search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தல 59"

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் தல 59 படத்தில் நடிக்க இந்திய சினிமாவில் முக்கிய நடிகையும், தேசிய விருது வென்றவருமான வித்யாபாலன் ஒப்பந்தமாகி இருக்கிறார். #Thala59 #AjithKumar
    `விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக் தான் இந்தப் படம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

    இந்த படத்தில் 3 கதாநாயகிகளில் ஒரு கதாபாத்திரத்தில் நஸ்ரியா நடிப்பது உறுதியாகி இருக்கிறது. மற்ற இரு கதாபாத்திரங்களுக்கு ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் கல்யாணி பிரியதர்‌ஷனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    மேலும் தேசிய விருது வென்ற நடிகை வித்யா பாலனும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதை போனி கபூர் உறுதிப்படுத்தியுள்ளார். தமிழ் பதிப்புக்கு ஏற்ப எச்.வினோத் திரைக்கதையை மாற்றி அமைத்திருப்பதால், வித்யா பாலனுக்கு முக்கிய வேடம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. #Thala59 #AjithKumar #HVinoth #VidyaBalan #Nazriya #ShraddhaSrinath #YuvanShankarRaja

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்க பிரபல நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. #Thala59 #AjithKumar
    விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதன் பின்னர் ரிச்சி, இவன் தந்திரன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். கன்னட நடிகையான இவர் அந்த மொழியிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அஜித் நடிக்கும் பிங்க் இந்தி படத்தின் ரீமேக் படத்தில் நடிக்க அவரிடம் பேசியுள்ளனர்.

    இதில் 3 கதாநாயகிகள். ஒரு வேடத்தில் நஸ்ரியா, மற்றொரு வேடத்தில் பிரியதர்‌ஷன் மகள் கல்யாணி நடிக்கிறார் என கூறப்படுகிறது. 3-வது கதாபாத்திரத்தில் நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம் பேசியுள்ளனர். அவரும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த படத்தில் 3 கதாநாயகிகள் இருந்தாலும் அஜித்துக்கு யாரும் ஜோடி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



    எச்.வினோத் இயக்கும் இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். #Thala59 #AjithKumar #Nazriya #KalyaniPriyadharsan #ShraddhaSrinath

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் ‘தல 59’ படத்தில் தேசிய விருது வென்ற பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Thala59 #ThalaAjith #KalyaniPriyadarshan
    ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தல 59’ என்று குறிப்பிடப்படுகிறது.

    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக் தான் இந்தப் படம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.



    இந்தப் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக கல்யாணி பிரியதர்‌ஷன் நடிக்கிறார் எனத் தகவல் கிடைத்துள்ளது. பிரபல இயக்குனர் பிரியதர்‌ஷன் மற்றும் முன்னாள் நடிகை லிசி இருவரது மகள்தான் கல்யாணி. மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விவரம் இன்னும் தெரியவில்லை. ‘ஹலோ’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான கல்யாணி, தற்போது மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். அத்துடன், துல்கர் சல்மான் ஜோடியாக ‘வான்’ என்ற தமிழ்ப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். #Thala59 #AjithKumar #ThalaAjith #KalyaniPriyadarshan

    விஸ்வாசம் படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் பிங்க் ரீமேக்கை அஜித்துக்கு தேர்வு செய்தது குறித்து போனி கபூர் விளக்கம் அளித்துள்ளார். #Thala59 #AjithKumar #ThalaAjith
    விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் தொடக்க விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் போனிகபூர் கலந்து கொண்டு பேசும்போது, அஜித்குமாருக்காக ‘பிங்க்’ படத்தை தேர்வு செய்தது ஏன்? என்பதற்கு விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

    “இங்கிலீஷ் விங்கிலீஷ்” படத்தில் அஜித்குமாருடன் இணைந்து பணியாற்றிய போது, எங்கள் தயாரிப்பில் தமிழில் அவர் ஒரு படம் நடிக்க வேண்டும் என்று ஸ்ரீதேவி விரும்பினார். கடந்த ஆண்டு வரை நல்ல கதை கிடைக்கவில்லை. ‘பிங்க்’ படத்தை தமிழில் தயாரிக்கலாம் என்ற எண்ணத்தை அஜித் தெரிவித்தார். அஜித் அந்த படத்தில் நடித்தால், அதை ஒரு சிறந்த படமாக உருவாக்க முடியும் என்று ஸ்ரீதேவியும் அந்த எண்ணத்தை ஏற்றுக் கொண்டார்.



    தமிழ் படம் தயாரிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். ‘பிங்க்’ படத்தை தமிழில் எடுப்பதிலும், அஜித்துடன் இணைந்து பணிபுரிவதிலும் மகிழ்ச்சி அடைகிறேன். மே மாதம் 1-ந் தேதி படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்.

    இவ்வாறு போனி கபூர் கூறினார். #Thala59 #AjithKumar #ThalaAjith #BoneyKapoor #PinkRemake

    விஸ்வாசம் படத்தை அடுத்து அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் இரண்டு படங்களை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருக்கிறார். #Thala59 #Ajith #BoneyKapoor
    தனது மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமான பேவியூ புராஜக்ட் எல்எல்பி (Bayview Projects LLP) நிறுவனத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார் போனி கபூர். விமர்சன ரீதியாக பாராட்டுக்களையும் மற்றும் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் செய்த ‘பிங்க்’ இந்தி படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் இது. 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் படத்தின் மூலம் பாராட்டுக்களை குவித்த எச்.வினோத் இந்த படத்தை இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இறுதி செய்யப்பட்ட பின் விரைவில் அறிவிக்கபடுவார்கள். இந்த படம் இன்று அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கியது. 

    அஜித் படம் தயாரிப்பது குறித்து போனி கபூர் கூறும்போது, ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் அஜித்குமார் உடன் இணைந்து பணியாற்றிய போது, எங்கள் தயாரிப்பில் தமிழில் அவர் ஒரு திரைப்படம் நடிக்க வேண்டும் என ஸ்ரீதேவி விரும்பினார். கடந்த ஆண்டு வரை நல்ல கதை ஒன்றும் கிடைக்கவில்லை. ஒரு நாள் அஜித் பிங்க் படத்தை ரீமேக் செய்யும் எண்ணத்தை தெரிவித்தார். அஜித் அந்த படத்தில் நடித்தால், அதை ஒரு சிறந்த படமாக உருவாக்க முடியும் என ஸ்ரீதேவியும் உடனடியாக அந்த எண்ணத்தை ஏற்றுக்கொண்டார். 

    தென்னிந்திய சினிமா துறையில், குறிப்பாக தமிழ் சினிமாவில் சினிமா தயாரிப்பை மேற்கொள்வதை நான் பெருமையாக கருதுகிறேன். அஜித் என் மனைவி ஸ்ரீதேவியுடன் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் நடித்த காலத்தில் இருந்தே நானும் அஜித்தும் ஒரு படத்தில் இணைய மிகுந்த ஈடுபாட்டுடன் காத்திருந்தோம். நாங்கள் இருவருமே எங்கள் இருவரது கேரியரிலும் சிறப்பு சேர்க்கும் ஒரு பொருத்தமான கதையை தேடினோம். 



    'பிங்க்' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கில் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இன்று படப்பிடிப்பை துவக்கி, 2019ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக இன்னொரு படத்தையும் தயாரிக்கிறோம். அது 2019 ஜூலையில் துவங்கி, 2020 ஏப்ரல் 10ஆம் தேதி வெளியிடப்படும். இரண்டு படங்களும் ஜீ நிறுவனம் ஆதரவுடன் தயாராகிறது. அவருடன் பணிபுரியும் மிகச்சிறந்த அனுபவத்தை நான் எதிர்பார்க்கிறேன்.

    இயக்குனர் வினோத்தின் படைப்புகளை நான் பின்பற்றி வருகிறேன், மிகச்சிறந்த திரைப்படங்களை கொடுத்து வருகிறார். குறிப்பாக, அவரது முந்தைய படமான 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை மிகவும் யதார்த்தமாக எடுத்திருந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது. தனித்துவமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து, அவற்றை தனது சிறந்த கதை சொல்லல் மூலம் சிறப்பாக செய்யும் அவர் தான் தமிழ் மொழியில் 'பிங்க்' படத்தை இயக்க சரியான நபராக இருப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன்’ என்றார். #Thala59 #Ajith #BoneyKapoor 
    விஸ்வாசம் படத்தை அடுத்து அஜித் நடிக்க இருக்கும் ‘தல 59’ படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இசையமைக்க இருக்கிறார். #Ajith #Thala59
    அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில், அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் அறிந்தோம்.

    இந்நிலையில் இப்படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டுள்ளது. பாலிவுட்டில் வரவேற்பை பெற்ற பிங்க் திரைப்படத்தின் ரீமேக் என்று உறுதி செய்யப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருக்கிறார். 



    தற்போது இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இதற்கு முன் அஜித் நடிப்பில் உருவான ‘பில்லா’, ‘ஏகன்’, ‘மங்காத்தா’, ‘பில்லா 2’, ‘ஆரம்பம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு யுவன் இசையமைத்திருக்கிறார். 
    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், பிங்க் தமிழில் ரீமேக் ஆவதை படத்தின் இந்தி தயாரிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். #PinkRemake #Thala59
    சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கியவர் எச்.வினோத். இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் அஜித்தை வைத்து அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின.

    இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் திரைப்படத்தின் ரீமேக்காக இது இருக்கும் என்றும், இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ‘பிங்க்’ படத்தின் தயாரிப்பாளர் ஷிஜித் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

    கோவா திரைப்பட விழாவில் பேசிய அவர், “பிங்க் திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ள தகவல் உண்மைதான். படம் தயாரான பிறகு அதை என்னிடம் காண்பிப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்” என்று கூறியுள்ளார். இதன் மூலம் அஜித்தின் அடுத்த படம் பிங்க் ரீமேக்காக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.



    தமிழில் ரீமேக் செய்தாலும் இந்தி படத்தின் காட்சிக்கு காட்சி ரீமேக் செய்யப்படாது என்றும், தமிழுக்கு ஏற்றவகையில் காட்சிகளை வைத்தே படம் உருவாகும் என்றும் கூறப்படுகிறது. 2019-ன் இரண்டாம் பாதியில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டிருக்கும் இப்படத்துக்கு, இசையமைக்க இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. #PinkRemake #Thala59

    விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ள அஜித்குமார் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் நிலையில், அந்த படம் குறித்து பரவிய வதந்திக்கு வினோத் விளக்கம் அளித்துள்ளார். #Thala59 #AjithKumar #HVinoth
    அஜித் - சிவா கூட்டணியில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே அஜித்தின் அடுத்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. அஜித்தின் அடுத்த படத்தை எச்.வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. விஸ்வாசம் படப்பிடிப்பை முடித்துவிட்டு சமீபத்தில் சென்னை திரும்பிய அஜித்துடன், இயக்குநர் எச்.வினோத், போனி கபூர் சந்தித்துள்ளனர்.

    அஜித்தின் 59-வது படமாக உருவாகும் இந்த படம் அமிதாப்பச்சன் நடித்து பாலிவுட்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற பிங்க் படத்தின் ரீமேக் என்றும் தகவல் வெளியானது. இதுதவிர புதிய கதை ஒன்றையும் அஜித்தை வைத்து வினோத் இயக்குவதாக கூறப்பட்டது.

    இவ்வாறாக வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ரீமேக்கா, அல்லது புதிய கதையா என்பதில் குழப்பம் ஏற்பட்டு வந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் அளிக்கும் விதமாக இயக்குநர் வினோத் அவரது ட்விட்டர் பக்கத்தில் தல 59 பிங் ரீமேக் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #AjithKumar #Thala59 #HVinoth

    ‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து அஜித் - எச்.வினோத் கூட்டணியில் அடுத்ததாக உருவாக இருக்கும் புதிய படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Thala59 #AjithKumar
    அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    பாலிவுட்டில் வரவேற்பை பெற்ற பிங்க் திரைப்படத்தின் ரீமேக் தான் இது என்றும், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வலம் வருகிறது.



    ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமாகும் பட்சத்தில், அஜித் - எச்.வினோத் - ஏ.ஆர்.ரஹ்மான் - போனி கபூர் என பிரம்மாண்ட கூட்டணி உருவாகுவது நிச்சயம். ஏ.ஆர்.ரஹ்மான் முன்னதாக அஜித்தின் வரலாறு படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    மேலும் இந்த படத்தின் மூலம் நஸ்ரியா தமிழில் ரீ-எண்ட்ரி கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    அஜித்தின் 59-வது படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #AjithKumar #Thala59 #ARRahman

    அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கும் நிலையில், அஜித்தின் அடுத்த படத்தின் மூலம் நஸ்ரியா தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரியாவதாக கூறப்படுகிறது. #Thala59 #AjithKumar
    நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நஸ்ரியா நாசிம். தொடர்ந்து ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக ஜெய் ஜோடியாக திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் நடித்திருந்தார்.

    பின்னர் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்ட நஸ்ரியா, சினிமாவில் இருந்து விலகினார். சமீபத்தில் மீண்டும் படத் தயாரிப்பின் மூலம் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்த நஸ்ரியா, கடைசியாக பிரித்விராஜ் ஜோடியாக கூடே என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது இரு படங்களை தயாரித்து வருகிறார்.

    திருமணத்திற்கு பிறகு, அவருக்கு ஏற்ற கதை அமைந்தால் நஸ்ரியா நடிப்பார் என்று பகத் பாசில் கூறியிருப்பதால், சரியான கதைக்காக நஸ்ரியா காத்திருப்பதாக தகவல் வெளியானது.



    இந்த நிலையில், கடந்த வாரம் நஸ்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில், தான் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வரப் போவதாகவும், முக்கிய அறிவிப்பு ஒன்று, விரைவில் வரும் என்றும் கூறியிருந்தார். நடிகை நஸ்ரியா தான் அஜித்தின் தீவிர ரசிகை என்றும், அவருடன் நடிக்க கிடைக்கும் வாய்ப்புக்காக காத்திருப்பதாகவும் பலமுறை கூறியிருக்கிறார். இந்த நிலையில், உங்களின் அடுத்த படம் உங்களுக்கு பிடித்த நடிகருடனா என்று கேட்டதற்கு, இருக்கலாம் என்று ஸ்மைலியுடன் கூறியிருக்கிறார்.

    அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அஜித் படத்தில் நஸ்ரியா நடிக்கும் பட்சத்தில், அது அவருக்கு ஒரு சரியான ரீ-என்ட்ரியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. #Thala59 #AjithKumar #NazriyaNazim

    ‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Thala59 #AjithKumar
    அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    இமான் இசையமைக்கும் முதல் அஜித் படம் இது. மதுரை மற்றும் தேனி பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் போட்டு நடைபெற்று வருகிறது.

    ‘விஸ்வாசம்’ படத்துக்கு பிறகு ‘சதுரங்க வேட்டை’ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கப் போகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்க இருக்கிறார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ‘பிங்க்’ படத்தைத்தான் தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியானது.



    இந்நிலையில், இந்தப் படத்துக்கு இசையமைக்க இருப்பது யுவன் சங்கர் ராஜா என்ற தகவல் கிடைத்துள்ளது. யுவன் சங்கர் ராஜா அஜித் நடிப்பில் ‘பில்லா’, ‘மங்காத்தா’ மற்றும் ‘ஆரம்பம்’ படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். #Thala59 #AjithKumar #YuvanShankarRaja

    `விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், இந்தியில் விருதுகளை குவித்த படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #AjithKumar #Thala59
    `விவேகம்' படத்திற்கு பிறகு அஜித் மீண்டும் சிவா இயக்கத்தில் `விஸ்வாசம்' படத்தில் நடித்து வருகிறார். அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் ரிலீசாகவிருப்பதாக கூறப்படும் நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை `சதுரங்க வேட்டை', `தீரன் அதிகாரம் ஒன்று' படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகிய நிலையில், வினோத் இயக்கும் அந்த படம் இந்தியில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி மற்றும் பல்வேறு விருதுகளை குவித்த பிங்க் படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது.

    முதலில் இயக்குநர் வினோத் படத்தை ரீமேக் செய்ய விரும்பவில்லை என்றும், போனி கபூரிடம், அஜித் சம்மதம் தெரிவித்ததால் வினோத் அதற்கான திரைக்கதையை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.



    அமித்தாப் பச்சன், டாப்சி உள்ளிட்ட பலர் நடித்திருந்த பிங்க் படத்தை பலரும் பாராட்டி இருந்தனர். தமிழில் அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க உள்ளார். பிங்க் படத்தில் அமிதாப்பச்சன் மூத்த வழக்கறிஞராக நடித்திருப்பார். விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 3 பெண்களை அந்த வழக்கில் இருந்து காப்பாற்றும்படியாக படத்தின் கதை நகரும். 

    இந்த படத்தின் படப்பிடிப்பு 2019 ஜனவரியில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #AjithKumar #Thala59 #PinkRemake

    ×