search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தான்குளம் அருகே மாட்டு வண்டிகள் போட்டி-  காளைகள் சீறி பாய்ந்தன
    X

    வெற்றி பெற்ற காளை உரிமையாளருக்கு பஞ்சாயத்து தலைவர் அழகேசன் தலைமையில் பரிசு வழங்கப்பட்ட காட்சி.

    சாத்தான்குளம் அருகே மாட்டு வண்டிகள் போட்டி- காளைகள் சீறி பாய்ந்தன

    • பெரிய மாட்டு வண்டி போட்டியினை மாநில முன்னாள் ரேக்ளா பந்தய சங்கத் தலைவர் மோகன் சாமி குமார் தொடங்கி வைத்தார்.
    • விழாவிற்கு பன்னம்பாறை பஞ்சாயத்து தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருேக உள்ள பன்னம்பாறையில் முரம்படி சுடலை தளவாய் மாடசாமி கோவில் கொடை விழாவையொட்டி பெரிய, சிறிய மாட்டு வண்டிகள் போட்டிகள் நடந்தன.

    பன்னம்பாறையில் இருந்து மெய்ஞானபுரம் வரை 7 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த போட்டி யில் 12 பெரிய மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

    இதே போல் பன்னம்பாறை யில் இருந்து நங்கமொழி வரை சிறிய மாட்டு வண்டிகளுக்கு நடை பெற்ற போட்டியில் 30 வண்டி போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

    பெரிய மாட்டு வண்டி போட்டியினை மாநில முன்னாள் ரேக்ளா பந்தய சங்கத் தலைவர் மோகன் சாமி குமார் தொடங்கி வைத்தார். சிறிய மாட்டு வண்டி போட்டியினை பன்னம்பாறை பஞ்சாயத்து தலைவர் அழகேசன் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

    போட்டி தொடங்கிய சில நொடிகளில் வண்டியில் பூட்டிய மாடுகள் பந்தைய இலக்கை நோக்கி சீறி பாய்ந்தன.

    பெரிய மாட்டு வண்டி போட்டியில் அவனியாபுரம் மோகன் சாமி குமார் காளை கள் முதல் பரிசை பெற்றன. 2-ம் பரிசை நாலாம் துலா மெடிக்கல் விஜயகுமார் காளைகளும், 3-ம் பரிசை வேலன்குளம் கண்ணன் காளைகளும் பெற்றன.

    சிறிய மாட்டு வண்டி போட்டிகள் இரு பிரிவுகளாக பிரித்து நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசு மறுகால் குறிச்சி சுப்பம்மாள் காளைகளுக்கும், சண்முகம் மெடிக்கல்ஸ் விஜயகுமார் காளைகளுக்கு 2-ம் பரிசும், வள்ளியூர் ஆண்டி காளைகளுக்கு 3-ம் பரிசும் கிடைத்தன.

    வெற்றி பெற்றவர்களுக்கு சுடலை தளவாய் மாடசாமி கோவில் வளாகத்தில் வைத்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பன்னம்பாறை பஞ்சாயத்து தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார்.

    பெரிய வண்டியில் முதல் பரிசு பெற்ற காளை உரிமையாளருக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வழங்கிய ரூ.50 ஆயிரத்தை சாத்தான்குளம் வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் பார்த்தசாரதி வழங்கினார். அவருக்கு வெற்றி கோப்பையினை நெல்லை மாநகர துணை மேயர் கே.ஆர்.ராஜூ வழங்கினார்.

    2-ம் பரிசு பெற்ற காளை உரிமையாளருக்கு பன்னம்பாறை பஞ்சாயத்து தலைவர் அழகேசன், ரூ.40 ஆயிரம் ரொக்கமும், வெற்றி கோப்பையையும் வழங்கினார்.

    போட்டிகளில் முதல் கொடியை பெற்றவர்களுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதி சுந்தர் செல்போன்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் வழக்கைகிணறு சுப்பையா, சாத்தான்குளம் நகர காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் கதிர்வேல், காங்கிரஸ் பிரமுகர்கள் அகஸ்டின், மணி, பவுல், அ.தி.மு.க. பிரமுகர் பரமசிவ பாண்டியன், வியாபார சங்கத் தலைவர் சசிகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சுடலை நன்றி கூறினார்.

    Next Story
    ×