search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக அமைச்சரவை"

    • தி.மு.க. அரசின் செயல் திட்டம் குறித்தும், அரசு நிறைவேற்ற இருக்கும் புதிய திட்டங்கள் குறித்தும் ஆளுநர் உரையில் வெளியிடப்படும்.
    • கூட்டத்தொடரில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் அடுத்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர், பொங்கலுக்கு முன்பே ஜனவரி முதல் வாரத்தில் தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவார். அதில் அரசுத் திட்டங்கள் மற்றும் அரசுத் துறைகளின் செயல்பாடுகள் பற்றி ஆளுநர் குறிப்பிடுவார். தி.மு.க. அரசின் செயல் திட்டம் குறித்தும், அரசு நிறைவேற்ற இருக்கும் புதிய திட்டங்கள் குறித்தும் ஆளுநர் உரையில் வெளியிடப்படும்.

    இந்நிலையில், தமிழக அமைச்சரவை ஜனவரி 4ம் தேதி 11 மணிக்கு கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தொடர் குறித்தும், கூட்டத்தொடரில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

    ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, அ.தி.மு.க. பல்வேறு முக்கிய பிரச்சினைகளை எழுப்ப உள்ளது. சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை, நெய் விலை, வெண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் பற்றி உறுப்பினர்கள் காரசாரமாக விவாதிக்க வாய்ப்பு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • இளைஞர் நலன், விளையாட்டுத்துறை வைத்திருந்த மெய்யநாதன் சுற்றுச்சூழல்துறை அமைச்சராக நீடிக்கிறார்.

    உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு திட்டங்கள் செயலாக்கம், வறுமை ஒழிப்பு, கிராமப்புற கடன் திட்டத்துறையும் உதயநிதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதைதொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த பெரியசாமி ஊரக வளர்ச்சி, ஊராட்சி ஒன்றியங்கள் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    வீட்டு வசதித்துறை அமைச்சராக இருக்கும் முத்துசாமிக்கு நகர்ப்புற திட்டமிடல் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த பெரிய கருப்பன் கூட்டுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ராஜகண்ணப்பனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையுடன் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும் ஒதுக்கீடு. அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு சீர்மரபினர் நலத்துறை, கதர், கிராமம் தொழில் வாரியத்துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் சேகர்பாபு வசம் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    ஜவுளி மற்றும் கைத்தறித்துறை இலாகா மட்டும் அமைச்சர் காந்தி வசம் உள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறையுடன் கூடுதலாக சிஎம்டிஏவும் அமைச்சர் சேகர்பாபு வசம் ஓப்படைக்கப்பட்டுள்ளது.

    நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக ஓய்வூதியம், புள்ளியியல் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இளைஞர் நலன், விளையாட்டுத்துறை வைத்திருந்த மெய்யநாதன் சுற்றுச்சூழல்துறை அமைச்சராக நீடிக்கிறார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது.
    • இதில் புதிய மசோதா தாக்கல் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் 17-ம் தேதி கூடுகிறது. மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்படும். பின்னர் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் நாட்கள் குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும்.

    சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை இன்று மாலை 5 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.

    தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாக்கள் குறித்து அமைச்சரவை கூடி ஆலோசிக்க உள்ளது.

    • தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 14-ம் தேதி மாலை 6 மணிக்கு கூடுகிறது.
    • இந்தக் கூட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

    சென்னை:

    தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 14-ம் தேதி மாலை 6 மணிக்கு கூடுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது.

    சட்டசபை கூட்டம் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

    வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழைநீர் வடிகால் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

    • தமிழக சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் 2-வது வாரம் அல்லது 3-வது வாரத்தில் நடைபெற இருக்கிறது.
    • ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    சட்டசபை கூட்டம் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி சில முக்கிய முடிவுகள் எடுப்பது சம்பந்தமாக இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    மேலும், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு மசோதா கொண்டுவருவது குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    வரும் 29-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் அவசர சட்டம் சீர் செய்யப்படும். தமிழக ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனப்படுத்தப்படும்.

    பொதுமக்களிடம் கேட்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், சட்டத்துறையின் ஆலோசனை பெற்று அவசர சட்டம் தயாரிக்கபடும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    • தமிழக சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் 2-வது வாரம் அல்லது 3-வது வாரத்தில் நடைபெற இருக்கிறது.
    • புதிய சட்ட மசோதாக்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்ததாக தெரிகிறது.

    சென்னை:

    தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அனைத்து துறையை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    சட்டசபை கூட்டம் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி சில முக்கிய முடிவுகள் எடுப்பது சம்பந்தமாக இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து முடித்து விசாரணை அறிக்கையை ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்து இருந்தது.

    இந்த அறிக்கையை வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்வது குறித்து இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதேபோல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கையையும் ஏற்கனவே அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த அறிக்கையையும் சட்டசபையில் தாக்கல் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதுதவிர ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு மசோதா கொண்டுவருவது குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் தமிழகத்தில் புதிதாக தொழில்கள் தொடங்குவதற்கு அனுமதி கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு கொள்கை முடிவுகள் சம்பந்தமாகவும் இந்த அவசர கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதுதவிர தமிழகத்தின் நலன், பல முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    தமிழக சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் 2-வது வாரம் அல்லது 3-வது வாரத்தில் நடைபெற இருக்கிறது. எனவே சட்டசபை கூட்டத்தில் என்னென்ன சட்ட மசோதாக்களை கொண்டுவந்து நிறைவேற்றலாம் என்பது குறித்தும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்ததாக தெரிகிறது.

    இதனால் அடுத்த மாதம் தொடங்க உள்ள சட்டசபை கூட்டம் மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் எதுவும் உடனடியாக அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படவில்லை.

    • சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற அமைசச்ரவை கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
    • ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை கோட்டையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற அமைசச்ரவை கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

    குறிப்பாக தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை ஆகியவற்றை சட்டசபையில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும், ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பாக ஆய்வு செய்ய தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு அமைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் இருந்தும் பல்வேறு அரசியல் கட்சிகள் தரப்பிலும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஆன்லைன் ரம்மி விளையாடுவது ஆபத்தானது என்பதால் அதை தடை செய்யும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய அவசர சட்டம் பிறப்பிப்பதற்கான சூழல் குறித்தும் இதில் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
    • ஏற்கனவே இது தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு கடந்த ஜூலை 27-ந்தேதி தனது அறிக்கையை முதல்-அமைச்சரிடம் தாக்கல் செய்திருந்தது.

    சென்னை:

    தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு சென்னை கோட்டையில் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

    இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் தமிழகத்துக்கு தேவையான பல்வேறு முக்கிய கோரிக்கைகள் மீது விவாதித்து முடிவெடுக்க உள்ளனர்.

    குறிப்பாக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை கடந்த 27-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டிருந்தது.

    608 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு என்னென்ன நோய் இருந்தது? அவருக்கு எவ்வாறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது? வெளிநாட்டுக்கு அவரை சிகிச்சைக்கு அழைத்து செல்லாதது ஏன்? என்பது உள்பட பல்வேறு தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளது.

    ஜெயலலிதாவின் மரணத்தில் 'மர்மம்' இருப்பதாக கூறி வந்த ஓ.பன்னீர்செல்வத்தின் வாக்குமூலம், சசிகலாவின் வாக்குமூலம், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கொடுத்த வாக்குமூலம் அனைத்தும் அதில் விரிவாக இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.

    இந்த அறிக்கையை சட்டசபை கூடும்போது வெளியிடலாமா? அல்லது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் உடனே வெளியிடலாமா? என்பது பற்றி விரிவாக விவாதிக்கப்படுகிறது.

    இதேபோல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் அறிக்கையும் அரசிடம் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதுவும் இன்னும் மக்கள் பார்வைக்கு வெளியிடாமல் உள்ளது.

    இந்த அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதால் சட்டசபையை எப்போது கூட்டலாம் என்பது பற்றியும் இதில் விவாதிக்க வாய்ப்பு உள்ளது.

    மேலும் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய அவசர சட்டம் பிறப்பிப்பதற்கான சூழல் குறித்தும் இதில் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

    ஏற்கனவே இது தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு கடந்த ஜூலை 27-ந்தேதி தனது அறிக்கையை முதல்-அமைச்சரிடம் தாக்கல் செய்திருந்தது.

    இதன் தொடர்ச்சியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் ஆய்வு கூட்டங்கள் நடத்தி விவாதித்துள்ள நிலையில் இப்போது அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

    இது தவிர பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாகவும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம், புதிய தொழில் முதலீடுகளுக்கான அனுமதி வழங்குவது உள்ளிட்டவை குறித்தும் அமைச்சரவையில் விவாதித்து முடிவு எடுக்கப்படுகிறது.

    இது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் என்னென்ன என்பது பற்றி இன்று இரவு அறிவிப்பாக வெளியிட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
    • மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் கடந்த 1, 2-ந் தேதிகளில் துறைவாரியாக ஆய்வு மேற்கொண்டார்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று சமீபத்தில் ஓராண்டை நிறைவு செய்தது. இந்த ஓராண்டு காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அமைச்சர்கள் யார் யார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

    அதேபோன்று தனது துறைகளில் அதிக கவனம் செலுத்தாத அமைச்சர்கள் யார் யார் என்றும் முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் ஆய்வு செய்தார். இதனால் தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இதற்கிடையே தி.மு.க. இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏவை அமைச்சராக்க வேண்டும் என்று தி.மு.க மூத்த தலைவர்கள் வலியுறுத்தினார்கள். அவர்களது கருத்தை வலுப்படுத்துவது மூலம் பல்வேறு மாவட்ட தி.மு.க. அமைப்புகளில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனால் அமைச்சரவை மாற்றம் ஜூன் மாதம் இருக்கும் என்று தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் கடந்த 1, 2-ந் தேதிகளில் துறைவாரியாக ஆய்வு மேற்கொண்டார். அந்தந்த துறைகளின் செயலாளர்களிடம் எந்த எந்த திட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. எத்தனை திட்டங்கள் நிலுவையில் உள்ளன என்பதை கேட்டறிந்தார். அதன் அடிப்படையில் அமைச்சர்களின் செயல்பாடும் கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் 2 அல்லது 3 அமைச்சர்கள் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக தலைமை செயலகம் வட்டாரத்தில் பேசப்பட்டது. சில அமைச்சர்களின் இலாக்காக்களில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் திடீரென தமிழக மந்திரிசபை மாற்றம் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் தற்போது மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் தங்களது மாவட்டங்களில் இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிகள் இந்த மாதம் முழுவதும் நடைபெற உள்ளது.

    வருகிற 15-ந் தேதி வரை கருணாநிதி பிறந்தநாள் நிகழ்ச்சிகள் தினமும் நடத்த அமைச்சர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

    அமைச்சர்களின் கவனம் இதில் இருப்பதால் தற்போது மந்திரிசபை மாற்றத்தை செய்ய வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துறைவாரியான ஆய்வுகளை தொடர்ந்து அமைச்சர்கள் தங்கள் துறை பணிகளில் தீவிர ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளனர். குறிப்பாக தங்கள் துறை தொடர்பான நிலுவையில் உள்ள திட்டங்களில் தீவிர கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர்.

    மேலும் வளர்ச்சி திட்ட பணிகளிலும் அமைச்சர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். எனவே மந்திரிசபை மாற்றம் தள்ளிப்போய்விட்டதாக கூறப்படுகிறது.

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசே விடுதலை செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக முடிவெடுக்க நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூடுகிறது. #TNGovt #Release7Innocents
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டு தற்போது சிறையில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் மாநில ஆளுநர் விடுதலை செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது.

    இதனை அடுத்து, 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு உடனே முடிவெடுக்க வேண்டும் என திமுக உள்பட பல்வேறு கட்சிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இந்நிலையில், நாளை மறுநாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தில், 7 பேரின் விடுதலை குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 
    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ள நிலையில், தமிழக அரசின் சார்பில் ஒப்புதல் அளிப்பது தொடர்பாக அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தி வருகிறது. #AIIMS #TNCabinet
    சென்னை:

    மதுரை அருகே உள்ள தோப்பூரில் எய்மஸ் மருத்துவமனை கட்டப்படும் என மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது. இதற்கு, இன்னும் நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில், இதற்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக தமிழக அமைச்சரவை இன்று கூடி ஆலோசனை நடத்தி வருகிறது.

    மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனைகள் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அடிக்கல் நாட்டும் பணி, நிதி ஒதுக்கீடு, கட்டுமானப்பணிகள் முடிக்க கால வரையறை உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. 
    ×