search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாத்தான்குளம்"

    • தசரா திருவிழாவில் சூரசம்ஹாரத்தை பார்ப்பதற்காக நாராயணன், முருகேசன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
    • அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    சாத்தான்குளம்:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள பத்மனேரி காட்டுநாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் நாராயணன் (வயது 45). அதே ஊரைச் சேர்ந்தவர் முருகேசன் (35).

    வாகனம் மோதி 2 பேர் பலி

    இவர்கள் 2 பேரும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடந்த தசரா திருவிழாவில் சூரசம்ஹாரத்தை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் புறப்பட்டனர்.

    பின்னர் அவர்கள் நள்ளிரவில் ஊருக்கு புறப்பட்டு வந்தனர். சாத்தான்குளம் அருகே முனைஞ்சிப்பட்டி செல்லும் சாலை வளைவில் சென்ற போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட நாராயணன், முருகேசன் ஆகியோர் உயிரிழந்தனர்.

    போலீசார் விசாரணை

    இது குறித்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தசரா பக்தர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தொடர்ந்து விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • புனித மிக்கேல் அதிதூதரின் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான 3-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது.
    • முதல் பரிசு ரூ.10,000 ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. சார்பில் பார்த்தசாரதி வழங்கினார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே புனித மிக்கேல் அதிதூதரின் திருவிழாவை முன்னிட்டு புனித மிக்கேல் கிரிக்கெட் கிளப் நடத்திய மாவட்ட அளவிலான 3-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இதில் முதல் பரிசை திசையன்விளை அணியும், 2-ம் பரிசை புனித மிக்கேல் கிரிக்கெட் கிளப் அணியும் தட்டிச் சென்றனர். முதல் பரிசு ரூ.10,000 தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. சார்பில் சாத்தான்குளம் வடக்கு வட்டார தலைவர் பார்த்தசாரதி வழங்கினார். நொச்சிகுளம் கிராம கமிட்டி தலைவர் அந்தோணிராஜன், சாத்தான்குளம் வடக்கு வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் லாரன்ஸ்கிளிண்டன், சாத்தான்குளம் இளைஞர் காங்கிரஸ் ஜெரால்டுரீகன் ஆகியோர் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்து வரும் சுடலைமுத்து குழந்தையை அடிக்கடி சென்று பார்த்து வருவது வழக்கம்.
    • 14-ந் தேதி சுடலைமுத்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வருவதாக தந்தையிடம் கூறி சென்றுள்ளார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள கீழக்கருங்கடலை சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது42).

    இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3ஆண்டுகளாக மனைவி மற்றும் குழந்தை பிரிந்து திருச்செந்தூரில் உள்ளார்.

    பேய்க்குளத்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்து வரும் சுடலைமுத்து குழந்தையை அடிக்கடி சென்று பார்த்து வருவது வழக்கம். மேலும் மனைவி பிரிந்து இருந்ததால் மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 14-ந் தேதி சுடலைமுத்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வருவதாக தந்தையிடம் கூறி சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. வேலைக்கும் செல்லவில்லை. உறவினர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவரது தந்தை செல்வராஜ், சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து சுடலைமுத்து எங்கு சென்றார்? என்ன ஆனார்? என விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    • கடந்த 4 ஆண்டுகளாக ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க தொடர்ந்து பனை மர விதைகளை விதைத்து வருகின்றனர்.
    • ஆய்வு பணியை மதர் சமூக சேவை நிறுவன தலைவர் வழக்கறிஞர் சதீஷ் பாலன் தொடங்கி வைத்தார்.

    சாத்தான்குளம்:

    மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் கடந்த 18 ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டத்தில் பனை மர விதைகளை தொடர்ந்து கடற்கரை, தீவு பகுதிகளிலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஆற்றங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தன்னார்வத்துடன் பனை மர விதைகளை கடந்த 18 ஆண்டுகளாக விதைத்து வருகின்றனர்.

    கடந்த 4 ஆண்டுகளாக ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க தொடர்ந்து பனை மர விதைகளை விதைத்து வருகின்றனர். தற்போது வரை 69 லட்சத்து 93 ஆயிரத்து 493 பனை மர விதைகளை விதைத்துள்ளனர்.

    இந்நிலையில் விதைக்கப்பட்ட பனைமர விதைகள் எத்தகைய அளவிற்கு முளைத்துள்ளது என்பது பற்றி கள ஆய்வு செய்யும் பணி பேய்குளம் பகுதிகளில் நடைபெற்றது. கள ஆய்வு செய்யும் பணியை மதர் சமூக சேவை நிறுவன தலைவர் வழக்கறிஞர் சதீஷ் பாலன் தொடங்கி வைத்தார்.

    மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் பனை தொழிலாளர் மேம்பாட்டு நிறுவனம் மாநில தலைவருமான கென்னடி தலைமையில் குழுவினர் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதில் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் பனைத் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநில செயலாளர் டேனியல் மோசஸ், துணைத்தலைவர் லிங்கராஜ், மதர் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளர் பானுமதி உள்பட பனை பொருள் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள், உழவர் ஆர்வலர் குழு, உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள், இளைஞர் மன்ற நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆய்வுப்பணி பேய்குளம் பகுதிகளில் தொடங்கி பழனியப்பபுரம், மீரான் குளம், கருங்கடல், பனைக்குளம் ஆகிய பகுதிகளிலும் திருச்செந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கந்தசாமிபுரம், கணேச புரம், ஆலந்தலை, குல சேகரபட்டினம், மணப்பாடு, கடற்கரை பகுதிக ளிலும், சாத்தான்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியதாழை, புத்தன் தருவை, செட்டி விளை, படுக்கப்பத்து, சங்கரன் குடியிருப்பு, ஞானியார் குடியிருப்பு, கொம்மடிக்கோட்டை, தட்டார்மடம், முதலூர், உடன்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சீர் காட்சி, தண்டபத்து, செட்டியாபத்து, லட்சுமிபுரம், மெஞ்ஞான புரம், சத்யா நகர், கல்விளை பகுதிகளிலும், கருங்குளம், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் ஒன்றியத்திற்க்குட்பட்ட பகுதிகளிலும், மேலும் கடற்கரை, ஆற்றங்கரை, வாய்க்கால்கரை, குளத்தங்கரை, சாலை ஓரங்களிலும், அரசு புறம்போக்கு இடங்களிலும், தனியார் கல்லூரி வளாகங்களிலும் கள ஆய்வு பணி நடைபெற்றது.

    • கொடைவிழாவையொட்டி காலை 9மணிக்கு தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.
    • 12மணிக்கு படப்புடன் கூடிய சாமக்கொடை நடைபெற்றது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே பெருமாள்குளம் சிவனைந்த பெருமாள் சுவாமி கோவிலில் ஆவணி கொடை விழா நடைபெற்றது. விழாவையொட்டி காலை 9மணிக்கு கலுங்காவுடையார் சாஸ்தா, வெற்றி விநாயகர், சுந்தராட்சி அம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், 12மணிக்கு கணபதி ஹோமம், கும்பம் ஏற்றுதல், தீபாராதனை, மாலை 6மணிக்கு சிவன் பூஜை, தீபாராதனை, 6.30மணிக்கு கன்னியை அழைத்து வழிபடுதல், தொடர்ந்து காவடி பிறை முருகன் கோவிலில் இருந்து நேமிசம், பால்குடம் எடுத்து வருதல், இரவு 7மணிக்கு பெண்கள் பொங்கலிடுதல், இரவு 9மணிக்கு சாஸ்தா அழைப்பு. 10மணிக்கு அலங்கார தீபாராதனை, 12மணிக்கு படப்புடன் கூடிய சாமக்கொடை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆடுகள் அப்பகுதியில் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது இடி தாக்கி 5 ஆடுகளும் இறந்து போயின.
    • தெருக்களிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் மற்றும் பன்னம்பாறை, கொம்பன் குளம், செட்டிகுளம், நெடுங்குளம், அமுத்துன்னா குடி உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராமங்களில் நேற்று மதியம் சுமார் 2 மணி நேரம் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    இதில் மந்திரம் என்பவருக்கு சொந்தமான 5 ஆடுகள் அப்பகுதியில் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது இடி தாக்கி 5 ஆடுகளும் இறந்து போயின. தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் நேரில் பார்த்து விசாரணை நடத்தினார்கள்.

    மேலும் சாத்தான்குளம் பேரூராட்சியில் உள்ள 15-வது வார்டு தெருக்களிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கழிவுநீர் கானல்களில் தேங்கி நின்ற மழை தண்ணீரை பேரூராட்சி பணியினர் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    • மழை நீர் தேங்கி சாலைகளில் ஓடுவதால் பல சாலைகளில் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.
    • பேரூராட்சி மன்ற அலுவலகம் எதிரிலே கழிவுநீர் தேங்கி சேறும், சகதியாக உள்ளது என பொதுமக்கள் பார்த்து ஆதங்கப்பட்டு செல்கின்றனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன.

    சேறு-சகதி

    இந்த வார்டுகளில் உள்ள கழிவுநீர் சானல்களில் மழை நீர் தேங்கி சாலைகளில் ஓடுவதால் பல சாலைகளில் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. நடந்து செல்பவர்களும் வாகனங்களில் செல்பவர்களும் சற்று கவனக்குறைவாக சென்றால் சகதியில் சிக்கி வழுக்கி கீழே விழும் அபாய நிலையில் உள்ளது.

    மேலும் பல வார்டுகளில் உள்ள சாலைகளிலும், மெயின் பஜார் சாலைகளிலும் உள்ள கழிவுநீர் சானல்கள் பாதி அளவு கட்டப்பட்டு பாதி அளவு உடைந்து போன நிலையில் உள்ளதால் சானலில் தேங்கும் கழிவுநீர் சாலைகளில் ஓடுகிறது. இதனால் சாலைகளில் செல்லும் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர். சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    பேரூராட்சி நிர்வாக த்தினர் இது குறித்து கண்டு கொள்ளவே இல்லை. உடைந்து போன பல கழிவுநீருக்கானல்களை சிமெண்டால் பூசி இன்னும் சரி செய்யப்படவில்லை. மேலும் சாத்தான்குளம் பேரூராட்சி மன்ற அலுவலகம் உள்ள மேல சாத்தான்குளம் சாலைகளின் இரு கரையோரங்களில் சேறும், சகதியுமாக உள்ளது. மேலும் பேரூராட்சி மன்ற அலுவலகம் எதிரிலே கழிவுநீர் தேங்கி சேறும், சகதியாக உள்ளது என பொதுமக்கள் பார்த்து ஆதங்கப்பட்டு செல்கின்றனர்.

    குறைகளை பேரூராட்சி நிர்வாக அதிகாரிகளுடைய கவனத்திற்கு கொண்டு சென்றால் அது குறித்து நடவடிக்கை எடுக்காமல் கண்டு கொள்வதே இல்லை. தொடர்ந்து இப்படி சானல்கள் உடைபட்டு கொண்டு இருந்தால் சாத்தான்குளம் நகரிலுள்ள கழிவுநீர் சானல்களில் தேங்கியுள்ள கழிவு நீர் அனைத்தும் சாலைகளில் தேங்கி பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என பொதுமக்கள் குறை கூறி வருகின்றனர்.

    பேரூராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக உடைபட்ட கானல்களின் பாதைகளை சிமிண்டால் கட்டி சீரைமைக்கா விட்டால் 15வார்டு பொதுமக்களையும் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று நகர ம.தி.மு.க. செயலாளர் ஜெயராஜன் கூறியுள்ளார்.

    • பெரிய மாட்டு வண்டி போட்டியினை மாநில முன்னாள் ரேக்ளா பந்தய சங்கத் தலைவர் மோகன் சாமி குமார் தொடங்கி வைத்தார்.
    • விழாவிற்கு பன்னம்பாறை பஞ்சாயத்து தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருேக உள்ள பன்னம்பாறையில் முரம்படி சுடலை தளவாய் மாடசாமி கோவில் கொடை விழாவையொட்டி பெரிய, சிறிய மாட்டு வண்டிகள் போட்டிகள் நடந்தன.

    பன்னம்பாறையில் இருந்து மெய்ஞானபுரம் வரை 7 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த போட்டி யில் 12 பெரிய மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

    இதே போல் பன்னம்பாறை யில் இருந்து நங்கமொழி வரை சிறிய மாட்டு வண்டிகளுக்கு நடை பெற்ற போட்டியில் 30 வண்டி போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

    பெரிய மாட்டு வண்டி போட்டியினை மாநில முன்னாள் ரேக்ளா பந்தய சங்கத் தலைவர் மோகன் சாமி குமார் தொடங்கி வைத்தார். சிறிய மாட்டு வண்டி போட்டியினை பன்னம்பாறை பஞ்சாயத்து தலைவர் அழகேசன் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

    போட்டி தொடங்கிய சில நொடிகளில் வண்டியில் பூட்டிய மாடுகள் பந்தைய இலக்கை நோக்கி சீறி பாய்ந்தன.

    பெரிய மாட்டு வண்டி போட்டியில் அவனியாபுரம் மோகன் சாமி குமார் காளை கள் முதல் பரிசை பெற்றன. 2-ம் பரிசை நாலாம் துலா மெடிக்கல் விஜயகுமார் காளைகளும், 3-ம் பரிசை வேலன்குளம் கண்ணன் காளைகளும் பெற்றன.

    சிறிய மாட்டு வண்டி போட்டிகள் இரு பிரிவுகளாக பிரித்து நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசு மறுகால் குறிச்சி சுப்பம்மாள் காளைகளுக்கும், சண்முகம் மெடிக்கல்ஸ் விஜயகுமார் காளைகளுக்கு 2-ம் பரிசும், வள்ளியூர் ஆண்டி காளைகளுக்கு 3-ம் பரிசும் கிடைத்தன.

    வெற்றி பெற்றவர்களுக்கு சுடலை தளவாய் மாடசாமி கோவில் வளாகத்தில் வைத்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பன்னம்பாறை பஞ்சாயத்து தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார்.

    பெரிய வண்டியில் முதல் பரிசு பெற்ற காளை உரிமையாளருக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வழங்கிய ரூ.50 ஆயிரத்தை சாத்தான்குளம் வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் பார்த்தசாரதி வழங்கினார். அவருக்கு வெற்றி கோப்பையினை நெல்லை மாநகர துணை மேயர் கே.ஆர்.ராஜூ வழங்கினார்.

    2-ம் பரிசு பெற்ற காளை உரிமையாளருக்கு பன்னம்பாறை பஞ்சாயத்து தலைவர் அழகேசன், ரூ.40 ஆயிரம் ரொக்கமும், வெற்றி கோப்பையையும் வழங்கினார்.

    போட்டிகளில் முதல் கொடியை பெற்றவர்களுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதி சுந்தர் செல்போன்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் வழக்கைகிணறு சுப்பையா, சாத்தான்குளம் நகர காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் கதிர்வேல், காங்கிரஸ் பிரமுகர்கள் அகஸ்டின், மணி, பவுல், அ.தி.மு.க. பிரமுகர் பரமசிவ பாண்டியன், வியாபார சங்கத் தலைவர் சசிகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சுடலை நன்றி கூறினார்.

    • 15-வது வார்டு தெருக்களிலும் மெயின் ரோட்டில் உள்ள கானல்களிலும் மண்மூடி இருப்பதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் அடித்து வருகிறது.
    • பழுதுபட்ட சாக்கடை கால்வாய்களை சீரமைத்து தேங்கியுள்ள கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பகுதியில் கழிவுநீர் செல்லும் சாக்கடை கால்வாய்கள் சேதமடைந்தும், உடைந்தும் உள்ளதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசிவருகிறது.

    முதலூர்ரோடு மெயின் பஜாரில் அதிக அளவில் கடைகள், உணவகங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இதனால் கழிவுநீர் செல்லும் இந்த சாலையில் உள்ள கானல்களில் பாதி அளவு கட்டப்படாமல் பழுது ஏற்பட்டு சகதி தண்ணீர் தேங்கி இருப்பதால் மிகவும் அவதிப்படுகின்றனர்.

    இது தொடர்பாக சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் புகார் கூறியும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது போன்று 15-வது வார்டு தெருக்களிலும் மெயின் ரோட்டில் உள்ள கானல்களிலும் மண்மூடி இருப்பதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் அடித்து வருகிறது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பழுதுபட்ட சாக்கடை கால்வாய்களையும், பாதி கட்டி முடிக்காமல் உள்ள சாக்கடைகளையும் சீரமைத்து தேங்கியுள்ள கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆனந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் ரத்த அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    சாத்தான்குளம்:

    தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் தூத்துக்குடி சுகாதார பணிகளின் பொற்செல்வன் உத்தரவின் பேரில் சாத்தான்குளம் அருகே ஆனந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் பண்டாரபுரம் சத்தியநகரம் டி.என்.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் சுகாதார ஆய்வாளர் மந்திர ராஜன் வரவேற்று பேசினார்.

    வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஐலின் சுமதி திட்ட விளக்க உரையாற்றினார். சத்தியநகரம் சேகர குரு மர்காசிஸ் டேவிட் வெஸ்லி ஜெபம் செய்து முகாமை தொடங்கி வைத்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோரிஸ் செல்வதுரை நன்றி கூறினார்.

    முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை, கொலஸ்டிரால் பரிசோதனை, கொரோனா சளி பரிசோதனை, கொரோனா தடுப்பூசி ரத்த அளவு பரிசோதனை செய்யப்பட்டது. 

    • விசாரணையில் இடைச்சிவிளை பகுதியை சேர்ந்த பிரபாகரன் தாமரை புஷ்பத்தின் தங்க தாலி செயினை திருடியது தெரியவந்தது.
    • பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் பிரபாகரன் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

    சாத்தான்குளம்:

    தட்டார்மடம் அருகே உள்ள இடைச்சிவிளை நல்லம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் தவசி மணி மனைவி தாமரைபுஷ்பம் (வயது65).

    நகை பறிப்பு

    இவர் கடந்த மே 25-ந் தேதி இரவு வீட்டின் முன்பு படுத்து தூங்கி கொண்டு இருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் அவரது கழுத்தில் இருந்த 3 ½ பவுன் தங்க தாலி செயினை பறித்து சென்றார்.

    இச்சம்பவம் தொடர்பாக தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்கபக்டர்டேவிட் கிறிஸ்துராஜ் உள்ளிட்ட தனிப் படையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

    வாலிபர் கைது

    அதில் தட்டார்மடம் இடைச்சிவிளை பகுதியை சேர்ந்த பிரபாகரன் (35) என்பவர் தாமரை புஷ்பத்தின் தங்க தாலி செயினை திருடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை யடுத்து அவரிடமிருது 8 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்ய்பட்டது.

    திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட பிரபாகரனை கைது செய்து தங்க நகைகளை மீட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.

    • காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு, ஓவியம் மற்றும் மாறுவேட போட்டிகள் நடந்தது.
    • இதில் 16 பள்ளிகளில் இருந்து 500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு 17-ந்தேதி நடக்கும் காமராஜர் பிறந்த நாள் விழாவில் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் வட்டார பெருந்தலைவர் காமராஜர் இயக்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அப்பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு, ஓவியம் மற்றும் மாறுவேட போட்டிகள் நடந்தது.

    ஓவியம், மாறுவேட போட்டிகள் சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ. புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலை பள்ளிலும், மாரியம்மன் இந்து மேல்நிலைப்பள்ளியிலும் கட்டுரை போட்டியும், ஹென்றி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும் பேச்சு போட்டியும் நடத்தப்பட்டது.

    இதில் சாத்தான்குளத்தில் உள்ள 16 பள்ளிகளில் இருந்து 500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு 17-ந்தேதி நடக்கும் காமராஜர் பிறந்த நாள் விழாவில் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    போட்டிக்கான ஏற்பாடுகளை ஜான்ராஜா, ராஜேஷ், வேணுகோபால், நேசக்குமார், சுடலைமணி,அருண்குமார், ஏசா,விஜேந்திர பாண்டியன், ஜெபாஸ் ,முத்து சோபன், கண்ணன், முத்துவேல், பாலா , ஆசிர்வாதம் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×