search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலக்கோட்டில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு
    X

    அதிகாரிகள் குளிர்பானங்களை வெயில் படாமல் வண்டிகளில் சப்ளை செய்ய விழிப்புணர்வு செய்தனர்.

    பாலக்கோட்டில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு

    • 6 பாட்டில்கள் மற்றும் உரிய தேதி அச்சிடாத 20 லிட்டர் குடிநீர் கேன்கள் பத்தும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
    • அதிக வெயில்ப்பட்ட நிலையில் குளிர் பானங்கள் விநியோகம் செய்த விற்பனையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் உடன் அபராதம் ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானு சுஜாதா, உத்தரவின் பேரில் பாலக்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், பாலக்கோடு பஸ் நிலையம், எம்.ஜி. ரோடு, ஓசூர் மெயின் ரோடு, தக்காளி மார்க்கெட், பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளிர்பான மொத்த விற்பனை நிலையங்கள், சிறு விற்பனை நிலையங்கள், பழரச விற்பனை நிலையங்கள் மற்றும் நடைபாதை குளிர்பான கடைகள், மாம்பழம் குடோன்களை திடீர் ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்கள், குளிர்பானங்களில் உரிய தயாரிப்பு தேதி, முடிவு தேதி மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் உள்ளனவா என ஆய்வு செய்தார்.

    மேலும் குளிர்பானங்கள், குடிநீர் கேன்கள், குடிநீர் பாட்டல்கள்நேரடியான வெயில் படாமல் விற்பனை செய்யவும், வண்டிகளில் சப்ளை செய்வோர் உரிய பாதுகாப்பான கூடாரமிட்ட அல்லது தார்பாய்கள் போர்த்தப்பட்ட வண்டிகளில் வெயில் படாமல் சப்ளை செய்ய விழிப்புணர்வு செய்தனர்.

    இந்த ஆய்வின் போது இரண்டு கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் 2 லிட்டர் கொள்ளளவுள்ள 6 பாட்டில்கள் மற்றும் உரிய தேதி அச்சிடாத 20 லிட்டர் குடிநீர் கேன்கள் பத்தும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேற்படி கடை உரிமையாளர்களுக்கு தலா ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் திறந்த நிலையில் அதிக வெயில்ப்பட்ட நிலையில் குளிர் பானங்கள் விநியோகம் செய்த விற்பனையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் உடன் அபராதம் ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டது.

    மாம்பழ சீசன் துவங்கியுள்ள நிலையில் மாம்பழ வியாபாரிகள், விற்பனையாளர்கள் காய்கள் சீக்கிரம் விற்பதற்காக காய்களை பழுக்க வைக்க செயற்கையான முறையில் கார்பைட் கற்களையோ, ரசாயன வேதிப்பொருளையும் உபயோகப்படுத்த கூடாது என எச்சரிக்கப்பட்டது.

    தவறுகள் கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு சட்ட விதிகள்படி நடவடிக்கை மேற்கொள்ளும் அபராதமும் விதிக்கப்படும் எனவும் மாவட்ட நியமன அலுவலர் எச்சரிக்கை செய்தார்.

    Next Story
    ×