search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திடீர் ஆய்வு"

    • ஆவணங்களை இணைத்து பதிவு செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • விண்ணப்பங்கள் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

    கடலூர்:

    கடலூரில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் இன்று காலை முதல் விண்ணப்பங்கள் பெறும் முகாம் நடைபெற்று வரு கின்றது. இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் பெண்கள் ஆர்வ முடன் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அரசு அறிவித்த ஆவணங்களை இணைத்து பதிவு செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் புனித வளனார் பள்ளியில் நடைபெற்று வரும் விண்ணப்பங்கள் பெறும் முகாமை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் சென்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது விண்ணப்பங்கள் சரியான முறையில் பெறப் பட்டு பதிவு செய்யப்படு கிறதா? என்பதை பார்வை யிட்டு பொதுமக்களிடம் பணிகள் குறித்து கேட்ட றிந்தார்.

    மேலும் அரசு நிபந்தனைக் குட்பட்டு விண்ணப்பங்கள் அளிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும் பதிவு செய்து இத்திட்டம் மூலம் பயனடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் யாரும் விடுபடாமல் சரியான முறையில் விண்ணப்பங்கள் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர்கள் சங்கீதா செந்தில் முருகன், சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் அருள்பாபு, பார்வதி, சுபாஷிணி ராஜா, சுதா அரங்கநாதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
    • வழக்குகள் குறித்த விவரங்களை கேட்டறிந்ததோடு, அதனை விரைந்து முடிக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கிருந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்களை கேட்டறிந்ததோடு, அதனை விரைந்து முடிக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் போலீஸ் நிலையத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்- இன்ஸ்பெக்டர் ந ரசிம்மஜோதி மற்றும் ேபாலீசார் உடன் இருந்தனர்.

    • காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் திடீரென்று நேற்றிரவு அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
    • கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை கட்டுக்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் உட்கோட்டத்தில் அரூர் கோட்டப்பட்டி, மொரப்பூர், கம்மைநல்லூர், பள்ளிப்பட்டி, கோபி நாதம்பட்டி, பாப்பி ரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், மொரப்பூர் உள்ளிட்ட காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அரூர் காவல் நிலையத்தில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் திடீரென்று நேற்றிரவு அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

    காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகளில் தன்மை குறித்தும், அரூர் காவல் ஆய்வாளர் பாஸ்கர பாபுவிடம் கேட்டறிந்தார்.

    அதன்பிறகு அரூர் கோட்டத்தில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை கட்டுக்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    அரூர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் வாதி, பிரதிவாதிகளிடம் புகா ர்களை பெற்றுக்கொண்டு சரியான முறையில் அவர்க ளுக்கு உரிய மரியாதைகள் கொடுத்து முறையாக விசா ரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    ஆய்வின்போது தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் முருகன் உடன் இருந்தார்.

    • குப்பிச்சிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கூடுதல் கலெக்டர் நரேன்வீர் மணீஸ் சங்கராவ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆய்வில் ஊராட்சிகளில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டார்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், குப்பிச்சிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கூடுதல் கலெக்டர் நரேன்வீர் மணீஸ் சங்கராவ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் ஊராட்சிகளில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டார்.

    அப்போது ஊராட்சி மன்ற அலுவலம் அருகே நடந்த வேளாண்மை துறையின் விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதை பார்வையிட்டு அங்கு திரண்டு இருந்த விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.

    அங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வந்திருந்த விவசாயி எடக்காடு தங்கமுத்து என்பவர் கூடுதல் கலெக்டர் நரேன்வீர் மணீஸ் சங்கராவிடம் எனது மகன் இளையராஜா கூடுதல் கலெக்டராக மத்திய பிரதேசத்தில் பணியாற்றி வருவதாக கூறினார்.

    அதைத்தொடந்து தங்கமுத்துவிற்கு கூடுதல் கலெக்டர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து அவரின் வீட்டிற்கும் சென்றார். அங்கு சென்று இளையராஜாவிடம் போனில் பேசி நலம் விசாரித்தார். அதன் பின்பு தனிநபர் கழிப்பிடங்கள் கட்டும் பணி உள்பட குப்பிச்சிபாளையம் ஊராட்சியில் ஆய்வு பணியினை செய்தார்.

    முன்னதாக குப்பிச்சிபாளையம் ஊராட்சி தலைவர் பொன்னுசாமி வரவேற்றார். ஆய்வின் போது செயல் அலுவலர்கள் குணசேகரன், பாஸ்கர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அனைத்து பஞ்சாயத்துகளிலும் நடந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
    • பணி காலத்தில் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகள் குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும்,

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 30 பஞ்சாயத்துகள் உள்ளது.

    கடந்த ஆட்சியில் பல்வேறு பஞ்சாயத்துகளில் வரவு செலவு உட்பட பல்வேறு நிகழ்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

    குறிப்பாக தனி அலுவலர் காலத்தில் பஞ்சாயத்துகளில் நடந்த வரவு செலவு கணக்கு மற்றும் பதிவேடுகள் ரசீதுகள் ஆகியவற்றை தணிக்கை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்ற னர்.

    முதல் கட்டமாக 10 பஞ்சாயத்துகளில் நடந்த வரவு செலவு கணக்கு பில் புத்தகங்கள் ரசீதுகள் ஆகியவற்றை சரிபார்த்தனர்.

    நேற்று 20 பஞ்சாயத்துகளில் வரவு செலவு கணக்கு புத்தகம் பதிவேடுகள் ரசீது புத்தகங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

    மேலும் அனைத்து பஞ்சாயத்துகளிலும் நடந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

    2017 முதல்2020 ஆம் ஆண்டு வரை காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தனி அலுவலராகவும் பி டி ஓ (திட்டம்) ஆக பணிபுரிந்த வர் வடிவேலன் என்பவர் வீட்டில் கடந்த ஆண்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    முன்னாள் கலெக்டர் கலெக்டர் மலர்விழி ஆதரவாளராக செயல்பட்ட வடிவேலன், பணி காலத்தில் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகள் குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • சேலம் ஜங்சன், டவுன் ரெயில் நிலையங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • அப்போது ஒரு ஓட்டலில் 15 வயதுக்கு மேல் 18 வயக்குட்பட்ட ஒரு வளரின பருவத்தினர் பணிபுரிவது கண்டபிடிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தலைமை யில் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் நேற்று சேலம் ஜங்சன், டவுன் ரெயில் நிலையங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது ஒரு ஓட்டலில் 15 வயதுக்கு மேல் 18 வயக்குட்பட்ட ஒரு வளரின பருவத்தினர் பணிபுரிவது கண்டபிடிக்கப்பட்டது. அந்த வளரின பருவத் தினரை அதிகாரிகள் மீட்டு குழந்தை தொழிலாளர் நலக்குழுவிடம் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து உதவி ஆணையர் கிருஷ்ணவேணி கூறும் போது, 14 வயதுக் குட்பட்ட குழந்தைகளை எந்த ஒரு நிறுவனத்திலும் பணியமர்த்த கூடாது என்றும், 15 முதல் 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினர்களை அபாயகரமான எந்த ஒரு பணியிலும் அமர்த்துவதும் குற்றமாகும். மீறி பணியில் அமர்த்தும் நிறுவனங்களின் உரிமையாளருக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் முதம் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப் படும் என்றார்.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் ரேஷன் கடைகள், நுகர்வோர் வாணிப கழக கிடங்குகள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    அதன்படி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி பெருந்துறையில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் திடீர் ஆய்வு செய்தார்.

    அப்போது ரேஷன் கடைகளுக்கு லாரிகள் மூலமாக அனுப்பி வைக்கப்படும் ரேஷன் அரிசி சரியான அளவில் கொண்டு செல்லப்படுகிறதா? என்று அவர் பார்வையிட்டார்.

    மேலும் தண்ணீர்பந்தல், மயிலாடி ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் ரேஷன் அரிசி மூட்டைகள் இறக்கி வைக்கப்பட்டதையும் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி ஆய்வு செய்தார். அப்போது ரேஷன் அரிசி மூட்டைகளை எடை போட்டு அவர் சரிபார்த்தார்.

    இந்த ஆய்வின்போது போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

    • கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார்
    • செவிலியர், சுகாதாரஆய்வாளர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணியில் இருப்பார்கள்.

     கள்ளக்குறிச்சி:

    மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் தலாரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் 500 நகர்புற நல வாழ்வு மையங்களை தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன்படி கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட விளாந்தங்கல் சாலையில் நகர்ப்புற நல வாழ்வு மையத்தினை சென்னை தலைமை ச்செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து குத்துவிளக்கை ஏற்றி வைத்து நகர்ப்புற நல வாழ்வு மையத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். மேலும் பொது மக்களுக்கு வழங்க ப்படும் மருத்துவ சேவையை பார்வையிட்டனர். இதுகுறித்து மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில்,இந்த நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் ஒரு மருத்துவ அலுவலர், செவிலியர், சுகாதாரஆய்வாளர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணியில் இருப்பார்கள்.

    இந்த மையத்தில்கர்ப்ப கால மற்றும் பிரசவ கால சேவைகள், சிசு மற்றும் குழந்தைகள் நல சேவைகள், குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்திற்கான சேவைகள், குடும்ப நலம், கருத்தடை, பேறுகால சேவைகள், தேசியசுகாதார திட்டங்களின் பொதுவான தொற்று நோய்களுக்கான சிகிச்சைகள், வெளிநோயாளிகளுக்கான சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளும் 63 ஆய்வக பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது என்றார். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள்,கள்ளக்குறிச்சி நகர்மன்ற தலைவர் சுப்பராயலு, துணை இயக்குநர் சுகாதார பணிகள் ராஜா, கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையாளர் குமரன், தியாகதுருகம் ஒன்றிய குழுதலைவர் தாமோதிரன், சின்னசேலம் ஒன்றிய குழு தலைவர் சத்தியமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள், டாக்டர்கள், அரசு அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை நகர்புற நல வாழ்வு மையத்திற்கு வந்தார். அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். தரமான சிகிச்சை அளிக்கும் படி டாக்டர்கள், நர்சுகளுக்கு அறிவுறுத்தினர். அப்போது கலெக்டர் ஷ்ரவன் குமார், உதய சூரியன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பொருட்களை ஆய்வுக்குழுவினர் நேரடியாக ஆய்வு செய்தனர்.
    • விவசாயிகளுக்கு மா கன்றுகள், பேட்டரி தெளிப்பான் 8 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், தளி மற்றும் வேப்பனபள்ளி ஆகிய வட்டாரங்களில் பிரதம மந்திரி விவசாய நீர்பாசனத் திட்டம் 52 நீர்வடிப்பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சென்னை அலுவலகத்திலிருந்து சிறப்பு ஆய்வுக்குழுவாக வேளாண்மை துணை இயக்குநர் பூங்கோதை, வேளாண் உதவி இயக்குநர் மணமல்லி, கணக்கு அலுவலர் பிரகாஷ் ஆகியோர் அடங்கிய குழு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது வேளாண்மை உதவி இயக்குநர் சகாயராணி, உதவி பொறியாளர் புஷ்பநாதன் ஆகியோர் கொட்டாவூர் நீர்வடிப்பகுதியில் நுழைவுக் கட்டப்பணிகளான உலர்களம் அமைப்பு இயற்கைவள மேம்பாட்டுப் பணிகளான தடுப்பணை, கசிவுநீர் குட்டை, பண்ணை உற்பத்தி திட்டத்தில் விவசாயிகளுக்கு மா கன்றுகள், பேட்டரி தெளிப்பான் 8 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. விசைத் தெளிப்பான் 4 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

    தீவனப்புல் வெட்டும் இயந்திரம் 2 பயனாளிகளுக்கும், தையல் எந்திரம் 15 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டது.

    மேலும், வாழ்வாதார மேம்பாட்டு பணிகளான சுழல் நிதி 5 குழுவிற்கு விநியோகம் செய்யப்பட்டது.

    மேலும், 4 பயனாளிகளுக்கு சலவை பெட்டி, 2 பயனாளிகளுக்கு மாவு அரைக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது. பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பொருட்களை ஆய்வுக்குழுவினர் நேரடியாக ஆய்வு செய்தனர்.

    மேலும், கொட்டாவூர் நீர்வடிப்பகுதி தலைவரும், ஊராட்சி மன்றத் தலைவருமான மதிவாணன், குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களிடம் அந்த நீர்வடிப்பகுதியில் உள்ள மக்களுக்கு என்னென்ன தேவைகள் வேண்டும் என்று கொட்டாவூர் நீர்வடிப்பகுதி சிறப்பு குழுக் கூட்டம் நடத்தி வேளாண்மை துணை இயக்குநர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் ஆகியோர் நேரடியாக கேட்டறிந்து சிறப்புக்குழுவால் ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும், வேப்பனஹள்ளி நீர்வடிப்பகுதியில் பொம்மரசனப்பள்ளி நீர்வடிப்பகுதியில் அம்ரித் சரோவர் பணி (அம்ரித் குளம்) கசிவுநீர் குட்டை ஆய்வு செய்தனர். அப்போது நீர்வடிப்பகுதி அணி உறுப்பினர்கள் பரமானந்தம், பிரபு, சுப்பிரமணி, இனியம், தவ்லத்பாஷா மற்றும் தமிழரசி ஆகியோர் உடனிருந்தனர்.

    • சக்தி நகர், ராகவேந்திரா காலனி உள்ளிட்ட பகுதிகளில் மாநகர மேயர் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • சாக்கடை கால்வாய், சாலை, குடிநீர் வசதிகள் ஒவ்வொரு பகுதியாக செய்து முடிக்கப்படும் என உறுதியளித்தார்

    கிருஷ்ணகிரி,

    ஒசூர் மாநகராட்சி, 7,8 வது வார்டுக்குட்பட்ட மூவேந்தர் நகர், ஆவலப்பள்ளி அட்கோ, ஜெ.ஜெ.,நகர், ரெயின்போ கார்டன், சக்தி நகர், ராகவேந்திரா காலனி உள்ளிட்ட பகுதிகளில் மாநகர மேயர் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அப்பகுதி மக்களின் சாக்கடை கால்வாய், குடிநீர், சாலை உள்ளிட்ட குறைகளை கேட்டறிந்து, அவற்றை மனுக்களாக பெற்றுக்கொண்டார்.ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருவிளக்கு பிரச்னைகள் உடனடியாக தீர்க்கப்படும் என உறுதியளித்த அவர், சாக்கடை கால்வாய், சாலை, குடிநீர் வசதிகள் ஒவ்வொரு பகுதியாக செய்து முடிக்கப்படும் என உறுதியளித்தார். இந்த ஆய்வின்போது, துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல தலைவர் ரவி, 8-வது வார்டு உறுப்பினர் சீனிவாசலு உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • பவானி பகுதியில் உள்ள குடிநீர் ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • வாகனங்களில் குடிநீர் கேன்களை எடுத்து செல்லும் போது தார்ப்பாய் போட்டு மூடி எடுத்து செல்ல அறிவுரை வழங்கப்பட்டது.

    பவானி:

    ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் தலைமையில் பவானி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் லட்சுமி, ஈரோடு நகர உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வன் மற்றும் அருண்குமார், மொடக்குறிச்சி உணவு பாதுகாப்பு அலுவலர் எட்டிகன் ஆகியோர் பவானி பகுதியில் உள்ள குடிநீர் ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது குடிநீர் தொழிற்சாலைகளில் தண்ணீர் முறையாக சுத்திகரிக்கப்படுகிறதா? எனவும், பிளாஸ்டிக் பாட்டில்களில் முறையாக தண்ணீர் அடைக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

    மேலும் 20 லிட்டர் கேன்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பழுதடைந்த, நாள் பட்ட கேன்களை பயன்படுத்த கூடாது என்றும், கேன்களின் மீது லேபிள் பயன்படுத்தப்படும் காலம் போன்றவை ஒட்ட வேண்டும் என்றும், ஆலையில் வேலையில் உள்ள பணியாளர்கள் தலையில் கேப்பும், கையுரையும் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் எனவும், பணியாளர்களுக்கு மருத்துவ சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

    அதேபோல் 20 லிட்டர் கேன்கள் ஒரு மாத இடைவெளியும், ஒரு லிட்டர் மற்றும் 2 லிட்டர் வாட்டர் பாட்டில் 6 மாத இடைவெளி காலம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    வாகனங்களில் குடிநீர் கேன்களை எடுத்து செல்லும் போது தார்ப்பாய் போட்டு மூடி எடுத்து செல்ல வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

    5 நிறுவனங்களில் 3 உணவு மாதிரி சேகரிக்கப்பட்டு பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பகுப்பாய்வு அறிக்கையின் முடிவின் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி தெரிவித்தார்.

    மேலும் குடிநீர் சம்பந்தமாக பொதுமக்கள் ஏதேனும் புகார் தெரிவிக்க வேண்டுமென்றால் உணவு பாதுகாப்புத்துறை வாட்ஸ்அப் எண் 944042322 என்ற எண்ணுக்கு அழைக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • 6 பாட்டில்கள் மற்றும் உரிய தேதி அச்சிடாத 20 லிட்டர் குடிநீர் கேன்கள் பத்தும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
    • அதிக வெயில்ப்பட்ட நிலையில் குளிர் பானங்கள் விநியோகம் செய்த விற்பனையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் உடன் அபராதம் ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானு சுஜாதா, உத்தரவின் பேரில் பாலக்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், பாலக்கோடு பஸ் நிலையம், எம்.ஜி. ரோடு, ஓசூர் மெயின் ரோடு, தக்காளி மார்க்கெட், பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளிர்பான மொத்த விற்பனை நிலையங்கள், சிறு விற்பனை நிலையங்கள், பழரச விற்பனை நிலையங்கள் மற்றும் நடைபாதை குளிர்பான கடைகள், மாம்பழம் குடோன்களை திடீர் ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்கள், குளிர்பானங்களில் உரிய தயாரிப்பு தேதி, முடிவு தேதி மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் உள்ளனவா என ஆய்வு செய்தார்.

    மேலும் குளிர்பானங்கள், குடிநீர் கேன்கள், குடிநீர் பாட்டல்கள்நேரடியான வெயில் படாமல் விற்பனை செய்யவும், வண்டிகளில் சப்ளை செய்வோர் உரிய பாதுகாப்பான கூடாரமிட்ட அல்லது தார்பாய்கள் போர்த்தப்பட்ட வண்டிகளில் வெயில் படாமல் சப்ளை செய்ய விழிப்புணர்வு செய்தனர்.

    இந்த ஆய்வின் போது இரண்டு கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் 2 லிட்டர் கொள்ளளவுள்ள 6 பாட்டில்கள் மற்றும் உரிய தேதி அச்சிடாத 20 லிட்டர் குடிநீர் கேன்கள் பத்தும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேற்படி கடை உரிமையாளர்களுக்கு தலா ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் திறந்த நிலையில் அதிக வெயில்ப்பட்ட நிலையில் குளிர் பானங்கள் விநியோகம் செய்த விற்பனையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் உடன் அபராதம் ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டது.

    மாம்பழ சீசன் துவங்கியுள்ள நிலையில் மாம்பழ வியாபாரிகள், விற்பனையாளர்கள் காய்கள் சீக்கிரம் விற்பதற்காக காய்களை பழுக்க வைக்க செயற்கையான முறையில் கார்பைட் கற்களையோ, ரசாயன வேதிப்பொருளையும் உபயோகப்படுத்த கூடாது என எச்சரிக்கப்பட்டது.

    தவறுகள் கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு சட்ட விதிகள்படி நடவடிக்கை மேற்கொள்ளும் அபராதமும் விதிக்கப்படும் எனவும் மாவட்ட நியமன அலுவலர் எச்சரிக்கை செய்தார்.

    ×