search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாட்டு வண்டிகள்"

    மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது

    கடலூர்:

    ராமத்தில் உள்ள வெள்ளாற்றில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் அரசு அனுமதியின்றி மணல் எடுப்பதாக புகார் வந்ததை அடுத்து நேற்று நள்ளிரவு ஆவினங்குடி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வெள்ளாற்றில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு வந்த தொளார் கிராமத்தை சேர்ந்த பிச்சப்பிள்ளை (வயது 45), ராஜசேகரன் (45), கொடிகளம் கிராமத்தைச் சேர்ந்த அழகரசன் 25, கூடலூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் (33) ஆகிய 4 பேரும் மாட்டு வண்டியில் மணல் அள்ளி வரும் பொழுது கையும் கழுவுமாக பிடிபட்டனர். 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, கைது செய்த போலீசார் நான்கு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    • 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் சப் - இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கோவில் தேவராயன்பேட்டை பகுதியில் குடமுருட்டி ஆற்றில் இருந்து அரசு அனுமதி இன்றி 2 மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்தனர்.

    2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் மாட்டு வண்டி ஓட்டி வந்த கோவில் தேவராயன் பேட்டை பார்வதிபுரத்தை சேர்ந்த சுரேஷ் ( வயது -38) என்பவரை கைது செய்தனர்.தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்

    • இன்றைய நவீன கால சூழலில் உழவுத் தொழிலுக்கும், வேளாண்மை சார்ந்த போக்குவரத்துக்கும், நவீன எந்திரங்களும் வாகனங்களுமே பயன்படுத்தப்படுகிறது.
    • இதனால் கிராமப்புறங்களில் வீடுகள் தோறும் இருந்த கட்டை மாட்டு வண்டிகள், தற்போது பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது.

    வாழப்பாடி:

    இன்றைய நவீன கால சூழலில் உழவுத் தொழி லுக்கும், வேளாண்மை சார்ந்த போக்குவரத்துக்கும், நவீன எந்திரங்களும் வாகனங்களுமே பயன்படுத்தப்படுகிறது. இதனால் கிராமப்புறங்களில் வீடுகள் தோறும் இருந்த கட்டை மாட்டு வண்டிகள், தற்போது பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது. மாட்டுவண்டிகள் தற்கால குழந்தைகள் காண்பதற்கே அரிதாகி விட்டது.

    கடந்த 20 ஆண்டுகளில் அறிவியல் முன்னேற்றம், புதிய கண்டுபிடிப்புகளால் மற்ற துறைகளைப் போலவே, வேளாண்மைத் துறையிலும் நவீன கருவிகள், எந்திரங்கள் மற்றும் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

    இதனால், ஏர் உழுதல், தண்ணீர் இரைத்தல், நாட்டு நடவு செய்தல், களையெடுத்தல், அறுவடை செய்தல், விவசாய விளை பொருட்களை ஏற்றிச் செல்லல், கதிரடித்து துாற்றி தானியங்களை பிரித்தெ டுப்பதல், வைக்கோல் சுற்றுதல் உள்ளிட்ட அனைத்து வேளாண்மை சார்ந்த பணிகளுக்கும், காளைகளையும், கட்டை மாட்டு வண்டிகளையும் பயன்படுத்துவது படிப்படியாக குறைந்து தற்போது வழக்கொழிந்து போனது.

    குறிப்பாக, கட்டை வண்டிகளுக்கும் மாற்றாக, டிராக்டர், டெம்போ போன்ற வாகனங்களும், கதிர் அறுவடைக்கு எந்திரங்க ளுமே பயன்படுத்தப்படுகிறது.

    சமீப காலமாக, தமிழகத்தில் குக்கிரா மங்களிலும் கூட காளைகளை பூட்டி ஏர் உழவதும், கட்டை மாட்டு வண்டியில் விளை பொருட்களை ஏற்றிச் செல்வதும் பயன்பாட்டில் இல்லை. தற்கால குழந்தைகள் காண்பதற்கே கட்டை மாட்டு வண்டிகள் அரிதாகி விட்டது.

    சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி பகுதி கிரா மங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஓரிரு கட்டை மாட்டு வண்டிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அவ்வப்போது தார்சாலையில் செல்லும் மாடு பூட்டிய கட்டை வண்டிகளை தற்கால குழந்தைகள் வியப்போடு பார்த்து செல்கின்றனர்.

    இதுகுறித்து பாரம்பரிய ஆர்வலர் கலைச்செல்வி கூறியதாவது:-

    தமிழக கிராமப்புற விவசாயிகளின் பாரம்பரிய சின்னமாக கட்டை மாட்டு வண்டிகள் திகழ்ந்து வந்தன. காலத்திற்கேற்ப நவீன கருவிகள், எந்திரங்கள், வாகனங்களின் வருகை மிகவும் அவசியம் என்ற போதிலும், நமது பாரம்பரிய சின்னமான கட்டை மாட்டு வண்டிகளின் பயன்பாடு மற்றும் வாகனங்களின் பரிணாம வளர்ச்சியில் இதன் பங்கு குறித்து, தற்கால குழந்தைகள் அறிந்து கொள்வதற்காகவது, கட்டை மாட்டு வண்டிகள் பயன்பாட்டில் இருந்து மறைந்து போகாமல் காக்க வேண்டியது அவசியமாகும்.

    களைச்செடிகள், கதிர் அறுவடை செய்யப்பட்ட வைக்கோல், அரிசி எடுக்கப்பட்ட நெல் தவிடு, எண்ணை எடுக்கப்பட்ட பிண்ணாக்கு ஆகியவற்றை உணவாக எடுத்துக் கொண்டு உழைக்கும் காளைகளையும், எவ்வித எரிபொருள் செலவுமின்றி போக்குவரத்துக்கு பயன்படும் கட்டை வண்டிகளையும் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர, ஆர்வமுள்ள விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு அரசு மானிய விலையில் வழங்கி, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊக்குவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிகாலை 2 மாட்டு வண்டிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக்கொண்டிருந்தனர் .
    • சப் -இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மாட்டு வண்டி உரிமையாளர்களை தேடி வருகின்றார் .

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அன்றாயநல்லூர் கிராமத்தில் உள்ள கோரை ஆற்றில் அதிகாலை 2 மாட்டு வண்டிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக்கொண்டிருந்தனர் .

    அந்தப் பகுதியாக ரோந்து சென்ற திருவெண்ணைநல்லூர் சப் -இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மணல் திருடர்களை மடக்கிப் பிடிக்க முயன்றபோது தப்பி ஓடி விட்டனர். 2மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த சப் -இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மாட்டு வண்டி உரிமையாளர்களை தேடி வருகின்றார் .

    • விருத்தாசலத்தில் மணல் கடத்தய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • மணிமுக்தாற்றில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தி கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    கடலூர்:

    விருத்தாசலம் மணிமுக்தாற்றில் மணல் திருட்டு சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்தியுள்ள போதும், மணல் கடத்தல்காரர்கள் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவது நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு மணிமுக்தாற்றில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தி கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்டுடவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் மாட்டு வண்டிகளை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனையடுத்து மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 3 டயர் வண்டிகள் மற்றும் மாடுகளை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.இது குறித்து விருத்தாசலம் போலீசார் மணல் திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரிய மாட்டு வண்டி போட்டியினை மாநில முன்னாள் ரேக்ளா பந்தய சங்கத் தலைவர் மோகன் சாமி குமார் தொடங்கி வைத்தார்.
    • விழாவிற்கு பன்னம்பாறை பஞ்சாயத்து தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருேக உள்ள பன்னம்பாறையில் முரம்படி சுடலை தளவாய் மாடசாமி கோவில் கொடை விழாவையொட்டி பெரிய, சிறிய மாட்டு வண்டிகள் போட்டிகள் நடந்தன.

    பன்னம்பாறையில் இருந்து மெய்ஞானபுரம் வரை 7 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த போட்டி யில் 12 பெரிய மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

    இதே போல் பன்னம்பாறை யில் இருந்து நங்கமொழி வரை சிறிய மாட்டு வண்டிகளுக்கு நடை பெற்ற போட்டியில் 30 வண்டி போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

    பெரிய மாட்டு வண்டி போட்டியினை மாநில முன்னாள் ரேக்ளா பந்தய சங்கத் தலைவர் மோகன் சாமி குமார் தொடங்கி வைத்தார். சிறிய மாட்டு வண்டி போட்டியினை பன்னம்பாறை பஞ்சாயத்து தலைவர் அழகேசன் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

    போட்டி தொடங்கிய சில நொடிகளில் வண்டியில் பூட்டிய மாடுகள் பந்தைய இலக்கை நோக்கி சீறி பாய்ந்தன.

    பெரிய மாட்டு வண்டி போட்டியில் அவனியாபுரம் மோகன் சாமி குமார் காளை கள் முதல் பரிசை பெற்றன. 2-ம் பரிசை நாலாம் துலா மெடிக்கல் விஜயகுமார் காளைகளும், 3-ம் பரிசை வேலன்குளம் கண்ணன் காளைகளும் பெற்றன.

    சிறிய மாட்டு வண்டி போட்டிகள் இரு பிரிவுகளாக பிரித்து நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசு மறுகால் குறிச்சி சுப்பம்மாள் காளைகளுக்கும், சண்முகம் மெடிக்கல்ஸ் விஜயகுமார் காளைகளுக்கு 2-ம் பரிசும், வள்ளியூர் ஆண்டி காளைகளுக்கு 3-ம் பரிசும் கிடைத்தன.

    வெற்றி பெற்றவர்களுக்கு சுடலை தளவாய் மாடசாமி கோவில் வளாகத்தில் வைத்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பன்னம்பாறை பஞ்சாயத்து தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார்.

    பெரிய வண்டியில் முதல் பரிசு பெற்ற காளை உரிமையாளருக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வழங்கிய ரூ.50 ஆயிரத்தை சாத்தான்குளம் வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் பார்த்தசாரதி வழங்கினார். அவருக்கு வெற்றி கோப்பையினை நெல்லை மாநகர துணை மேயர் கே.ஆர்.ராஜூ வழங்கினார்.

    2-ம் பரிசு பெற்ற காளை உரிமையாளருக்கு பன்னம்பாறை பஞ்சாயத்து தலைவர் அழகேசன், ரூ.40 ஆயிரம் ரொக்கமும், வெற்றி கோப்பையையும் வழங்கினார்.

    போட்டிகளில் முதல் கொடியை பெற்றவர்களுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதி சுந்தர் செல்போன்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் வழக்கைகிணறு சுப்பையா, சாத்தான்குளம் நகர காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் கதிர்வேல், காங்கிரஸ் பிரமுகர்கள் அகஸ்டின், மணி, பவுல், அ.தி.மு.க. பிரமுகர் பரமசிவ பாண்டியன், வியாபார சங்கத் தலைவர் சசிகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சுடலை நன்றி கூறினார்.

    ×