search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமறைவு"

    • முன் விரோதம் காரணமாக தாக்குதல்
    • ண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி யுள்ள காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள கண்ணாட்டுவிளையைச் சேர்ந்தவர் ராஜன் (வயது37). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜென்சிமலர் (35). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பிரபுராஜ் (38). கான்ட்ராக்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கிரிஜா (35). இவர் இரணியல் பேரூராட்சியில் 4-வது வார்டு பாரதிய ஜனதா கவுன்சிலராக இருந்து வருகிறார்.

    ஜென்சிமலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரணியல் பேரூராட்சியில் வீட்டு குடிநீர் இணைப்பு வேண்டி மனு செய்திருந்தார். இதனால் இவருக்கும் கிரிஜாவுக்கும் முன் விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஜென்சிமலர் வெளியே சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். கிரிஜா வீட்டு அருகில் வந்தபோது அங்கு நின்ற பிரபுராஜ், ஜென்சிமலரை தடுத்து நிறுத்தி எங்களுக்கு தெரியாமல் குடிநீர் இணைப்பு கேட்பாயா என அவதூறாக பேசி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது.

    மேலும் இருவரும் ஜென்சிமலரிடம் இருந்த செல்போன் மற்றும் ஸ்கூட்டரையும் சேதப்படுத்தி மிரட்டியதாக கூறப்படுகிறது. இவற்றின் சேதமதிப்பு சுமார் ரூ.30 ஆயிரம் இருக்கும்.

    காயம் அடைந்த ஜென்சி மலர் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பிரபுராஜ், கிரிஜா ஆகிய இருவர் மீதும் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி யுள்ள காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி தலைமறைவாக உள்ள அவர்களைதேடி வரு கின்றனர்.

    • 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை பெற்ற கொலை குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
    • தனது சொந்த கிராமத்துக்கு வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே அவலூர்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில் புரையூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது (42 ). இவர் கடந்த 2008 -ம் ஆண்டு சென்னை கொலை குற்ற வழக்கில் ஈடுபட்டு பூந்தமல்லி விரைவு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை பெற்று புழல் சிறையில் இருந்தவர் 18/5/2011 முதல் 22/5/2011 வரை 5 நாள் பரோலில் வந்து அதிலிருந்து 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவுபடி செஞ்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    சப் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், விஸ்வநாதன் மற்றும் காவலர்கள் ஞானம்,மணி ஆகியோர்கள் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று வெங்கடேசன் தனது சொந்த கிராமத்துக்கு வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் விரைந்து சென்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இவர் மீது அவலூ ர்பேட்டை போலீஸ் நிலையத்தில் நீதிமன்றத்தால் தண்டனை பெற்று சிறையில் இருந்து பரோலில் வந்து மீண்டும் சிறைக்கு ஆஜராகாமல் தேடப்பட்டு வந்த குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து தேடப்பட்ட குற்றவாளியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • திருமாளம் தெற்கு தெருவை சேர்ந்த இருவர் சாராயம் விற்றுக் கொண்டிருந்தனர்.
    • தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே கங்களாஞ்சேரி பகுதியில் திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது திருமாளம் தெற்கு தெருவை சேர்ந்த கண்ணன் (வயது 20), சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜீவ்காந்தி ஆகிய 2 பேரும் சாராயம் விற்று கொண்டிருந்தனர்.

    தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

    இதனை பார்த்த ராஜீவ்காந்தி தப்பி தலைமறைவாகி விட்டார்.

    இதையடுத்து கண்ணனை போலீசார் கைது செய்தனர். ராஜீவ்காந்தியை தேடி வருகின்றனர்.

    அதேபோல் மற்றொரு வழக்கில் சாராயம் விற்ற கேதாரிமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்த ஆனந்தை (40) கைது செய்தனர்.

    • ஜாமீனில் வந்து வெளிநாட்டுக்கு தப்பி சென்றவர் கைது செய்யப்பட்டார்.
    • விசாரணைக்கு ஆஜராகாமல் வெளிநாடு தப்பிச் சென்றார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்ட க்குடி கடைவீதி தெரு வைச் சேர்ந்தவர் ராம லிங்கம் (வயது48). இவருக்கும் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த ரேணுகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2006-ம் ஆண்டு திருமண மானது. இந்நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரேணுகா இறந்தார். அவரது இறப்பு வரதட்சணை கொடுமை காரணமாக இறந்து விட்டார் என கூறி அவரது சகோதரர் ராதா கிருஷ்ணன் புகார் செய்தார்.

    அதன்பேரில் இது குறித்து விருத்தாச்சலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து ராமலிங்கத்தை கைது செய்தனர். பின் ஜாமீனில் வெளிவந்த ராம லிங்கம் தொடர்ந்து வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் வெளிநாடு தப்பிச் சென்றார். தலைமறைவான ராம லிங்கம் நேற்று மீண்டும் தமிழகம் திரும்புவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது நேற்று சென்னை ஏர்போர்ட்டுக்கு சென்ற போலீசார் ராமலிங்கத்தை கைது செய்தனர்.

    • கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.
    • போலீசார் விரைந்து சென்று இருவரை கைது செய்தனர்.

    திருவையாறு:

    திருவையாறு அருகே மணக்கரம்பை பைபாஸ் அருகே உள்ள அரசு மதுபான கடை முன்பு கடந்த 18-ம் தேதி பள்ளியக்ரஹாரம் சின்னத்தெருவை சேர்ந்த ஜார்ஜ் மகன் பட்டதாரி வாலிபர் பிரேம் (31) என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கில் இறந்துபோன பிரேம் அண்ணன் முத்து (46) நடுக்காவேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் நடுக்காவேரி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் சப்இன்ஸ்பெக்டர் மதிவாணன் ஆகியோர் பிரேம் கொலை வழக்கில் பள்ளியக்ரஹாரம் காந்தி நகரை சேர்ந்த ராமசந்திரன் மகன் மணிகண்டன் (33), பள்ளியக்ரஹாரம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பவர்சிங் மகன் விஷ்வபிரசாத் (23), முருகையன் மகன் புல்லாண்டு (என்ற) பிரகாஷ் (34), பள்ளியக்ரஹாரம் பெரியத்தெருவை சேர்ந்த நடராஜன் மகன் சூர்யா (25) ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.

    இந்த நிலையில் திருவை யாறு அடுத்த தென்பெரம்பூர் வெண்ணாற்றங்கரையில் கொலை வழக்கில் தொட ர்புடைய குற்றவாளிகளான விஷ்வபிரசாத் (23), சூர்யா (25) ஆகிய இருவரும் பதுங்கி இருப்பதாக நடுக்காவேரி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியத்திற்கு ரகசிய தகவல் வந்தது.

    தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரம ணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பதுங்கியிருந்த விஷ்வபிரசாத், சூர்யா ஆகிய இருவரையும் பிடித்து கைது செய்தனர்.

    • வழக்கு விசாரணை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடைபெற்று விசாரணைக்கு ஆஜராகாமல் மணிஷ் தலைமறைவாக ராஜஸ்தானில் இருந்தார்.
    • மணிஷ் குறித்த தகவல்களை அம்மாநில போலீசாரின் உதவியுடன் திரட்டி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே சாலையில் வசித்து வருபவர் தன்ராஜ் சவுத்ரி (51). ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட இவர் கடந்த 15 ஆண்டுகளாக சீர்காழியில் சொந்த வீடு கட்டி வசித்து வருகிறார். மேலும் இவர் பூம்புகார் தருமக்குளம் பகுதியில் நகை அடகுகடை மற்றும் தங்க நகைகள் மொத்த விற்பனை செய்து வருகிறார்.

    இந் நிலையில் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி அதிகாலை இவரது வீட்டிற்குள் புகுந்த 3 வட மாநிலத்தவர்கள் தன்ராஜ் சவுத்ரியின் மனைவி ஆஷா மற்றும் அவரது மகன் அகில் ஆகிய இருவரையும் கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்துவிட்டு, தன்ராஜ் மற்றும் அவரது மருமகள் நேஹல் ஆகிய இருவரையும் கட்டிப் போட்டுவிட்டு வீட்டில் இருந்த 12.5 கிலோ தங்க நகை மற்றும் ரூ.6.75 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தன்ராஜ் சவுத்ரி வீட்டில் நிறுத்தி வைத்திருந்த காரினை திருடி தப்பி சென்றனர்.

    இதனிடையே சீர்காழி அருகே எருக்கூர் சவுக்கு தோப்பில் பதுங்கி இருந்த வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளை, கொலையில் ஈடுபட்ட ராஜஸ்தானை சேர்ந்த மனீஷ், ரமேஷ் பட்டேல், மஹிபால் சிங் ஆகிய மூவரையும் மயிலாடுதுறை மாவட்ட அப்போதைய எஸ்.பி. ஸ்ரீநாதா தலைமையில் கொண்ட போலீசார் பிடிக்க சென்றனர். அப்பொழுது அதிரடிப்படை வீரர் சாலிம் என்பவரை கொள்ளையர்கள் தாக்கினர். அப்போது ராஜஸ்தான் மாநிலம் அஹோலி கிராமத்தைச் சேர்ந்த மகிபால் சிங் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

    அங்கு மறைந்திருந்த ராஜஸ்தான் ஜோத்பூரை சேர்ந்த மணிஷ், ராஜஸ்தான் மாநிலம் கங்காவாஸ் பகுதியை சேர்ந்த ரமேஷ் பட்டேல் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு மணிஷ், ரமேஷ் பட்டேல் மற்றும் இதில் தொடர்புடைய கும்பகோணம் கருணாராம் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    வழக்கு விசாரணை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் மணிஷ் தலைமறைவாக ராஜஸ்தானில் இருந்தார். அவரை பிடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் 'தீரன் அதிகாரம் இரண்டு' பட பாணியில் ராஜஸ்தான் மாநிலம் விரைந்து சென்றனர்.

    அங்கு சில தினங்கள் தங்கியிருந்து மணிஷ் குறித்த தகவல்களை அம்மாநில போலீசாரின் உதவியுடன் திரட்டி, பின்னர் மணிஷ்சை கைது செய்து விமானம் மூலம் இன்று அதிகாலை சென்னை வந்து, பின்னர் சீர்காழி காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர். இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒரு திருட்டு வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியாக இருந்து வந்தார்.
    • சசிகுமார் மருதன் கோட்டில் உள்ள வீட்டுக்கு வந்ததாக போலீசாருக்கு தெரிய வந்தது

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட மருதங்கோடு வலியவிளையை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 42) இவர் 2010 -ஆம் ஆண்டு ஒரு திருட்டு வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியாக இருந்து வந்தார்.

    இந்நி லையில் நேற்று சசிகுமார் மருதன் கோட்டில் உள்ள வீட்டுக்கு வந்ததாக போலீசாருக்கு தெரிய வந்ததை அடுத்து தலைமறைவாக இருந்த அவரை தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    • கடந்த 11-ம் தேதி நடந்த அடிதடி வழக்கில் தலைமறைவு.
    • இந்த நிலையில் தனிப்படை போலீசார் பென்னாகரத்தில் 2 பேரையும் கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 11-ம் தேதி நடந்த அடிதடி வழக்கில் தலைமறைவான பச்சபட்டியைச் சேர்ந்த திருப்பதி (வயது 37), செந்தில்குமார் (34) ஆகிய இருவரையும் கிச்சிபாளையம் போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தனிப்படை போலீசார் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் வைத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • காதல் டார்ச்சர் மற்றும் சமூக வலை தளங்களில் படம் வெளியான சம்பவங்களால் மன வேதனை அடைந்து திவ்யா தற்கொலை
    • ரஞ்சித்தை கைது செய்ய தனி போலீஸ் படை கேரளாவுக்கு விரைந்து உள்ளது.

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட மருதன் கோடு இலங்கன்விளையை சேர்ந்தவர் சத்யராஜ். இவரது 2-வது மகள் திவ்யா (வயது 20).

    பட்டப்படிப்பு முடித்து விட்டு மேற்படிப்பு செல்ல இருந்த இவர், சம்பவத்தன்று வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்தார். இது குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் காதல் டார்ச்சர் மற்றும் சமூக வலை தளங்களில் படம் வெளியான சம்பவங்களால் மன வேதனை அடைந்து திவ்யா தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    மருதங்கோடு இலுப்ப விளையை சேர்ந்த ரஞ்சித் (20) கடந்த சில ஆண்டு களாக திவ்யாவிற்கு காதல் டார்ச்சர் கொடுத்துள்ளார்.இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த டிப்ளமோ என்ஜினியரிங் மாணவர் ஷெர்லின் புருஸ் (19) என்பவருடன் திவ்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஆத்திரம் அடைந்த ரஞ்சித், திவ்யாவுடன் இருக்கின்ற படங்களை சமூக வலைதளங்களில் பரவவிட்டுள்ளார்.

    இதை பார்த்த செர்லின் புருஸ், நீ ரஞ்சித்தை சந்திக்க சென்றாயா என கேட்டு திவ்யாவிடம் தகாத வார்த்தைகளில் பேசி உள்ளார். இதனால் தான் அவர் தற்கொலை செய்து உள்ளார் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் ஷெர்லின் ஜோசை கைது செய்தனர்.

    இதற்கிடையில் போலீசார் தேடுவதை அறிந்ததும் ரஞ்சித் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடிய போது கேரளாவுக்கு தப்பி ஓடி விட்ட தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ரஞ்சித்தை கைது செய்ய தனி போலீஸ் படை கேரளாவுக்கு விரைந்து உள்ளது.

    • குழித்துறை கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்திருந்தது.
    • கைது செய்யப்பட்டவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்து க்குட்பட்ட காஞ்சிரகோடு, பெருதிம்புழி பறம்பு விளையைச் சேர்ந்தவர் மது (வயது 42).

    இவர் மீது அடிதடி புகார் கூறப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய போலீ சார் மதுவை கைது செய்த னர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    அதன்பிறகு 2020-ம் ஆண்டு மது ஜாமீனில் வெளி வந்தார். தொடர்ந்து அவர் கோர்ட்டில் ஆஜராகி வந்தார்.இந்த நிலையில் மது திடீரென தலைமறை வானார்.

    இதையடுத்து அவரை பிடிக்க குழித்துறை கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. அதன்பேரில் போலீசார் மதுவை தேடி வந்தனர். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.

    இந்த நிலையில் 2 ஆண்டு களாக தேடப்பட்ட மது நேற்று நள்ளிரவில் அவரது வீட்டிற்கு வந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்தனர்.

    அவர்கள் இருப்பது தெரியாமல் மது அங்கு வர, போலீசார் அவரை கைது செய்தனர். 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட மது மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×