search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலையாளிகள்"

    • கடந்த 26-ந்தேதி இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
    • இதில் கீழே விழுந்த கண்ணன், சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    கடலூர்:

    நெய்வேலி வட்டம் 20-ல் வசித்து வந்தவர் கண்ணன் (வயது 56). இவர் நெய்வேலி சூப்பர் பஜாரில் பிரியாணி கடை நடத்தி வந்தார். கடந்த 26-ந்தேதி இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். நெய்வேலி நீதிமன்றம் பின்புற சாலையில் சென்ற போது, மர்ம நபர்கள் கண்ணனை சுற்றிவளைத்து சராமரியாக கத்தியால் வெட்டி தப்பிச் சென்றனர். இதில் கீழே விழுந்த கண்ணன், சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நெய்வேலி தெர்மல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கண்ணன் உடலை மீட்டு என்.எல்.சி. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக காப்பான்குளத்தை சேர்ந்த எழில் (வயது 22), நெய்வேலியை சேர்ந்த சல்மான்கான் (25) ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 2 பேரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்களை போலீசார் கடலூர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தனர்.

    • ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர் கொலை வழக்கில் கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.
    • சிசிடிவி காமிரா பதிவுகளை எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலூர்

    சிவகங்கை மாவட்டம் கட்டாணி பட்டி அருகே உள்ள பொன்குண்டு பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது55). இவர் இடத்தை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி முருகேஸ்வரி. இவர் கரூரில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மாதத்தின் பெரும்பாலான நாட்களில் சொந்த ஊரில் தங்கும் கண்ணன் மேலூருக்கு வேலை நிமித்தமாக சென்று வருவது உண்டு. அதன்படி நேற்று மதியம் கண்ணன் தனது மொபட்டில் மேலூருக்கு வந்து கொண்டிருந்தார்.

    நான்கு வழிச்சாலையில் உள்ள ஆட்டுக்குளம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கண்ணனை மறித்து சரமாரியாரக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. இதில் படுகாயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை தொடர்பாக மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரியல் எஸ்டேட் தொழில் முன்விரோதத்தில் கண்ணன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனிப்படை

    இதனிடையே கண்ண னை கொலை செய்து காரில் தப்பிய கொலை யாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் மன்னவன் (மேலூர்), சப்-இன்ஸ்பெக்டர் குமரகுரு (ஊமச்சிக்குளம்) ஆகியோர் தலைமையில் 2 தனிப்ப டைகள் அமைக்கப் பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலை நடந்த பகுதியில் பொருத்தப் பட்டிருந்த சிசிடிவி காமிரா பதிவுகளை எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    கொலையாளிகள் சிக்கிய பின்பே கொலைக்கான காரணம் தெரியவரும்.

    • கத்திக்குத்து காயங்களுடன் பாலசுப்பிரமணியனின் உடல் கிடந்தது தெரியவந்தது.
    • பாலசுப்பிரமணியனை கொன்ற கொலையாளிகள் யாரென்று தெரியவில்லை.

    திருப்பூர்:

    திருப்பூா் முதலிபாளையம் சிட்கோ பவா்காா்டன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 31). இவா் ரியல் எஸ்டேட் மற்றும் சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வந்தாா். திருமணமான இவா் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய், தந்தையருடன் தனியாக வசித்து வந்தாா்.

    இந்தநிலையில் பாலசுப்பிரமணியனின் பெற்றோா் பழனி அருகே உள்ள கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை சென்றுள்ளனா். பின்னா் புதன்கிழமை காலை இருவரும் வீடு திரும்பினர்.அப்போது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததுடன், ரத்தக்கறை இருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனர்.

    மேலும் கத்திக்குத்து காயங்களுடன் பாலசுப்பிரமணியனின் உடல் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். பின்னா் பாலசுப்பிரமணியனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

    பாலசுப்பிரமணியனை கொன்ற கொலையாளிகள் யாரென்று தெரியவில்லை. தொழில் போட்டி காரணமாக யாரேனும் பாலசுப்பிரமணியனை கொலை செய்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் கொலையாளிகளை பிடிக்க ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில்2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பாலசுப்பிரமணியன் செல்போனை கைப்பற்றி அவருடன் பேசியவர்கள் யார் யார், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக யார் யாருடன் பழக்கம் இருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.   

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசே விடுதலை செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக முடிவெடுக்க நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூடுகிறது. #TNGovt #Release7Innocents
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டு தற்போது சிறையில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் மாநில ஆளுநர் விடுதலை செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது.

    இதனை அடுத்து, 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு உடனே முடிவெடுக்க வேண்டும் என திமுக உள்பட பல்வேறு கட்சிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இந்நிலையில், நாளை மறுநாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தில், 7 பேரின் விடுதலை குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 
    ×