந்தனம், குங்குமம், திருநீறு பொட்டு இடவேண்டும். பின்னர் பூப்போட்டு எருக்கு மாலை அணிவிக்க வேண்டும். ஒரு தாம்பளத்தில் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் வைக்க வேண்டும்.

    அதோடு விளாம் பழத்தை வெல்லத்தோடு கலந்து பழ பச்சடியும் வைக்க வேண்டும்.கணேச பஞ்ச ரத்தினம், விநாயகர் அகவல் சொல்ல வேண்டும்.பின்னர் ஓம் சித்தி விநாயக நம, ஓம் ஸ்ரீமகா ஹணபதியே நம என்று சொல்லி தூப தீபங்கள் காட்டி அனைவரும் வணங்க வேண்டும்.

    எல்வோரும் வணங்கியதும் தயார் செய்து வைத்திருக்கும் கொழுக்கட்டைகளையும் இதர பலகாரங்களையும் நிவேதனம் செய்யவேண்டும் நிவேதனம் செய்யப்பட்ட பிரசாதங்களை முதலில் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இதையடுத்து பெரியவர்கள் உண்ண வேண்டும். இரவு சந்திர தரிசனம் செய்யவேண்டும். விநாயகர் சதுர்த்தியன்று இரவு சந்திரனை தரிசித்தால்தான் பூஜை முழுமை பெறும்.

    இதையடுத்து மறு நாளான பஞ்சமி அன்றோ அல்லது 2 நாட்களுக்கு பிறகோ சஸ்டி அன்று புனர் பூஜை செய்யலாம். தூப தீபம் காட்டி மந்திரம் சொல்லி வணங்கி சிறிது பால் அல்லது பாயாசம் நிவேதனம் செய்து விநாயகர் சிலையை வடக்கு பக்கமாக நகர்த்தி வைக்க வேண்டும். பின்னர் பிள்ளையார் சிலையை எடுத்து சென்று கடலிலோ அல்லது நதியிலோ குளத்திலோ கரைக்க வேண்டும்.

    • முன்னோர்கள் விஷ்ணுவின் ஆசி பெற்ற மகிழ்ச்சியில் தமது வம்சத்தினரையும் மனதார வாழ்த்துவார்கள்.
    • துளசிவாசம் பெருமாளை சந்தோஷப்படுத்தும்.

    கோயிலில் தர்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடித்த பிறகு வீட்டிற்கு திரும்பி வந்து முன்னோர்களின் படங்கள் இருந்தால் அதற்கு துளசிமாலையோ அல்லது துளசிஇலையோ சமர்ப்பிக்க வேண்டும். துளசிவாசம் பெருமாளை சந்தோஷப்படுத்தும்.

    இதனால் அந்த பித்ருக்களுக்கு விஷ்ணு பகவானின் பரிபூரண ஆசி கிடைக்கும். முன்னோர்கள் விஷ்ணுவின் ஆசி பெற்ற மகிழ்ச்சியில் தமது வம்சத்தினரையும் மனதார வாழ்த்துவார்கள். அத்துடன் முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்க வேண்டும். அந்த உணவை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும்.

    முதியவர்களுக்கு அன்னதானம் செய்வது நல்லது. அப்படி செய் வதாலும் முன்னோர்களின் ஆத்மா சாந்தியாகும்.

    முன்னோர்களின் மனவருத்தத்தை அடைந்த குடும்பத்தை இறைவனாலும் காப்பாற்ற முடியாது என்கிறது சாஸ்திரம். அதனால்தான் பகீரதன், மாபெரும் முயற்சி எடுத்து கங்கையை பூமிக்கு வரவழைத்து தம் முன்னோர்களை சாந்தப்படுத்தினான். நாமும் நம்மால் இயன்ற அளவு மகாளய அமாவாசை பூஜையும், தர்பணமும் முறையாக செய்து முன்னோர்களின் அருளாசி பெற்று சிறப்பான வாழ்வை பெறுவோம்.

    • கண்ணன் துளசி மாலை அணிந்திருப்பான்.
    • கண்ணன் நாகங்களுடன் விளையாடுபவன். ஐந்து தலை நாகத்தின் மீதேறி நடனம் ஆடியவன்.

    கண்ணன் துளசி மாலை அணிந்திருப்பான். விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு.

    கண்ணன் நாகங்களுடன் விளையாடுபவன். ஐந்து தலை நாகத்தின் மீதேறி நடனம் ஆடியவன். குளிர்ந்த மேனியன். எனவே தான், கண்ணன் துளசி மாலை அணிந்து கொள்வான்.

    வீடுகளின் பின்பக்கத்தில் துளசிமாடம் அமைப்பதும் இதனால்தான். பூச்சிகள் நுழையாமல் தடுக்க, வீட்டின் பின்புறத்தில் துளசிமாடம் வைத்து, அதனை வழிபட்டார்கள்.

    ×