search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாராபுரத்தில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் திடீர் சாலை மறியல்
    X

    சாலைமறியலில் ஈடுபட்ட பெண்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

    தாராபுரத்தில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் திடீர் சாலை மறியல்

    • 4வது வார்டு பகுதியில் சுமார் 2500க்கும் மேற்பட்டோர்கள் குடியிருந்து வருகின்றனர்.
    • குடிநீர் தேவையை இரண்டொரு நாள்களில் பூர்த்தி செய்கிறோம் என்று கூறியதால் கலைந்து சென்றனர்.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 4வது வார்டு பகுதியில் சுமார் 2500க்கும் மேற்பட்டோர்கள் குடியிருந்து வருகின்றனர்.

    இந்தப் பகுதியானது தினசரி கூலிக்கு செல்லும் ஏழை தொழிலாளர்கள் பகுதியாகும், இங்குள்ள மக்கள் தினமும் காலை வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் மாலை ஆறு மணி அளவில் இல்லத்திற்கு வருவது வழக்கம். இந்த நிலையில் பொதுமக்கள் ஒரு மாத காலமாக குடிநீர் வரவில்லை என்று பூளவாடி பிரிவு பைபாஸ் செல்லும் பகுதியில் இன்று காலையில் 10 மணி அளிவில் காலி குடங்களை வைத்துக்கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அதை அறிந்து நகராட்சி நிர்வாகிகளும் காவல்துறையும் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் தேவையை இரண்டொரு நாள்களில் பூர்த்தி செய்கிறோம் என்று கூறியதால் கலைந்து சென்றனர்.

    இதனால் காலை நேரம் என்பதால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அனைவரும் சிரமத்துக்கு உள்ளானார்கள். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    Next Story
    ×