search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தந்தை கொலை"

    • பணத்திற்காக தந்தையை மகன் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • கொலை சம்பவம் தொடர்பாக அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து சரவணகுமாரை கைது செய்தார்.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள கோட்டைபட்டியைச் சேர்ந்தவர் குமார் போஸ் (வயது 64). மின்வாரியத்தில் போர்மேனாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் இளைய மகன் சரவணகுமார் (35) கட்டிட வேலை பார்த்து வந்தார்.

    குமார் போசுக்கு மாதந்தோறும் வரும் ஓய்வூதிய பணத்தை சரவணகுமார் பல்வேறு காரணங்களை கூறி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் தந்தை-மகனுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி வழக்கம் போல் குமார் போசுக்கு ஓய்வூதிய பணம் வந்தது. இதனை சரவணகுமார் கேட்டுள்ளார். அப்போது அவர் பணம் தர முடியாது என கண்டிப்புடன் தெரிவித்தார். இதனால் தந்தை-மகனுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது.

    நேற்று இரவு இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த சரவணகுமார் தந்தை என்றும் பாராமல் அவரை சரமாரியாக அடித்து கீழே தள்ளி காலால் மிதித்தார்.

    இதில் குமார் போஸ் படுகாயமடைந்தார். உடனே அவரது குடும்பத்தினர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குமார் போஸ் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து சரவணகுமாரை கைது செய்தார். பணத்திற்காக தந்தையை மகன் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • வத்திராயிருப்பு அருகே தந்தை கொலைக்கு பழி வாங்கிய மகன் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
    • இந்த சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள அர்ச்சனாபுரம் கிராமத்தில் மாரியப்பன் என்பவரை அதே பகுதியை சேர்ந்த முருகன் கடந்த மார்ச் மாதம் கொலை செய்தார். பின்பு முருகன் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வந்தவர் தலைமறைவாக இருந்தார்.

    தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊரான அர்ச்சுனா புரத்திற்கு முருகன் வந்தார். அவரை கொலையுண்ட மாரியப்பனின் மகன் ரஞ்சித்குமார்(வயது24),

    பேச்சியப்பன்(27), முத்துக்குமார்(20) வத்திராயிருப்பதை சேர்ந்த முத்து(40), சூர்யா(22), பால்பாண்டி(45) ஆகிய 6 பேரும் சேர்ந்து பழிக்கு பழியாக வத்திராயிருப்பு-அர்ச்சுனாபுரம் சாலையில் உள்ள வயல்வெளியில் கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.பின்னர் வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் ரஞ்சித்குமார் மட்டும் சரணடைந்தார்.

    மற்ற 5 பேரையும் வத்திராயிருப்பு போலீசார் கைது செய்தனர். உடலை மீட்ட போலீசார் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வத்திராயிருப்பு அருகே தந்தை கொலைக்கு பழி வாங்கிய மகன் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
    • இந்த சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள அர்ச்சனாபுரம் கிராமத்தில் மாரியப்பன் என்பவரை அதே பகுதியை சேர்ந்த முருகன் கடந்த மார்ச் மாதம் கொலை செய்தார். பின்பு முருகன் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வந்தவர் தலைமறைவாக இருந்தார்.

    தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊரான அர்ச்சுனா புரத்திற்கு முருகன் வந்தார். அவரை கொலையுண்ட மாரியப்பனின் மகன் ரஞ்சித்குமார்(வயது24),

    பேச்சியப்பன்(27), முத்துக்குமார்(20) வத்திராயிருப்பதை சேர்ந்த முத்து(40), சூர்யா(22), பால்பாண்டி(45) ஆகிய 6 பேரும் சேர்ந்து பழிக்கு பழியாக வத்திராயிருப்பு-அர்ச்சுனாபுரம் சாலையில் உள்ள வயல்வெளியில் கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.பின்னர் வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் ரஞ்சித்குமார் மட்டும் சரணடைந்தார்.

    மற்ற 5 பேரையும் வத்திராயிருப்பு போலீசார் கைது செய்தனர். உடலை மீட்ட போலீசார் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ராமராஜ் தனது தந்தையை அடித்து கீழே தள்ளினார்.
    • பலத்த காயமடைந்த ராமசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பழனி:

    பழனி அருகில் உள்ள அமரபூண்டியை சேர்ந்தவர் ராமசாமி(80). இவரது மகன் ராமராஜ்(50). கூலித்தொழிலாளி. ராமசாமியால் எந்த வேலைக்கும் செல்ல முடியாது என்பதால் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் இவரது மகனிடம் செலவுக்கு பணம் கேட்டு வந்துள்ளார்.

    ஆனால் அவர் பணம் தராததால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதேபோல் இன்றும் தனது மகனிடம் ராமசாமி பணம் கேட்டார். அதற்கு ராமராஜ் பணம் தர மறுத்ததுடன் தகாத வார்த்தையால் திட்டினார். அவர் பணம் தராமல் வீட்டைவிட்டு செல்லகூடாது என கூறியதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த ராமராஜ் தனது தந்தையை அடித்து கீழே தள்ளினார். பலத்த காயமடைந்த ராமசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வரும் வழியிலேயே ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து ராமராஜை கைது செய்தனர்.

    • தந்தையின் கழுத்தை அறுத்த ரத்த கறை படிந்த கத்தியுடன் தனது காதலி வீட்டுக்கு சென்ற நரசிம்மலு காதலுக்கு இடையூறாக இருந்த தனது தந்தையை வெட்டி கொலை செய்து விட்டதாக தெருவில் நின்று சத்தமிட்டார்.
    • நரசிம்மலுவின் சத்தத்தை கேட்ட அங்கிருந்தவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது சட்டை முழுவதும் ரத்தக் கறையுடன் நரசிம்மலு நின்று கொண்டு இருந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், கோசுகி நாகண்ணா காலனியை சேர்ந்தவர் வீரய்யா (வயது 45). இவரது மகன் நரசிம்மலு (23). நரசிம்மலு அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் வீரய்யாவுக்கு தெரியவந்தது.

    மகன் இளம்பெண்ணை காதல் செய்வது பிடிக்காததால் இளம்பெண் கடைக்கு, கோவிலுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் அவரை மடக்கி காதலை கைவிடுமாறு மகனின் காதலியை வீரய்யா மிரட்டி வந்தார்.

    இதனால் இளம்பெண் மிகுந்த துயரத்திற்கு ஆளானார். இதுகுறித்து தனது காதலனிடம் தெரிவித்தார்.

    அவரும் இளம்பெண்ணை சிறிது நாட்கள் பொறுத்துக் கொள்ளுமாறு சமாதானம் செய்து வந்தார்.

    இருப்பினும் வீரய்யா தொடர்ந்து காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நரசிம்மலு கத்தியை எடுத்து வந்து வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த தனது தந்தையை சரமாரியாக வெட்டினார்.

    இதில் வீரய்யா துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து தந்தையின் கழுத்தை அறுத்த ரத்த கறை படிந்த கத்தியுடன் தனது காதலி வீட்டுக்கு சென்ற நரசிம்மலு காதலுக்கு இடையூறாக இருந்த தனது தந்தையை வெட்டி கொலை செய்து விட்டதாக தெருவில் நின்று சத்தமிட்டார்.

    நரசிம்மலுவின் சத்தத்தை கேட்ட அங்கிருந்தவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது சட்டை முழுவதும் ரத்தக் கறையுடன் நரசிம்மலு நின்று கொண்டு இருந்தார்.

    அங்கிருந்த பொதுமக்கள் நரசிம்மலுவை மடக்கி பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் தன்னை பிடிக்க வந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டினார்.

    இது குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நரசிம்மலுவை பிடித்து கைது செய்து அவரது தந்தை பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • சென்னையில் கூலி தொழில் செய்து வந்த சுடலை மணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார்.
    • ரோஜாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    குரும்பூர்:

    தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள சோனாகன்விளையை சேர்ந்தவர் முத்து. (வயது 80). இவரது மனைவி ரோஜா (65). இவர்களது மகன் சுடலைமணி (48).

    சென்னையில் கூலி தொழில் செய்து வந்த சுடலை மணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். அதன்பிறகு அவர் பெற்றோருடன் தங்கி இருந்துள்ளார். நேற்று முத்துவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

    அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வது தொடர்பாக ரோஜாவுக்கும், சுடலைமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த சுடலைமணி தாய் ரோஜாவை கீழே கிடந்த கட்டையால் தாக்கி உள்ளார். இதில் அவர் காயம் அடைந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்து மகனை தடுத்தார். அப்போது சுடலைமணி கட்டையால் தந்தையையும் சரமாரியாக தாக்கினார். இதில் முத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    உடனே சுடலைமணி அங்கிருந்து தப்பியோடி விட்டார். ரோஜாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கொலை குறித்து தகவலறிந்ததும் குரும்பூர் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி தப்பியோடிய சுடலைமணியை கைது செய்தனர்.

    தந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் தகராறில் இந்த கொலை நடந்ததா? அல்லது சொத்து தகராறு காரணமாக முத்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    படிக்கவிடாமல் வீட்டுவேலை செய்யுமாறு சித்திரவதை செய்த தந்தையை கத்தியால் கத்தியால் குத்திக் கொன்ற 3 சகோதரிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
    மாஸ்கோ:

    ரஷியாவின் மாஸ்கோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 57 வயது மிக்க நபர் கடந்த மாதாம் 27-ம் தேதி உடலில் 40 இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட தடங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனை அடுத்து, முறையே 17, 18 மற்றும் 19 வயதுடைய மூன்று மகள்களையும் போலீசார் தீவிர விசாரணைக்கு உள்படுத்தினர். 

    விசாரணைக்கு பின்னர் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. படிக்கவிடாமல் என்நேரமும் வீட்டு வேலை செய்ய கூறி அவர் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்ததாகவும், ஆயுதங்களால் தாக்கியதாகவும் 3 சகோதரிகள் கூறியுள்ளனர்.

    இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர். செப்டம்பர் 28 வரை மூன்று சகோதரிகளையும் ரிமாண்ட் செய்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூவருக்கும் குறைந்தது 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. 
    ×