என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதல் டார்ச்சரால் இளம்பெண் தற்கொலை - தலைமறைவான வாலிபர் கேரளாவுக்கு தப்பி ஓட்டம்
    X

    காதல் டார்ச்சரால் இளம்பெண் தற்கொலை - தலைமறைவான வாலிபர் கேரளாவுக்கு தப்பி ஓட்டம்

    • காதல் டார்ச்சர் மற்றும் சமூக வலை தளங்களில் படம் வெளியான சம்பவங்களால் மன வேதனை அடைந்து திவ்யா தற்கொலை
    • ரஞ்சித்தை கைது செய்ய தனி போலீஸ் படை கேரளாவுக்கு விரைந்து உள்ளது.

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட மருதன் கோடு இலங்கன்விளையை சேர்ந்தவர் சத்யராஜ். இவரது 2-வது மகள் திவ்யா (வயது 20).

    பட்டப்படிப்பு முடித்து விட்டு மேற்படிப்பு செல்ல இருந்த இவர், சம்பவத்தன்று வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்தார். இது குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் காதல் டார்ச்சர் மற்றும் சமூக வலை தளங்களில் படம் வெளியான சம்பவங்களால் மன வேதனை அடைந்து திவ்யா தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    மருதங்கோடு இலுப்ப விளையை சேர்ந்த ரஞ்சித் (20) கடந்த சில ஆண்டு களாக திவ்யாவிற்கு காதல் டார்ச்சர் கொடுத்துள்ளார்.இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த டிப்ளமோ என்ஜினியரிங் மாணவர் ஷெர்லின் புருஸ் (19) என்பவருடன் திவ்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஆத்திரம் அடைந்த ரஞ்சித், திவ்யாவுடன் இருக்கின்ற படங்களை சமூக வலைதளங்களில் பரவவிட்டுள்ளார்.

    இதை பார்த்த செர்லின் புருஸ், நீ ரஞ்சித்தை சந்திக்க சென்றாயா என கேட்டு திவ்யாவிடம் தகாத வார்த்தைகளில் பேசி உள்ளார். இதனால் தான் அவர் தற்கொலை செய்து உள்ளார் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் ஷெர்லின் ஜோசை கைது செய்தனர்.

    இதற்கிடையில் போலீசார் தேடுவதை அறிந்ததும் ரஞ்சித் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடிய போது கேரளாவுக்கு தப்பி ஓடி விட்ட தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ரஞ்சித்தை கைது செய்ய தனி போலீஸ் படை கேரளாவுக்கு விரைந்து உள்ளது.

    Next Story
    ×