என் மலர்
செய்திகள்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை - ஒப்புதல் அளிப்பது பற்றி தமிழக அமைச்சரவை ஆலோசனை
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ள நிலையில், தமிழக அரசின் சார்பில் ஒப்புதல் அளிப்பது தொடர்பாக அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தி வருகிறது. #AIIMS #TNCabinet
சென்னை:
மதுரை அருகே உள்ள தோப்பூரில் எய்மஸ் மருத்துவமனை கட்டப்படும் என மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது. இதற்கு, இன்னும் நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில், இதற்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக தமிழக அமைச்சரவை இன்று கூடி ஆலோசனை நடத்தி வருகிறது.
மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனைகள் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அடிக்கல் நாட்டும் பணி, நிதி ஒதுக்கீடு, கட்டுமானப்பணிகள் முடிக்க கால வரையறை உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
Next Story






