சாராயம் விற்ற இருவர் கைது

திருமாளம் தெற்கு தெருவை சேர்ந்த இருவர் சாராயம் விற்றுக் கொண்டிருந்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
சாராயம் விற்ற இருவர் கைது
Published on

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் அருகே கங்களாஞ்சேரி பகுதியில் திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது திருமாளம் தெற்கு தெருவை சேர்ந்த கண்ணன் (வயது 20), சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜீவ்காந்தி ஆகிய 2 பேரும் சாராயம் விற்று கொண்டிருந்தனர்.

தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

இதனை பார்த்த ராஜீவ்காந்தி தப்பி தலைமறைவாகி விட்டார்.

இதையடுத்து கண்ணனை போலீசார் கைது செய்தனர். ராஜீவ்காந்தியை தேடி வருகின்றனர்.

அதேபோல் மற்றொரு வழக்கில் சாராயம் விற்ற கேதாரிமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்த ஆனந்தை (40) கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com