என் மலர்

  சினிமா

  மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
  X

  மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Thala59 #AjithKumar
  அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

  இமான் இசையமைக்கும் முதல் அஜித் படம் இது. மதுரை மற்றும் தேனி பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் போட்டு நடைபெற்று வருகிறது.

  ‘விஸ்வாசம்’ படத்துக்கு பிறகு ‘சதுரங்க வேட்டை’ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கப் போகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்க இருக்கிறார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ‘பிங்க்’ படத்தைத்தான் தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியானது.  இந்நிலையில், இந்தப் படத்துக்கு இசையமைக்க இருப்பது யுவன் சங்கர் ராஜா என்ற தகவல் கிடைத்துள்ளது. யுவன் சங்கர் ராஜா அஜித் நடிப்பில் ‘பில்லா’, ‘மங்காத்தா’ மற்றும் ‘ஆரம்பம்’ படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். #Thala59 #AjithKumar #YuvanShankarRaja

  Next Story
  ×