என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூரில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கடலூரில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்கள் பதிவு: மேயர் சுந்தரி ராஜா திடீர் ஆய்வு
- ஆவணங்களை இணைத்து பதிவு செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- விண்ணப்பங்கள் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
கடலூர்:
கடலூரில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் இன்று காலை முதல் விண்ணப்பங்கள் பெறும் முகாம் நடைபெற்று வரு கின்றது. இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் பெண்கள் ஆர்வ முடன் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அரசு அறிவித்த ஆவணங்களை இணைத்து பதிவு செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் புனித வளனார் பள்ளியில் நடைபெற்று வரும் விண்ணப்பங்கள் பெறும் முகாமை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் சென்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது விண்ணப்பங்கள் சரியான முறையில் பெறப் பட்டு பதிவு செய்யப்படு கிறதா? என்பதை பார்வை யிட்டு பொதுமக்களிடம் பணிகள் குறித்து கேட்ட றிந்தார்.
மேலும் அரசு நிபந்தனைக் குட்பட்டு விண்ணப்பங்கள் அளிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும் பதிவு செய்து இத்திட்டம் மூலம் பயனடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் யாரும் விடுபடாமல் சரியான முறையில் விண்ணப்பங்கள் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர்கள் சங்கீதா செந்தில் முருகன், சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் அருள்பாபு, பார்வதி, சுபாஷிணி ராஜா, சுதா அரங்கநாதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.






