search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலைகள்"

    • 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
    • வணிக வரி உதவி கமிஷனர் மகேஷ் பாட்டீல் தலைமையிலான அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் உள்ள 14 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 26-ந் தேதி முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம், மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டம் பசவகல்யாண தாலுகா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மண்ணள்ளி என்ற சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அந்த லாரியில் ஏராளமான சேலைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்த பறக்கும் படையினர் லாரியை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது இந்த சேலைகள் குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்தார். மேலும் அதற்கான ஆவணங்களை கேட்டபோது அவர் இல்லை என்று தெரிவித்தார். இதையடுத்து பறக்கும் படையினர் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள சேலைகளை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதுப்பற்றி தெரியவந்ததும் வணிக வரி உதவி கமிஷனர் மகேஷ் பாட்டீல் தலைமையிலான அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வாக்காளர்களுக்கு கொடுக்க இந்த சேலைகள் கொண்டு செல்லப்பட்டதா? அல்லது கடைக்கு கொண்டு செல்லப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • குடும்ப அட்டை தரர்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலைகள் தாலுகா அலுவலகங்களுக்கு வரப்பட்டு பின்னர் வழங்கப்படும்.

    நாகர்கோவில்: தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கரும்பு, அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படுகிறது. குடும்ப அட்டை தரர்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலைகள் தாலுகா அலுவலகங்களுக்கு வரப்பட்டு பின்னர் வழங்கப்படும்.

    இதுபோல் கரும்பு, சர்க்கரை,அரிசி உள்ளிட்ட பொருட்கள் நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பிக்கப்பட்டு பின்னர் ரேஷன் கடை மூலம் விநியோக செய்யப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள வேட்டி, சேலைகள் அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்திற்கு வந்தது. அதனை அலுவலகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு அறிவித்த உடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளது.

    • குடும்ப அட்டை தாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது.
    • 84,651 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொங்கல் பண்டிகைக் காக, கிருஷ்ணகிரி தாலுகாவில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டை தாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது. இதில், சேலைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தது.

    தாசில்தார் அலுவலத் திற்கு ஒதுக்கப்பட்ட தலா ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 302 வேட்டி, சேலைகளில், 84,651 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள 32 ஆயிரத்து 651 சேலைகள் மட்டும் தாசில்தார் அலுவலகத்தில் இருப்பில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முழு ஒதுக்கீட்டிற்கு ஏற்றவாறு கடந்த 4-ந் தேதி 27 ஆயிரம் வேட்டிகளும், 5-ந் தேதி 5 ஆயிரத்து 651 வேட்டிகளும் வரப்பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று முதல் நிலுவையில் உள்ள ரேஷன் கடைகளுக்கு மீதமுள்ள இலவச வேட்டி, சேலைகள் வினியோகம் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவில்பட்டியில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மங்கையர்களுக்கு திருமாங்கல்ய பொருள்கள் வழங்கப்பட்டது.
    • பொறியாளர் தவமணி பெண்களுக்கு திருமாங்கல்ய பொருள்கள் மற்றும் சேலைகளை வழங்கினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் தமிழ்நாடுடாக்டர் சிவந்தி ஆதித்தனார்நற்பணி மன்றம் சார்பில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மங்கையர்களுக்கு திருமாங்கல்ய பொருள்கள் வழங்கப்பட்டது.

    கோவில்பட்டி வேலாயுதபுரம் அன்னை ஸ்ரீ பத்ரகாளி காளியம்மன் கோவில் முன்புநடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மன்றத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மன்ற இணைச் செயலாளர்கள் விஜயலட்சுமி, துர்கேஷ், நளினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் மன்ற உறுப்பினரும் நகர கூட்டுறவு வங்கி இயக்குனருமான லவராஜா குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். மன்ற நிர்வாகி மகாலட்சுமி வரவேற்று பேசினார். சக்கரை பொங்கலை சண்முகசுந்தரம் பக்தர்களுக்கு வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற துணைத் தலைவரும், நகர்மன்ற உறுப்பினருமான பொறியாளர் தவமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அனைத்து பெண்களுக்கும் திருமாங்கல்ய பொருள்கள் மற்றும் சேலைகளை வழங்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் நாகராஜன், திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்கள் குழு தலைவர் கன்னியம்மாள், லதா மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புதிய வடிவமைப்புகளில் சேலைகள் உற்பத்தி செய்து விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • நடப்பாண்டு தீபாவளிக்கு ரூ.13 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழக அரசின் கூட்டு றவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 87 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி பேருதவி புரிந்து வருகிறது.

    கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், காலத்திற்கேற்ற வகையில் புதிய உத்திகளை கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் சேலைகள் மற்றும் இதர ரகங்கள் உற்பத்தி செய்து தனது விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்த சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சீபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள் மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேஷ்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டு உள்ளன.

    தஞ்சாவூர் வைரைம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2022 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார்.

    கடந்த தீபாவளி 2021 பண்டிகை காலத்தில் தஞ்சாவூர் மண்டலத்தில் ரூ.7 கோடியே 49 லட்சத்து 15 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.13 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தஞ்சாவூர் வைரம் விற்பனை நிலையத்தில் கடந்த தீபாவளிக்கு ரூ.1 கோடியே 44 லட்சத்து 23-க்கு விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.1 கோடியே 70 லட்சத்துக்கு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், "கனவு நனவு திட்டம்" என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

    இதன்படி 10 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடம் இருந்து பெறப்பட்டு, 11- வது மற்றும் 12 -வது மாத சந்தா தொகையை கோ- ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 20 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் துணிகள் வழங்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

    இவ்விழாவில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ப.அம்சவேணி,

    மேலாளர் (ரகம் மற்றும் பகிர்மானம்எம்.அ ன்பழகன் ,அரசு அலுவல ர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் வைரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர்கள் எம்.ஸ்ரீதர், ஆர்.சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×