என் மலர்

  சினிமா

  விருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்
  X

  விருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  `விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், இந்தியில் விருதுகளை குவித்த படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #AjithKumar #Thala59
  `விவேகம்' படத்திற்கு பிறகு அஜித் மீண்டும் சிவா இயக்கத்தில் `விஸ்வாசம்' படத்தில் நடித்து வருகிறார். அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் ரிலீசாகவிருப்பதாக கூறப்படும் நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை `சதுரங்க வேட்டை', `தீரன் அதிகாரம் ஒன்று' படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகிய நிலையில், வினோத் இயக்கும் அந்த படம் இந்தியில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி மற்றும் பல்வேறு விருதுகளை குவித்த பிங்க் படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது.

  முதலில் இயக்குநர் வினோத் படத்தை ரீமேக் செய்ய விரும்பவில்லை என்றும், போனி கபூரிடம், அஜித் சம்மதம் தெரிவித்ததால் வினோத் அதற்கான திரைக்கதையை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.  அமித்தாப் பச்சன், டாப்சி உள்ளிட்ட பலர் நடித்திருந்த பிங்க் படத்தை பலரும் பாராட்டி இருந்தனர். தமிழில் அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க உள்ளார். பிங்க் படத்தில் அமிதாப்பச்சன் மூத்த வழக்கறிஞராக நடித்திருப்பார். விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 3 பெண்களை அந்த வழக்கில் இருந்து காப்பாற்றும்படியாக படத்தின் கதை நகரும். 

  இந்த படத்தின் படப்பிடிப்பு 2019 ஜனவரியில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #AjithKumar #Thala59 #PinkRemake

  Next Story
  ×