search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சம்பளம்"

    • திருமூர்த்தி மற்றும் அவரது தந்தை ஆறுச்சாமி ஆகியோரை இரும்புகம்பியால் தாக்கியுள்ளார்.
    • பல்லடம் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள வேலப்பகவு ண்டம்பா ளையத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி( வயது 30). இவர் அதே ஊரைச் சேர்ந்த சதீஷ் என்பவரது பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களாக சம்பள பாக்கி இருந்துள்ளது. எனவே சம்பள பாக்கியை கேட்பதற்காக சதீஷின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ள்ளது. அப்ேபாது சதீஷின் உறவினரான பாலசு ப்பிரமணியம் என்பவர் திருமூர்த்தி மற்றும் அவரது தந்தை ஆறுச்சாமி ஆகி யோரை இரும்புகம்பியால் தாக்கியுள்ளார். இதில் ஆறுச்சாமியின் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. திருமூர்த்திக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாகஅருகில் இருந்தவர்கள் காயமடைந்த இருவரையும் உடனடியாக பல்லடம் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனை க்குஅனுப்பிவைக்க ப்பட்டனர்.இது குறித்த புகாரின் பேரில் காமநாயக்க ன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாத்திர தொழிலாளர்களின் கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 31-ந் தேதியுடன் நிறைவடைந்தது.
    • தலா 7 சதவீதம் கூலி உயர்வு வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் அனுப்பர்பாளையம் பாத்திர தொழிலாளர்களின் கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 31-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து புதிய கூலி உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துமாறு பாத்திர உற்பத்தியாளர்களுக்கு அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டி அழைப்பு விடுத்தது. இதையடுத்து தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் முன்னிலையில் பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதுவரை எவர்சில்வர் மற்றும் பித்தளை, செம்பு உற்பத்தியாளர் தலா 7 சதவீதம் கூலி உயர்வு வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால் கூடுதல் சதவீதம் கூலி உயர்வு வழங்க முடியாது என்று கூறி பாத்திர உற்பத்தியாளர்கள் தொடர்ந்து மவுனம் காத்து வருகின்றனர். இந்த நிலையில் பேச்சுவார்த்தை தொடர்பான முழுவிவரங்களையும் பாத்திர தொழிலாளர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் விளக்கக்கூட்டம் அனுப்பர்பாளையம் - ஆத்துப்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் எச்.எம்.எஸ்., சங்கத்தின் மாநில செயலாளர் ராஜாமணி கலந்து கொண்டு தொழிலாளர்களின் கூலி உயர்வு தொடர்பாக வாழ்த்தி பேசினார். மேலும் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி தரப்பினரும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பெரும்பாலான தொழிலாளர்கள், வேலை நிறுத்தம் இல்லாமலேயே தொழிற்சங்கங்கள் விரைவாக பேச்சுவார்த்தை நடத்தி போதிய கூலி உயர்வு பெற்றுத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இந்த கூட்டத்தின் முடிவில் இன்று (சனிக்கிழமை) எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர்களுடனும், வரும் திங்கட்கிழமை பித்தளை, செம்பு உற்பத்தியாளர்களுடனும், வரும் செவ்வாய்கிழமை தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் முன்னிலையில் நடைபெறும் பேச்சுவார்த்தையின் முடிவில் எடுக்கப்படும் முடிவுகளை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி அறிவித்தது.இந்த கூட்டத்தில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பாத்திர தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பிரபல டைரக்டர் டைரக்ட் செய்து வரும் சினிமா படத்தின் வெளிப்புறபடபிடிப்பு நடந்து வருகிறது.
    • பொறுப்பாளரிடம் வழங்கி விட்டதாக தெரிய வந்துள்ளது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பிரபல டைரக்டர் டைரக்ட் செய்து வரும் சினிமா படத்தின் வெளிப்புறபடபிடிப்பு நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு உள்ள பகுதியிலும் கடற்கரை சாலை பகுதியிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

    இந்த நிலையில் இந்த சினிமா படத்தில் நடித்த துணை நடிகைகள் தங்களுக்கு சம்பளம்தரவில்லை என்று கூறி இன்று காலை கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுடன் 2 துணை நடிகர்களும் வந்தனர்.

    இது பற்றி அந்த 2 துணை நடிகைகளிடமும் 2 துணை நடிகர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் அந்த படத்தின் டைரக்டர் நடிகைகளுக்குரிய சம்பளத்தை ஏற்கனவே அந்த படப்பிடிப்பு குழுவைச் சேர்ந்த பொறுப்பாளரிடம் வழங்கி விட்டதாக தெரிய வந்துள்ளது.

    இதைத் தொடர்ந்து அந்த படப்பிடிப்பு குழுவை சேர்ந்த பொறுப்பாளர்களை போலீசார் விசாரணை க்கு வரும்படி அழைத்து உள்ளனர்.

    • குரான் பானளயத்திலுள்ளவர்கள் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிசெய்து வருகின்றனர்.
    • 100 நாள் வேலை செய்த தொழிலாளர்களுடன் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் சேஷாங்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட குரான்பாளையம் கிராமம் உள்ளது. இங்குள்ளவர்கள் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிசெய்து வருகின்றனர். அதன்படி கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் வேலை செய்த 9 நாட்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இதை கண்டித்தும், அனை வருக்கும் ஜாப் கார்டு வழங்க கோரியும் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்டவ ர்களுடன் கண்டமங்கலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் குப்புசாமி, மாவட்ட குழு உறுப்பினர் சவுந்தர்ராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேஸ்வரி மற்றும் 100 நாள் வேலை செய்த தொழிலாளர்களுடன் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.க

    • தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்பே பணியாளர்களுக்கும், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும்.
    • கொள்முதல் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 21,000 மாத சம்பளம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்கம் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க மாநில நிர்வாக குழு கூட்டம் சுமை சங்க மாநிலத் தலைவர் சாமிக்கண்ணு, தொழிலாளர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் சிவானந்தம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    மாநில பொதுச் செயலாளர் சந்திரகுமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் எடுத்து வரும் தனியார் மயமாக்க நடவடிக்கைகள் குறித்தும், அனைத்து தொழிற்சங்கங்களின் ஒன்றுபட்ட போராட்டம் குறிக்கும் விளக்கிப் பேசினார்.

    இந்த கூட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல் கொள்முதலில் நிலவும் குளறுபடிகளை களைய வேண்டும், தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்பே பணியாளர்களுக்கும், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும். 2012 ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த கொள்முதல் பணியாளர்கள் நிரந்தரப்படுத்துவதில் மிகுந்த கால தாமதப்படுத்துகிறது. உடனே இவர்களை நிரந்தரபடுத்த வேண்டும், கொள்முதல் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வேண்டும், கொள்முதல் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 21,000 மாத சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மாநில பொருளாளர் கோவிந்தராஜன், செயலாளர்கள் கிருஷ்ணன், சுப்பிரமணியன், முருகேசன், கலியபெருமாள், ராஜேந்திரன், திருவாரூர் மாவட்ட செயலாளர் செல்வம், சுமை சங்க மாவட்ட செயலாளர்புஸ்பநாதன், தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், நாகை மாவட்ட செயலாளர்ஆனந்தன், மயிலாடுதுறை மாவட்ட அமைப்பாளர் சிவகுருநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கல்லூரியின் இடது, வலது பின்புறத்தில் ஏராளமான செடி, கொடிகள் மண்டி கிடக்கிறது.
    • கஜா புயலில் தரைமட்டமான இருசக்கர வாகன நிறுத்தகம் இதுநாள் வரை சரிசெய்யப்படாமல் உள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் 2011ம் ஆண்டு பாரதிதாசன் உறுப்பு கலைக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இந்த கல்லூரி இப்பகுதி மாணவர்களுக்கு ஒரு வரபிரசாதமாக அமைந்தது. இந்த கல்லூரியில் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா்.

    இக்கல்லூரி 2018ம் ஆண்டு அரசு கலைக்கல்லூரியாக மாற்றப்பட்டது. இந்த கல்லூரிக்கு சுற்றுச்சுவா் கிடையாது. கல்லூரியின் இடது, வலது பின்புறத்தில் ஏராளமான செடி, கொடிகள் மண்டி கிடக்கிறது. இதனால் ஜன்னல் வழியாக கல்லூரிக்குள் பாம்பு போன்ற விஷ ஐந்துக்கள் உள்ளே நுழைய வாய்ப்புள்ளது. கல்லூரியின் முன்புறம் உள்ள கண்ணாடிகளும் கஜா புயலில் விழுந்து அதை அப்புறப்படுத்தாமலும், புணரமைக்கலும் உள்ளது.

    எந்த நேரத்திலும் அந்த கண்ணாடிகள் விழுந்து விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் மாணவா்கள் சென்று வருகின்றனா். மாணவா்கள் வரும் இருச்சக்கர வாகன நிறுத்தகமும் கஜா புயலில் தரை மட்டமானதை இதுநாள் வரை சரிசெய்யப்படாமல் அப்படியே உள்ளது. மாணவா்கள் வரும் வாகனங்கள் வெளியிலேயே வெயில் மற்றும் மழையில் பாதுகாப்பற்ற முறையில் நிறுத்தி வைக்கப்படுகிறது.

    கல்லூரி நிர்வாகம் பேராசிரியா்களுக்கு ஊதியம் கொடுப்பதில் பல்கலை–க்கழகம் கொடுப்பதா? அரசு கொடுப்பதாக என்ற இழுபறியில் இருந்து கொண்டு மாதா மாதம் சம்பளம் கிடைக்காமல் பேராசிரியர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகிறார்கள். கல்லூரி முன்பக்கத்தில் உள்ள மேல்தளத்தில் உடைந்த கண்ணாடியும், அதை சுற்றி செடி, கொடி, மரங்கள் மண்டி உள்ளது. எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. விபத்துக்கள் ஏற்பட்டதற்கு பிறகு அரசு முனைந்து செயல்படுவதை விட்டு விட்டு விபத்து ஏற்படுவதற்கு முன்பே உரிய நடவடிக்கை எடுத்து ஆவன செய்ய வேண்டுமென மாணவர்கள். பெற்றோர்கள், பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    • திருவெண்ணை நல்லூர் அருகே சம்பளம் கேட்ட பெண் கட்டிட தொழிலாளி தாக்கப்பட்டார்.
    • பாஞ்சாலி நேற்று மாலை பார்த்தசாரதியிடம் சம்பளம் கேட்டுள்ளார்

    விழுப்புரம்:

    திருவள்ளூர் அருகே சித்தலிங்க மடம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் மனைவி பாஞ்சாலி (வயது27) இவர் கட்டிட தொழிலாளி. அதே பகுதியில் பார்த்தசாரதி என்பவரின் வீட்டில் கடந்த ஒரு வருடமாக கட்டிட வேலை பார்த்து வருகிறார். இதனிடையே பாஞ்சாலி நேற்று மாலை பார்த்தசாரதியிடம் சம்பளம் கேட்டுள்ளார். அதற்கு பார்த்தசாரதி மற்றும் அவரது மகன் மருமகள் உள்ளிட்டோர் பாஞ்சாலியை ஆபாசமாக திட்டி அடித்து உதைத்தனர். இதனை தடுக்க சென்ற மற்றொரு தொழிலாளியையும் அவர்கள் அடித்தனர். இது குறித்து பாஞ்சாலி திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருவெண்ணை நல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாரத்துக்கு குறைந்தது 6மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும்.
    • தன்னார்வலர்கள் பலர் உயர்கல்விக்காகவும், திருமணம் உள்ளிட்ட பல காரணங்களுக்காகவும் வெளியூர் சென்று விட்டனர்.

    திருப்பூர் :

    ஊரடங்கில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை நிரப்ப இல்லம் தேடி கல்வி திட்டத்தை அரசு கொண்டு வந்தது. திருப்பூர் கல்வி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 142 மையங்கள் திறக்க அரசு நிர்ணயித்தது. தற்போது வரை 7 ஆயிரத்து 255 மையங்கள் திறக்கப்பட்டு விட்டன. இதன்கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு, பள்ளிகளின் நேரம் போக மாலை 5மணி முதல் 7மணி வரை தன்னார்வலர்கள் வழியே மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஒரு மையத்துக்கு ஒரு தன்னார்வலர், வாரத்துக்கு குறைந்தது 6மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும் போன்ற கட்டுபாடுகளுக்கு உட்பட்டு தேர்வு செய்யப்பட்டனர். கடந்த ஒரு மாதங்களாக இவர்களில் பலர் பணியில் இருந்து விலகிவருகின்றனர். சுமார் 170க்கும் மேற்பட்ட மையங்களில் தன்னார்வலர்கள் இல்லை.

    இது குறித்து தன்னார்வலர்கள் சிலர் கூறுகையில், இத்திட்டம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக உள்ளது. மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது மட்டுமின்றி, அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய், வறுமையில் உள்ளோருக்கு கூடுதல் வருவாய் அளிக்கிறது.அறிவுறுத்தியபடி தவறாமல் மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகிறோம். இதற்கான சம்பளம் நாளுக்கு நாள் தாமதமாகி வருகிறது. கடந்த மார்ச் மாத சம்பளமே மே மாதம்தான் கிடைத்தது.இதன்காரணமாகவும் தன்னார்வலர் சிலர் விலகிவிட்டனர். கோடை விடுமுறையில் பயிற்சி நடக்கவில்லை. அதற்கு சம்பளம் வருமா என்பதும் தெரியவில்லை. வழங்குவது ஆயிரம் ரூபாய் என்றாலும் அதை காலம் தாழ்த்தாமல் வழங்கினால் நல்லது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றனர்.

    இந்த மையங்களில் மாணவர்களின் வாசித்தல் திறனை மேம்படுத்த, ரீடிங் மராத்தான் போட்டி ஜூன் 1-ந்தேதி துவங்கி 12-ந் தேதி வரை நடந்தது. இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் செல்போன் செயலி மூலம் மாணவர்களை குறிப்பிட்ட வார்த்தைகளை வாசிக்க வைக்க வேண்டும்.அதிக வார்த்தைகள் வாசித்ததன் அடிப்படையில் மாவட்டம், ஒன்றியம் வாரியாக ரேங்க் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டாரம் 6 கோடியே 82 லட்சம் சொற்களை சரியாக வாசித்து முதலிடம் பிடித்தது.திருப்பூரில்ஊத்துக்குளி வட்டாரம் 413 வட்டாரங்களில் மாநில அளவில் 92வது இடத்தில் இருந்தது. திருப்பூர் மாவட்டத்தில் 974 செல்போன்களில் இருந்து 1.52 லட்சம் நிமிடங்களில் 76 லட்சம் சொற்கள் சரியாக வாசிக்கப்பட்டுள்ளன.ரீடிங் மராத்தானில் திருப்பூர் பின்தங்க தன்னார்வலர்கள் பற்றாக்குறையால் இல்லம் தேடி கல்வி செயல்பாடுகள் குறைந்ததும் முக்கிய காரணமாக இருக்கலாம்.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    தன்னார்வலர்கள் பலர் உயர்கல்விக்காகவும், திருமணம் உள்ளிட்ட பல காரணங்களுக்காகவும் வெளியூர் சென்று விட்டனர். தன்னார்வலர் சிலரின் தகவல்கள் முறையாக கல்வித்துறைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. அவர்களுக்கு மட்டும் சம்பளம் வழங்க தாமதிக்கிறது. தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் காலிப்பணியிடங்கள் நிரப்பும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. விரைவில் சரிசெய்யப்பட்டு விடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×