என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொலை வழக்கில் 2 பேர் கைது
- கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.
- போலீசார் விரைந்து சென்று இருவரை கைது செய்தனர்.
திருவையாறு:
திருவையாறு அருகே மணக்கரம்பை பைபாஸ் அருகே உள்ள அரசு மதுபான கடை முன்பு கடந்த 18-ம் தேதி பள்ளியக்ரஹாரம் சின்னத்தெருவை சேர்ந்த ஜார்ஜ் மகன் பட்டதாரி வாலிபர் பிரேம் (31) என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கில் இறந்துபோன பிரேம் அண்ணன் முத்து (46) நடுக்காவேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் நடுக்காவேரி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் சப்இன்ஸ்பெக்டர் மதிவாணன் ஆகியோர் பிரேம் கொலை வழக்கில் பள்ளியக்ரஹாரம் காந்தி நகரை சேர்ந்த ராமசந்திரன் மகன் மணிகண்டன் (33), பள்ளியக்ரஹாரம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பவர்சிங் மகன் விஷ்வபிரசாத் (23), முருகையன் மகன் புல்லாண்டு (என்ற) பிரகாஷ் (34), பள்ளியக்ரஹாரம் பெரியத்தெருவை சேர்ந்த நடராஜன் மகன் சூர்யா (25) ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.
இந்த நிலையில் திருவை யாறு அடுத்த தென்பெரம்பூர் வெண்ணாற்றங்கரையில் கொலை வழக்கில் தொட ர்புடைய குற்றவாளிகளான விஷ்வபிரசாத் (23), சூர்யா (25) ஆகிய இருவரும் பதுங்கி இருப்பதாக நடுக்காவேரி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியத்திற்கு ரகசிய தகவல் வந்தது.
தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரம ணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பதுங்கியிருந்த விஷ்வபிரசாத், சூர்யா ஆகிய இருவரையும் பிடித்து கைது செய்தனர்.






