search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்தீஸ்கர்"

    • யார் ஆட்சிக்கு வருவார்கள் என்ற கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • பா.ஜ.க. கட்சி 25 முதல் 29 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிகிறது.

    இந்தியாவில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையே, தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை காலம் வரும் டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் நிறைவடைகிறது.

    சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஐந்து மாநிலங்களில் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்ற ரீதியில் கருத்து கணிப்புகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தனியார் நிறுவனம் (லோக் போல்) நடத்திய ஆய்வில், சத்தீஸ்கர் மாநிலத்தில் 56 முதல் 60 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

    பா.ஜ.க. கட்சி 25 முதல் 29 இடங்களில் வெற்றி பெறும் என்றும், பி.எஸ்.பி. ஒன்று அல்லது இரண்டு இடங்களில் வெற்றி பெறலாம் என்றும் இதர வேட்பாளர்கள் ஒரு இடத்தில் வெற்றி பெறலாம் என்று தெரியவந்துள்ளது. இதே போன்று தெலுங்கானா மாநிலத்திலும் அதிகபட்சம் 44 சதவீத வாக்குகளை பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 61 முதல் 67 இடங்களிலும், பி.ஆர்.எஸ். கட்சி 45 முதல் 51 இடங்களிலும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஆறு முதல் எட்டு இடங்களிலும், பா.ஜ.க. இரண்டு அல்லது மூன்று இடங்களிலும், இதர வேட்பாளர்கள் ஒரு இடத்திலும் வெற்றி பெறலாம் என்று தெரியவந்துள்ளது.

    • பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சத்தீஸ்கரின் அம்பிகாபூரில் 4.8 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் அம்பிகாபூருக்கு மேற்கே 65 கிமீ தொலைவில், பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் அதிகாலை 5.28 மணியளவில் ஏற்பட்டது.

    இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் நில அதிர்வை உணர்ந்து பீதியில் வீட்டைவிட்டு வெளியேறினர். இருப்பினும் லேசான நில அதிர்வு என்பதால் யாருக்கும் பாதிப்போ அல்லது பொருட்சேதமோ இல்லை என்று தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மறைந்த முன்னாள் பிரதமரின் நினைவாக சத்தீஸ்கர் மாநில தலைநகரான ராய்ப்பூரின் பெயரை அடல் நகர் என பெயர் மாற்றம் செய்ய அம்மாநில மந்திரி சபை முடிவெடுத்துள்ளது. #Chhattisgarh #Vajpayee
    ராய்ப்பூர்:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி காலமானார். அவரது  உடல் டெல்லியில் உள்ள ஸ்மிருதி ஸ்தல் பகுதியில் மறுநாள் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவரது, அஸ்தி நாடு முழுவதும் உள்ள முக்கிய நதிகளில் கரைக்கப்பட உள்ளது. 

    இந்த நிலையில், வாஜ்பாயின் நினைவைப் போற்றும் வகையில் பாஜக ஆளும் மாநில அரசுகள் அவரை கவுரவித்து வருகின்றன. சத்தீஸ்கர் மாநிலத் தலைநகரான புதிய ராய்ப்பூரின் பெயரை 'அடல் நகர்' என்று பெயர் மாற்றம் செய்ய அம்மாநில மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், சத்தீஸ்கரில் உள்ள ராஜ்நந்த் கான் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் வாஜ்பாயின் பெயரைச் சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    அதேபோல, வாஜ்பாய் பிறந்த குவாலியர் மற்றும் போபால் ஆகிய நகரங்களில், வாஜ்பாய்க்கு நினைவிடம் அமைக்க இருப்பதாக மத்தியப் பிரதேச அரசு அறிவித்திருக்கிறது. அவரது வாழ்க்கை வரலாறுகுறித்து பள்ளிப் பாடத்திட்டத்திலும் சேர்க்க இருப்பதாக மத்தியப்பிரதேச கல்வித் துறை அறிவித்திருக்கிறது. 
    சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் உடனான என்கவுண்டரில் 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், ஒரு வீரர் படுகாயமடைந்துள்ளார்.
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும், ஒரு வீரர் படுகாயங்களுடன் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
    பள்ளி இறுதியாண்டு தேர்வில் 98.40 சதவிகித மதிப்பெண் எடுத்தும் கோச்சிங் செல்ல பணம் இல்லாததால் சத்தீஸ்கர் மாணவர் தனது ஐஐடி கனவை தியாகம் செய்துவிட்டு பி.எஸ்சி படிக்க சேர்ந்துள்ளார்.
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் சிம்கா பகுதியை சேர்ந்த சிவ்குமார் பாண்டே என்ற மாணவர், நடந்து முடிந்த பள்ளி இறுதியாண்டு தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்தார். 3.6 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வில் 98.40 சதவிகித மதிப்பெண் எடுத்த சிவ்குமார் பாண்டே எப்படியாவது ஐஐடி.யில் பொறியியல் படிக்க வேண்டும் என முயன்று வந்தார்.

    ஆனால், ஐஐடி.யில் சேர நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி பெற கோச்சிங் போக வேண்டும். இதற்கு அதிக செலவாகும். தனது தந்தையால் அதிகம் செலவு செய்ய இயலாது என்பதால், தனது ஐஐடி கனவை தியாகம் செய்துவிட்டு ஊருக்கு அருகில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி சேர்ந்துள்ளார்.

    ஏற்கனவே, சிவ்குமாரின் மூத்த சகோதரர் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பணம் செலவளிக்க முடியாமல் பாதியிலேயே படிப்பை கைவிட்டுள்ளார். எல்.ஐ.சி ஏஜெண்ட் ஆக இருக்கும் சிவ்குமாரின் தந்தை மாதம் 12 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் நிலையில், மகனின் கல்விக்கு அரசு உதவ வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

    மாநிலத்தில் முதலிடம் பிடித்தவர்களுக்கு வழங்கப்படும் அரசு பணம், செப்டம்பர் மாதம்தான் கையில் கிடைக்கும் என்பதால், அதனை விரைந்து வழங்கினால் மகனின் கல்விக்கு உதவியாக இருக்கும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    மாநில கவர்னர்களுக்கான மாத ஊதியம் ரூ.3.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதனை மறுத்து பழைய ஊதியமே போதும் என சத்தீஸ்கர் கவர்னர் பால்ராம்ஜி தாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
    ராய்ப்பூர்:

    நாட்டின் அனைத்து மாநில கவர்னர்கள் மற்றும் துணை நிலை கவர்னர்களுக்கான ஊதியம் கடந்த மார்ச் மாதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. ரூ.1.10 லட்சத்தில் இருந்து ரூ.3.5 லட்சமாக ஊதியம் உயர்த்தப்பட்டது. இந்த ஊதிய உயர்வு கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தை முன் தேதியிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, 26 மாதங்கள் நிலுவைத்தொகையுடன் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இந்நிலையில், சத்தீஸ்கர் கவர்னராக உள்ள  பால்ராம்ஜி தாஸ் ஊதிய உயர்வை ஏற்க மறுத்து கடந்த மாதம் கடிதம் எழுதியுள்ள நிகழ்வு தற்போது வெளியாகியுள்ளது. பழைய ஊதியமே தனக்கு போதுமானதாக இருப்பதாகவும், புதிய உயர்த்தப்பட்ட ஊதியம் தேவையில்லை என பால்ராம்ஜி தாஸ் அம்மாநில கணக்குப்பிரிவு தலைவருக்கு (தணிக்கை) கடிதம் எழுதியுள்ளார்.

    பால்ராம்ஜி தாஸின் கோரிக்கையை ஏற்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கணக்குப்பிரிவு தலைவர் பழைய ஊதியமே அவருக்கு செலுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
    சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Naxals
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் அதிக அளவில் உள்ளன. நக்சல்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் நடைபெறும் சண்டையில் பலர் கொல்லப்படுவர். மேலும், நக்சல்கள் தாக்குதல் நடத்த பல இடங்களில் குண்டுகளை மண்ணில் புதைத்து வைத்திருப்பர்.

    இந்நிலையில், இன்று காலை சுமார் 7.45 மணியளவில் சுக்மா மாவட்டதின் புஸ்வாடா கிராமத்திற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். கான்ஸ்டபிள் மானிக் தின்பார் படுகாயமடைந்தார்.

    படுகாயமடைந்தவர்களுக்கு ராய்ப்பூரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நக்சல்களை பிடிக்க போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்புப்படை வீரர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Naxals

    ×