search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாராபுரம்"

    • 4வது வார்டு பகுதியில் சுமார் 2500க்கும் மேற்பட்டோர்கள் குடியிருந்து வருகின்றனர்.
    • குடிநீர் தேவையை இரண்டொரு நாள்களில் பூர்த்தி செய்கிறோம் என்று கூறியதால் கலைந்து சென்றனர்.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 4வது வார்டு பகுதியில் சுமார் 2500க்கும் மேற்பட்டோர்கள் குடியிருந்து வருகின்றனர்.

    இந்தப் பகுதியானது தினசரி கூலிக்கு செல்லும் ஏழை தொழிலாளர்கள் பகுதியாகும், இங்குள்ள மக்கள் தினமும் காலை வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் மாலை ஆறு மணி அளவில் இல்லத்திற்கு வருவது வழக்கம். இந்த நிலையில் பொதுமக்கள் ஒரு மாத காலமாக குடிநீர் வரவில்லை என்று பூளவாடி பிரிவு பைபாஸ் செல்லும் பகுதியில் இன்று காலையில் 10 மணி அளிவில் காலி குடங்களை வைத்துக்கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அதை அறிந்து நகராட்சி நிர்வாகிகளும் காவல்துறையும் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் தேவையை இரண்டொரு நாள்களில் பூர்த்தி செய்கிறோம் என்று கூறியதால் கலைந்து சென்றனர்.

    இதனால் காலை நேரம் என்பதால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அனைவரும் சிரமத்துக்கு உள்ளானார்கள். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது 

    • 16 வகையான அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றது.
    • அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாக திருவிழா இன்று நடைபெற்றது.

    தாராபுரம்:

    தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாக திருவிழா இன்று நடைபெற்றது. தாராபுரத்தில் பழைய காவல் நிலைய வீதியில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இன்று வைகாசி திருவிழா நடைபெற்றது .

    நிகழ்ச்சிக்கு முன்பாக மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் 500 லிட்டர் பாலினை தாராபுரம் அமராவதி ஆற்றில் இருந்து தலையில் சுமந்து சோலை கடைவீதி, மாரியம்மன் கோவில் வழியாக பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலை வந்தடைந்தனர். பின்னர் பாலாபிஷேகம் உட்பட 16 வகையான அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்று சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    • மயானத்தை சுற்றியுள்ள நபா்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
    • வீடுகளை அகற்றக்கோரி 50க்கும் மேற்பட்டோா் தாராபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனா்.

    தாராபுரம்,

    திருப்பூா் மாவட்டம், தாராபுரம் மேற்கு தெருவில் ஆதிதிராவிடா்கள் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் வசித்து வரும் பகுதியில் இருந்து சற்று தொலைவில் மயானம் உள்ளது. இந்த மயானத்தை ஆதிதிராவிட மக்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருகின்றனா். இந்த மயானத்துக்கு செல்லும் பாதை மற்றும் மயானத்துக்கு சொந்தமான நிலத்தை தனிநபா்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    மேலும் இறந்த உடல்களை மயானத்துக்கு எடுத்து சென்று அடக்கம் செய்யமுடியாமல் பாதையை மறித்து மயானத்தை சுற்றியுள்ள நபா்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

    இந்நிலையில், மயானத்துக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதை வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்தனா். இந்த கோரிக்கையை ஏற்று வருவாய்த் துறை அதிகாரிகள் மயானம் மற்றும் அதற்கான பாதையை அளவீடு செய்து எல்லை கற்களை கடந்த மாா்ச் 21-ந்தேதி நட்டுச் சென்றனா். இருப்பினும் அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    இந்நிலையில் மயானத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றக்கோரி 50க்கும் மேற்பட்டோா் தாராபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனா். ஆனால் அலுவலகத்தில் வட்டாட்சியா் ஜலஜா இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அலுவலக நுழைவாயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து ஒரு மணி நேரம் கழித்து வந்த வட்டாட்சியா் ஜலஜா, பொதுமக்களிடம் இருந்து மனுவை பெற்றாா். மயானப் பகுதியை நேரில் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

    தாராபுரம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் ரூ.5லட்சம் மதிப்புள்ள 90 கிலோ குட்கா, புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதைபொருட்களான பான்பராக், குட்கா, புகையிலை பொருட்களின் புழக்கம் அதிகரித்து இருப்பதாகவும், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை போதைக்கு அடிமையாகி வருவதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    அதனை தடுக்க போலீ சார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். அப்போது தாராபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்திய போது புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து ரகசியமாக விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

    இதையடுத்து தாராபுரம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் ரூ.5லட்சம் மதிப்புள்ள 90 கிலோ குட்கா, புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். 

    மேலும் அதனை பதுக்கி வைத்து விற்ற தாராபுரத்தை சேர்ந்த ஷேக் (வயது 33), ஜாபர் அலி(23), பழனி சாலை ஒட்டன்சத்திரம் பிரிவு அருகே டீ ஸ்டால் நடத்திவரும் துரைசாமி (40), அன்வர் (39), அபுபக்கர் சித்திக் (31) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். 

    மேலும் தாராபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பாபு முன்னிலையில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடை த்தனர்.
    முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்யவுள்ளனர்.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள மகாராணி கலை, அறிவியல் கல்லூரியில் வருகிற 30-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர்  எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

    திருப்பூர்மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மகளிர்திட்டம் ஆகியன இணைந்து தாராபுரத்தில் உள்ள மகாராணி கலை அறிவியல் கல்லூரியில் வருகிற 30-ந்தேதி  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. 

    இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்யவுள்ளனர். 

    இதில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் 10-ம் வகுப்பு, பிளஸ்- 2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டய படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ. தொழிற் பயிற்சி முடித்தவர்கள், செவிலியர், பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள், கணினி ஆபரேட்டர்கள், ஓட்டுநர்கள், தையல் கலைஞர்கள் என அனைத்து விதமான தகுதியாளர்களும் பங்கேற்கலாம்.

    இந்த முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்க இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதே வேளையில் வேலை தேடும் நபர்களும் இந்த இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். 

    இந்த முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மகளிர் திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்புகளுக்கான பதிவுகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கிக்கடன் குறித்த வழிகாட்டுதலுக்கான ஆலோசனைகளும் வழங்கப்படும்.

    இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 0421-2999152, 94990-55944 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ஊராட்சி மன்ற தலைவரை அழைக்காமல் பூமிபூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிகிறது.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கொழுமங்குழி ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகிப்பவர் பிரியா. இவர் பட்டியல் இன சமுதாயத்தை சேர்ந்தவர். 

    இந்தநிலையில் நேற்று திருப்பூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கொழுமங்குழி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதனை கொண்டாடும் விதமாகவும் பூமிபூஜைக்கும் கொழுமங்குழியில் தி.மு.க.வினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    இந்நிகழ்ச்சியின் போது ஊராட்சி மன்ற தலைவரை அழைக்காமல் பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    இதையடுத்து போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.  
    பெட்ரோல் டீசலுக்கு ஏற்றிய வரியை குறைக்க வேண்டும் என கோஷமிட்டனர்.
    தாராபுரம்:

    தாராபுரத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கோரி தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுந்தராபுரம் அண்ணா சிலை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணி, இளைஞர் அணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  

    மத்திய அரசு பெட்ரோலுக்கு குறைந்த வரியை விதித்து வரும் நிலையில் தமிழக அரசு பெட்ரோல் டீசலுக்கு அதிக வரியை விதித்து ஏற்றி உள்ளது. எனவே உடனடியாக பெட்ரோல் டீசலுக்கு ஏற்றிய வரியை குறைக்க வேண்டும் என கோஷமிட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ருத்திரகுமார், மாவட்ட துணைத்தலைவர் சுகுமார், மாவட்ட பொருளாளர் கொங்கு ரமேஷ், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் லோகேஸ்வரன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    சகானா கூலி வேலை செய்து குழந்தைகளை படிக்க வைத்து வந்தார்.
    தாராபுரம்:

    தாராபுரத்தை அடுத்த அலங்கியம் ஜே.ஜே. நகர் பகுதியை சேர்ந்தவர் சகானா (வயது 35) . இவரது கணவர் நசிருதீன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இந்த நிலையில் சகானா கூலி வேலை செய்து குழந்தைகளை படிக்க வைத்து வந்தார். இந்த நிலையில் நேற்று மகனும் மகளும் பள்ளிக்கு சென்ற நிலையில் வீட்டில் உள்ள கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து தகவல் அறிந்ததும்  அலங்கியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

    பின்னர் சகானா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கணவனை இழந்ததால் விரக்தியில் சகானா தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. 

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 
    வாலிபர் தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாராபுரம்:

    தாராபுரம் அடுத்த வரப்பாளையத்தில் வள்ளிம்மாள் என்பவரின் தோட்டத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் வேப்பமரத்தில் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதாக தாராபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

    தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இதுகுறித்து தாராபுரம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபர் தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.  
    பனியன் நிறுவன உரிமையாளர் அந்தப் பகுதியில் சமுதாய கூடம் கட்டி கொடுத்துள்ளதுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார்.
    தாராபுரம்:

    தாராபுரத்தை அடுத்த பொன்னிவாடி அருகே எல்லபாளையத்தில் புனரமைக்கப்பட்ட பால விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பொதுமக்கள் மற்றும் பனியன் நிறுவன உரிமையாளர் உட்பட பலரும் செய்திருந்தனர்.

    இந்த நிலையில் எல்லபாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ் ( வயது 38) என்பவர் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது பொதுமக்கள் மற்றும் தனியார் பனியன் கம்பெனி நிறுவன உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

    மேலும் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை கிழித்து எறிந்தாராம். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பனியன் நிறுவன உரிமையாளர் அந்தப் பகுதியில் சமுதாய கூடம் கட்டி கொடுத்துள்ளதுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார் . 

    இதனால் சமுதாய கூடத்தை இடிப்பதுடன், மரக்கன்றுகளை பிடுங்கி எறிவேன் என மோகன்ராஜ் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனை கண்டித்து ஊர் பொதுமக்கள் மூலனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து மூலனூர் இன்ஸ்பெக்டர் செல்வம், மோகன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவர்கள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் திரண்டனர்.
    தாராபுரம்:

    கோவையில் ஆசிரியர் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருப்பூர் சிக்கண்ணாஅரசு கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர். 

    இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவர்கள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் திரண்டனர். பின்னர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    அப்போது கோவை பள்ளி மாணவி தற்கொலைக்கான காரணமான ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து கோஷம்  எழுப்பினர், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

    இதேப்போல் - தாராபுரம் பேருந்து நிலையம் அருகே இன்று காலை கல்லூரி மாணவர்கள் ஒன்றுகூடினர். அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்திய போது, கோவை பள்ளி மாணவி தூக்கிட்டு இறந்ததற்கு நீதி கேட்டு போராட வந்துள்ளோம் என கூறியதை அடுத்து போலீசார் தாராபுரம் அண்ணா சிலை அருகே சென்று ஆர்ப்பாட்டம் செய்யுமாறு தெரிவித்தனர். 

    அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 200க்கும் மேற்பட்டோர் அண்ணா சிலை முன்பு கூடி பதாகை ஏந்தி தூக்கிலிட்டு இறந்த மாணவியின் சாவுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். இதில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் ,  

    பள்ளி செல்லும் மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் பாதுகாப்புக்காக என தனி சட்டம் கொண்டு வர வேண்டும். மாணவி சாவில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்தி உடனடியாக தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என மாணவர்கள் கோஷமிட்டனர்.  

    தாராபுரம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் விஜயபாஸ்கர், செல்லையா ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
    மத்திய அரசு மானியம் பெற விவசாயிகளை ஊக்குவிப்பது, பால் ஒரு லிட்டருக்கு 50 ரூபாய், கொப்பரைக்கு 150 ரூபாய் வழங்க வேண்டும்.
    தாராபுரம்:

    தாராபுரத்தில் பாரதிய கிசான் சங்க (பி.கே.எஸ்.) கூட்டம் மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கேட்பது, ரேஷன் கடையில் தேங்காய் எண்ணை, கடலை எண்ணை, நல்லெண்ணெய் வழங்க வேண்டும். 

    மத்திய அரசு மானியம் பெற விவசாயிகளை ஊக்குவிப்பது, பால் ஒரு லிட்டருக்கு 50 ரூபாய், கொப்பரைக்கு 150 ரூபாய் வழங்க வேண்டும். கிராமம் தோறும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆரம்பிக்க ஊக்குவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
    ×