என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தான்குளம் அருகே மாயமான பெட்ரோல் பங்க் ஊழியர் எங்கே?- போலீசார் விசாரணை
    X

    சாத்தான்குளம் அருகே மாயமான பெட்ரோல் பங்க் ஊழியர் எங்கே?- போலீசார் விசாரணை

    • பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்து வரும் சுடலைமுத்து குழந்தையை அடிக்கடி சென்று பார்த்து வருவது வழக்கம்.
    • 14-ந் தேதி சுடலைமுத்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வருவதாக தந்தையிடம் கூறி சென்றுள்ளார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள கீழக்கருங்கடலை சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது42).

    இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3ஆண்டுகளாக மனைவி மற்றும் குழந்தை பிரிந்து திருச்செந்தூரில் உள்ளார்.

    பேய்க்குளத்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்து வரும் சுடலைமுத்து குழந்தையை அடிக்கடி சென்று பார்த்து வருவது வழக்கம். மேலும் மனைவி பிரிந்து இருந்ததால் மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 14-ந் தேதி சுடலைமுத்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வருவதாக தந்தையிடம் கூறி சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. வேலைக்கும் செல்லவில்லை. உறவினர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவரது தந்தை செல்வராஜ், சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து சுடலைமுத்து எங்கு சென்றார்? என்ன ஆனார்? என விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×