search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தான்குளத்தில் சாலைகளில் தேங்கிய கழிவுநீரால் சுகாதார சீர்கேடு அபாயம் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
    X

    தேங்கியுள்ள சாக்கடை கழிவுகள்.

    சாத்தான்குளத்தில் சாலைகளில் தேங்கிய கழிவுநீரால் சுகாதார சீர்கேடு அபாயம் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

    • 15-வது வார்டு தெருக்களிலும் மெயின் ரோட்டில் உள்ள கானல்களிலும் மண்மூடி இருப்பதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் அடித்து வருகிறது.
    • பழுதுபட்ட சாக்கடை கால்வாய்களை சீரமைத்து தேங்கியுள்ள கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பகுதியில் கழிவுநீர் செல்லும் சாக்கடை கால்வாய்கள் சேதமடைந்தும், உடைந்தும் உள்ளதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசிவருகிறது.

    முதலூர்ரோடு மெயின் பஜாரில் அதிக அளவில் கடைகள், உணவகங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இதனால் கழிவுநீர் செல்லும் இந்த சாலையில் உள்ள கானல்களில் பாதி அளவு கட்டப்படாமல் பழுது ஏற்பட்டு சகதி தண்ணீர் தேங்கி இருப்பதால் மிகவும் அவதிப்படுகின்றனர்.

    இது தொடர்பாக சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் புகார் கூறியும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது போன்று 15-வது வார்டு தெருக்களிலும் மெயின் ரோட்டில் உள்ள கானல்களிலும் மண்மூடி இருப்பதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் அடித்து வருகிறது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பழுதுபட்ட சாக்கடை கால்வாய்களையும், பாதி கட்டி முடிக்காமல் உள்ள சாக்கடைகளையும் சீரமைத்து தேங்கியுள்ள கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×