search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவன் பலி"

    • டிப்பர் லாரி மோதியது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள நெல்வாய் கிராமம் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் ரகுமான்.

    இவருடைய மகன் குகன் (வயது 8). அடுக்கம்பாறையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தான்.

    நேற்று அவரது தாத்தா தனபால் என்பவருடன் சைக்கிள் சப்தலிபுரம் அல்லி வரம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி சைக்கிள் மீது மோதியது.

    இதில் சிறுவன் குகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குகன் பரிதாபமாக இறந்தான்.

    பாகாயம் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவன், சரண் இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றனர். தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர்.
    • அனக்கப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அனக்கா பள்ளி மாவட்டம், அரபு பாலம் பகுதியை சேர்ந்தவர் கங்கு நாயுடு. ஆட்டோ டிரைவர். இவரது மகன்கள் பவன் (வயது 8), சரண் (7).

    இருவரும் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். தற்போது தேர்வுகள் முடிந்து பள்ளிக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் விடுமுறையில் வீட்டில் இருக்கும் மகன்களுக்கு நீச்சல் கற்றுத் தர வேண்டும் என கங்கு நாயுடு முடிவு செய்தார்.

    இதையடுத்து அனக்கா பள்ளி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் நீச்சல் குளத்திற்கு இருவரையும் அழைத்துச் சென்றார். முதல் நாள் பயிற்சியாளர் உதவியுடன் நீச்சல் பழக கற்றுக் கொடுத்தார்.

    நேற்று மாலை 2-வது நாளாக மகன்களை நீச்சல் குளத்துக்கு கங்கு நாயுடு தனது மகன்களுடன் சென்றார். நீச்சல் குளத்தில் நீச்சல் பழக மகன்களை இறக்கி விட்டார்.

    அப்போது பவன், சரண் இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றனர். தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கங்கு நாயுடு நீச்சல் குளத்தில் இறங்கி 2 மகன்களையும் வெளியே கொண்டு வந்தார். அவர்களுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. இருவரையும் சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு சிறுவன் பவன் இறந்து விட்டார். இதனை கண்டு கங்கு நாயுடு அழுது துடித்தார். 2-வது மகன் சரண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து அனக்கப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற மகேந்திரன் வீடு திரும்பவில்லை.
    • சிறுவன் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள இரட்டைகுளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். அவரது மகன் மகேந்திரன்(வயது 17) பார்வை திறன் குறைபாடு உடையவர்.

    அவர் 8-ம் வகுப்பு முடித்துவிட்டு கிளி, புறா உள்ளிட்டவற்றை வளர்த்து வந்துள்ளார். மேலும் கிணறு, மரங்களில் இருக்கும் புறா உள்ளிட்டவற்றை எடுத்து வீட்டில் வைத்து வளர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற மகேந்திரன் வீடு திரும்பவில்லை. இன்று அதிகாலை தேடிபார்த்தபோது அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் மகேந்திரன் இறந்து மிதந்துக்கொண்டிருந்தான்.

    உடனே சுரண்டை போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சிறுவன் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 8-வது மாடியில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சிறுவன் ராகுல் (வயது15). பணியில் ஈடுபட்டார். திடீரென அவர் தவறி கீழே விழுந்தார்.
    • ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருநின்றவூர்:

    ஆவடி அடுத்த பருத்திப்பட்டில் மத்திய அரசு ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு 3-வது கட்டமாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

    இதில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகிறார்கள். நேற்று ஊழியர்கள் வழக்கம்போல் பணியில் இருந்தனர்.

    அப்போது 8-வது மாடியில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சிறுவன் ராகுல் (வயது15). பணியில் ஈடுபட்டார். திடீரென அவர் தவறி கீழே விழுந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் உடனடியாக சிறுவன் ராகுலை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் போகும் வழியிலேயே ராகுல் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் ஆவடி போலீசார் விரைந்து வந்து சிறுவன் உடலை மீட்டு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நீச்சல் குளத்தில் கோடைகாலத்தை யொட்டி நீச்சல் பயிற்சி நடந்து வருகிறது.
    • நீச்சல் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சென்னை:

    சென்னை பெரியமேடு மைலேடி பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பழகிய 7 வயது சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவத்தையொட்டி அந்த நீச்சல் குளம் தற்காலிகமாக மூடப்பட்டது.

    சென்னை பெரியமேடு நேரு ஸ்டேடியம் அருகில் மைலேடி பூங்கா அமைந்து உள்ளது. இந்த பூங்காவில் சிறுவர்கள் நீச்சல் பழகும் பெரிய நீச்சல் குளம் உள்ளது.

    இந்த நீச்சல் குளத்தில் கோடைகாலத்தை யொட்டி நீச்சல் பயிற்சி நடந்து வருகிறது.

    தினமும் ஏராளமான சிறுவர்கள் நீச்சல் பழகி வருகிறார்கள். நேற்று முன்தினம் மாலையில் கொசப்பேட்டை ராகேஷ் என்பவரின் மகன் தேஜா (வயது 7) நீச்சல் பழகி கொண்டிருந்தான்.

    அப்போது திடீரென நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் பலியானான். இதுகுறித்து சென்னை பெரியமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து உதவி கமிஷனர் ஹரிக்குமார் தலைமையில் விசாரணை செய்து வந்தனர். இதையொட்டி நீச்சல் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த சம்பவத்தையொட்டி சென்னை மாநகராட்சி சார்பில் பெரியமேடு நீச்சல் குளத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டது. அது பற்றிய அறிவிப்பு பலகையும் அங்கு வைக்கப்பட்டு உள்ளது.

    • மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று காய்ச்சல் குறித்து கேட்டறிந்து மருந்து, மாத்திரைகள் வழங்கி வருகின்றனர்.
    • கிராமத்தில் நடந்து வரும் சுகாதார பணிகள் குறித்தும் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    திருத்தணி:

    திருத்தணி அருகே உள்ள காசிநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவரது மகன் கவின் என்கிற தேவகுமார் (7) காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 10-ந் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதை தொடர்ந்து தேவகுமாரின் சகோதரி, எழில்இனியாவுக்கும் (2) காய்ச்சல் ஏற்பட்டது. அவர் சென்னையில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் கோபிகிருஷ்ணன் தலைமையில் மருத்துவ குழுவினர், கொசு ஒழிப்பு பணியாளர்கள் காசிநாதபுரம் கிராமத்தில் முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று காய்ச்சல் குறித்து கேட்டறிந்து மருந்து, மாத்திரைகள் வழங்கி வருகின்றனர்.

    இந்த நிலையில் மாவட்ட சுகாதார துறையின் துணை இயக்குனர் ஜவகர்லால், திருத்தணி தி.மு.க., எம்.எல்.ஏ., சந்திரன், பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் கோபிகிருஷ்ணன் மற்றும் மருத்துவ ஊழியர்கள் காசிநாதபுரம் கிராமத்திற்கு நேரில் சென்று வீடு வீடாக சென்று காய்ச்சல் குறித்து கேட்டறிந்தனர்.

    மேலும் கிராமத்தில் நடந்து வரும் சுகாதார பணிகள் குறித்தும் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்ற நிலையில் 40 மணி நேர போராட்டத்திற்கு பின் சிறுவன் மீட்கப்பட்டான்.
    • பலியான சிறுவன் குடும்பத்திற்கு மத்தியபிரதேச அரசு சார்பில் ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கெர்கேடிபத்தர் கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் லோகேஷ் அகிர்வார் நேற்று அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்தான்.

    அப்போது அங்கு தோண்டப்பட்ட 60 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கும், மீட்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனை பாதுகாப்பாக காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்ட ஜேசிபி எந்திரங்கள் மூலம் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறுவனின் உடல்நிலையை கண்காணிக்க கேமிரா ஒன்று ஆழ்துளை கிணற்றில் இறக்கப்பட்டுள்ளது. தற்போது கிணற்றில் 43 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு சமீர்யாதவ் கூறுகையில், ஆழ்துளை கிணற்றில் ஆக்சிஜன் சப்ளை செய்யப்படுகிறது. இருப்பினும் சிறுவனிடம் இன்னும் பேச முடியவில்லை. சிறுவனை கண்டுபிடிக்க வெப் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்பு படையின் 3 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணியை துரிதப்படுத்தி வருகின்றனர்.

    கிணற்றுக்குள் சில அசைவுகள் தென்படுகிறது. இது சிறுவன் உயிருடன் இருப்பதற்கான அறிகுறி. கிணற்றை ஒட்டி குழி தோண்டப்பட்டு வருகிறது. விரைவில் சிறுவன் மீட்கப்படுவான் என்றார்.

    தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்ற நிலையில் 40 மணி நேர போராட்டத்திற்கு பின் சிறுவன் மீட்கப்பட்டான். உடனடியாக அவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பலியான சிறுவன் குடும்பத்திற்கு மத்தியபிரதேச அரசு சார்பில் ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சிறுவனுக்கு கயிறு மூலம் தண்ணீர் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆம்புலன்சு வாகனங்கள் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.
    • சமீப காலமாக ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழுந்து இறக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

    அகமத்நகர்:

    மத்திய பிரதேச மாநிலம் புர்கன்பூர் மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி. ஒருவர் தனது மனைவியுடன் மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகர் சோபரா கிராமத்தில் தங்கி கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

    இவர்களுடன் இருந்த 5 வயது மகன் சாகர் புத்தா பரலோ நேற்று மதியம் அங்குள்ள ஒரு விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது அவன் திடீரென மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். சுமார் 200 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளை கிணற்றின் பாதியில் சிக்கி கொண்டான். உயிர் பயத்தில் அவன் கதறி அழுதான்.

    இதைக்கேட்டு அருகில் கரும்பு வெட்டிக்கொண்டு இருந்த அவனது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து அங்கு ஓடி வந்தனர். இது பற்றி உடனே போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஜே.சி.பி. எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. சிறுவனை உயிருடன் மீட்க ஆழ்துளை கிணற்றின் அருகில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. சிறுவனுக்கு கயிறு மூலம் தண்ணீர் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆம்புலன்சு வாகனங்கள் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர். நேற்று நள்ளிரவு வரை மீட்பு பணி தொடர்ந்து நடந்தது. இரவு நேரம் என்பதால் விளக்கு வெளிச்சத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சிறுவனை காப்பாற்ற போராடினார்கள். ஆனால் அவர்களது முயற்சிக்கு பலன் அளிக்கவில்லை. சிறிது நேரம் சிறுவன் அழுதுகொண்டே இருந்தான். ஆனால் அதன் பிறகு அவனிடம் இருந்து எந்த சத்தமும் வரவில்லை.

    இன்று அதிகாலை சாகர் புத்தா பரேலா பிணமாக தான் மீட்கப்பட்டான். மகன் பிணத்தை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இது அங்கு திரண்டு இருந்த கிராம மக்களின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.

    சமீப காலமாக ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழுந்து இறக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதில் ஒரு சிலர் மட்டுமே உயிருடன் மீட்கப்படுகின்றனர்.

    • யோகேஷை நாய் கடித்தால் வீட்டில் இருந்துள்ளாா்.
    • அவிநாசி தீயணைப்புத் துறையினா் நீரில் மூழ்கி கிடந்த யோகேஷ் உடலை மீட்டனா்.

    அவினாசி :

    சேவூா் அருகே ஆலத்தூா் சங்கம்பாளையத்தை சோ்ந்த குருசாமி- ரேவதி தம்பதியின் மகன் யோகேஷ் ( வயது 12).ஆலத்தூா் அரசு நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு பயின்று வந்தாா். யோகேஷை நாய் கடித்தால் வீட்டில் இருந்துள்ளாா்.

    சம்பவத்தன்று மதியம் இவரது தாய் வெளியே சென்று விட்டு, மாலை வந்து பாா்த்த போது யோகேஷ் வீட்டில் இல்லாததால் தேடியுள்ளாா். பிறகு வீட்டிற்கு அருகே உள்ள குட்டைப் பகுதிக்கு சென்று பாா்த்தபோது அங்கு யோகேஷ் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது.அவிநாசி தீயணைப்புத் துறையினா் நீரில் மூழ்கி கிடந்த யோகேஷ் உடலை மீட்டனா். இது குறித்து சேவூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். தந்தை குருசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், மகன் யோகேஷ் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • புளியங்குடி ஊருக்கு சற்று தொலைவில் உள்ள கோவிந்தபேரி குளத்தில் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • உடனடியாக போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது குளத்தில் இறந்துகிடந்தது காணாமல் போன சிறுவன் முகமது ரஷீத் என்பது தெரியவந்தது.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி புதுமனை 1-வது தெருவை சேர்ந்தவர் அப்துல் காதர். இவர் ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் முகமது ரஷீத்(வயது 8). இவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் இருந்து வெளியே விளையாட சென்ற முகமது ரஷீத் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தனர்.

    ஆனால் எங்கு தேடியும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து புளியங்குடி போலீஸ் நிலையத்தில் அப்துல் காதர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று புளியங்குடி ஊருக்கு சற்று தொலைவில் உள்ள கோவிந்தபேரி குளத்தில் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது குளத்தில் இறந்துகிடந்தது காணாமல் போன சிறுவன் முகமது ரஷீத் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவனது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காணாமல் போன முகமது ரஷீத் தனது சக நண்பர்களுடன் சேர்ந்து விளையாட சென்ற இடத்தில் குளத்தில் தவறி விழுந்து மூழ்கி இறந்திருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சரண்குமாரை பாம்பு கடித்ததால் பலியானதாக டாக்டர்கள் கூறினர்.
    • சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கொசவன்பேட்டை ஊராட்சியைச் சேர்ந்த பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராஜகோபால் ஆவார். இவரது மகன் சரண்குமார்(வயது10). இச்சிறுவன் கவரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் அருகே சிறுவன் சரண்குமார் விளையாடிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த சரண்குமார் மயக்கமாக உள்ளது என தனது பெற்றோரிடம் கூறினான். உடனடியாக பெரியபாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், சென்னை குழந்தைகள் நல அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக கூறினர். மேலும், சரண்குமாரை பாம்பு கடித்ததால் பலியானதாக டாக்டர்கள் கூறினர். இந்த சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    • விடுதியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே சிறுவன் ராஜேஷ் விளையாடிக்கொண்டு இருந்தான்.
    • சிறுவனை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    திருப்போரூர்:

    கேளம்பாக்கத்தை அடுத்த வாணியஞ்சாவடி திருவள்ளுவர் சாலையில் தனியார் விடுதி உள்ளது. இங்கு நேபாளத்தை சேர்ந்த சூரத்பகதூர் (வயது 43) என்பவர் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ராஜேஷ் (வயது5).

    நேற்று மாலை விடுதியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே சிறுவன் ராஜேஷ் விளையாடிக்கொண்டு இருந்தான். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது அவன் மாயமானான். அவனை குடும்பத்தினர் தேடிவந்தனர்.

    இந்தநிலையில் தண்ணீர் தொட்டியில், சிறுவன் ராஜேஷ் மூழ்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவனை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சிறுவன் ராஜேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×