11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை பெற்ற கொலை குற்றவாளி கைது

11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை பெற்ற கொலை குற்றவாளி கைது செய்யப்பட்டார்.தனது சொந்த கிராமத்துக்கு வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கைதான வெங்கடேசன்.
கைதான வெங்கடேசன்.
Published on

விழுப்புரம்:

செஞ்சி அருகே அவலூர்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில் புரையூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது (42 ). இவர் கடந்த 2008 -ம் ஆண்டு சென்னை கொலை குற்ற வழக்கில் ஈடுபட்டு பூந்தமல்லி விரைவு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை பெற்று புழல் சிறையில் இருந்தவர் 18/5/2011 முதல் 22/5/2011 வரை 5 நாள் பரோலில் வந்து அதிலிருந்து 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவுபடி செஞ்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

சப் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், விஸ்வநாதன் மற்றும் காவலர்கள் ஞானம்,மணி ஆகியோர்கள் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று வெங்கடேசன் தனது சொந்த கிராமத்துக்கு வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் விரைந்து சென்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இவர் மீது அவலூ ர்பேட்டை போலீஸ் நிலையத்தில் நீதிமன்றத்தால் தண்டனை பெற்று சிறையில் இருந்து பரோலில் வந்து மீண்டும் சிறைக்கு ஆஜராகாமல் தேடப்பட்டு வந்த குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து தேடப்பட்ட குற்றவாளியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com