search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோஷம்"

    • டெங்கு காய்ச்சலில் இருந்து நம்மை பாதுகாக்க வேண்டும் என கோஷம்.
    • முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பஸ் நிலையத்தில் நிறைவு.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுடன் சீர்காழி லயன்ஸ் சங்கம் இணைந்து டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணிக்கு லயன்ஸ் சங்க வட்டாரத்தலைவர் கே.வேல்முருகன் தலைமை வகித்தார். கே.எஸ்.செயலர் சந்துரு, பொருளாளர் எஸ்.ராமராஜ் முன்னிலை வகித்தனர். சங்க தலைவர் எம்.சுரேஷ் பேரணியை துவக்கி வைத்தார்.

    பேரணியில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று கொசுவை ஒழிக்க வேண்டும், டெங்கு காய்ச்சலில் இருந்து நம்மை பாதுகாக்க வேண்டும் என கோஷங்கள் இட்டு சென்றனர்.

    முக்கியவீதிகளின் வழியாக சென்று மீண்டும் பேருந்து நிலையத்தில் நிறைவு செய்தனர். துணை முகாம் அலுவலர் ஏ.மணிகண்டன், பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ச.ஹரிஹரன் கலந்து கொண்டனர். திட்ட அலுவலரும், உதவி தலைமை ஆசிரியருமான எஸ்.முரளிதரன் நன்றி கூறினார்.

    • எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அ.தி.மு.க வினர் கைதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
    • மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி துணை தலைவராக உதயகுமாரை நியமிக்காததை கண்டித்து சென்னையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தடையை மீறி போராட்டம் நடைபெற்றது.

    இதில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

    இதனை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி தஞ்சை ரயில் நிலையம் முன்பு இன்று மதியம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை. திருஞானம் தலைமையில் அம்மா பேரவை இணை செயலாளர் காந்தி முன்னிலையில் நிக்கல்சன் வங்கி தலைவர் சரவணன், மாவட்ட அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் நாகராஜன், முன்னாள் மேயர் சாவித்ரி கோபால், முன்னாள் கவுன்சிலர் பூபதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தம்பி என்ற சோமரத்தினசுந்தரம்.

    அம்மா பேரவை துணை செயலாளர் பாலை ரவி , முன்னாள் நகர செயலாளர் பஞ்சாபிகேசன், மாணவர் அணி முருகேசன், கவுன்சிலர்கள் கோபால், தட்சிணாமூர்த்தி, கேசவன், காந்திமதி , மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாபர் , முன்னாள் நகர செயலாளர் முருகேசன், 51-வது வட்டச் செயலாளர் மனோகர் உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டனர்.

    பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கைது செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அ.தி.மு.க வினரை உடனடியாக விடுதலை செய்ய கோரி கோஷங்கள் எழுப்பினர்.

    தகவல் அறிந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் 75 பேரை கைது செய்தனர்.

    இந்த மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் வழங்காமல் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஏமாற்றுகிறது.
    • விவசாயிகள் நாமம் போட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    தஞ்சாவூர்:

    யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி. ஆகிய உரங்களின் விலையை மத்திய மாநில அரசுகள் குறைக்க வேண்டும், கூட்டுறவு சொசைட்டியில் காலதாமதப்படுத்தாமல் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க வேண்டும், மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு செய்ய வேண்டும், 2021-22-ம் ஆண்டிற்கான விட்டுப் போன நெல் சாகுபடி விவசாயிகளுக்கான இன்சூரன்ஸ் தொகையை கால தாமதப்படுத்தாமல் வழங்க வேண்டும் என்பதை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் வழங்காமல் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஏமாற்றுகிறது என்பதை உணர்த்தும் வகையில் விவசாயிகள் நாமம் போட்டு கோஷமிட்டனர்.

    இதற்கு மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

    மாநில செயலாளர் உலகநாதன், அரவிந்தசாமி, துரைராஜ், ஜெகதீஷ், பவுன்ராஜ், ஜெயபால், அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பப்பட்டன.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • இந்தி திணிப்பை கைவிட வலியுறுத்தியும், ஒன்றிய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    • 500-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    ஒன்றிய அரசின் இந்தி மொழி திணிப்பை கண்டித்து தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு இன்று வடக்கு, மத்திய, தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர், மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் குட்டி.தெட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார்.

    தஞ்சை மாநகர செயலாளரும் மேயருமான சண்.ராமநாதன் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் எம்.பி, மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ, தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணாதுரை எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    உயர்நிலை செயல்திட்டகுழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, தேர்தல் பணிக்குழு தலைவர் கணேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் உபயதுல்லா, எம்.பி.க்கள் ராமலிங்கம், சண்முகம், தலைமை செயற்குழு உறுப்பினர்களும் எம்.எல்.ஏ.க்களுமான அன்பழகன், டி.கே.ஜி.நீலமேகம், அசோக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியன், ராமசந்திரன், மகேஷ்கிருஷ்ணசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், குடந்தை மாநகர செயலாளர்கள் தமிழழகன், செந்தில்குமார், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் காரல்மார்க்ஸ், விவசாய அணி துணை செயலாளர் ஜித்து, பிரசார குழு உறுப்பினர் இறை.கார்குழலி, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராஜேஷ், வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் இந்தி திணிப்பை கைவிட வலியுறுத்தியும், ஒன்றிய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம்பூபதி, கவுன்சிலர் மேத்தா உள்பட 500-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில் மத்திய மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செந்தமிழ் செல்வன் நன்றி கூறினார்.

    • தி.மு.க. அரசை கண்டித்து திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கனமழையால் குறுவை சாகுபடி நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்துள்ளன.

    திருவாரூர்:

    மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் மாவட்ட செயலாளருமான இரா.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். இதில் கட்சியின் அமைப்பு செயலாளர்கள் கோபால், சிவா ராஜமாணிக்கம், ஒன்றிய செயலாளர்கள் பாப்பா சுப்பிரமணியன், மணிகண்டன், குணசேகரன் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் இரா.காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தாலிக்கு தங்கம், மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்குதல், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ரத்து செய்ததை தவிர வேறு எந்த சாதனையும் தி.மு.க. செய்யவில்லை. மாணவ -மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தையும் கைவிடப் போகிறார்கள் என்ற தகவல்கள் வருகிறது. திமுக ஆட்சி காலம் முடிவதற்குள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தை மொத்தமாக காலி செய்து விடுவார்கள் என்ற நிலை உள்ளது.

    மின் கட்டண உயர்வால் மக்கள் அவதிப்படுகிறார்கள். மக்களின் துயரத்தை வெளிப்படுத்தவே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கனமழையினால் குறுவை சாகுபடி நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்துள்ளன. இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு தி.மு.க. அரசை கண்டித்தும், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

    • வீரபாண்டியனை கொலை செய்ய முயன்றவர்களை கைது செய்ய வேண்டும்.
    • சமூக விரோதிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்று பேசினார்.

    இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினர் வீரபாண்டியனை கொலை செய்ய முயன்றவர்களை கைது செய்ய வேண்டும், சமூக விரோதிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கர், தேசிய கட்டுப்பாட்டு குழு வழக்கறிஞர் வையாபுரி, மாவட்டம் நிர்வாக குழு உறுப்பினர் சந்தரராமன் , ஜோசப், மாவட்ட நிர்வாக குழு ராஜா, மாவட்டக்குழு ஒன்றிய செயலாளர் ஜகவர் முத்துக்குமரன், மாவட்ட குழு முருகேசன், மாவட்டக்குழு சுந்தர் நகர செயலாளர் மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • நிகழ்ச்சிக்கு திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமை தாங்கினார்.
    • திருக்கோவிலூர் காவல் துறை, திருக்கோவிலூர் போக்குவரத்து துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் உட்கோட்ட போலீசார் சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமை தாங்கினார். தாசில்தார் குமரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு ஊர்வலம் தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு கோஷங் களை முழங்கியவாறும் விழிப்புணர்வு பதாகை களை கையில் ஏந்தி சென்றனர். நிகழ்ச்சியில் திருக்கோவி லூர் இன்ஸ்பெக்டர் பாபு, மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இள வழகி, வருவாய் ஆய்வாளர் சிட்டிபாபு உள்ளிட்ட வர்களும் கலந்து கொண்ட னர். முடிவில் திருக்கோவி லூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் நன்றி கூறினார்.

    அதேபோல் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் கலந்து கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, கள்ளக்குறிச்சி மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், திருக்கோவிலூர் இன்ஸ் பெக்டர் பாபு, போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் சத்யன், சப்-இன்ஸ் பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு போதைப் பொருட்கள் பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினர். போதைப் பொருள் எதிர்ப்பு நாளை முன்னிட்டு திருக்கோவிலூர் ஐந்து முனை சந்திப்பிலிருந்து நான்கு முனை சந்திப்பு, பஸ் நிலையம், ஏரிக்கரை மூலை மற்றும் தெற்கு தெரு வழியாக 5 முனை ரோடு வரை ஹெல்மெட் ஊர்வலம் நடைபெற்றது. அதில் திருக்கோவிலூர் காவல் துறை, திருக்கோவி லூர் போக்குவரத்து துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து கலந்து கொண்டனர்.

    • மின் கட்டண உயர்வை கண்டித்து நகர செயலாளர் செல்லத்துரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
    • பேரணியாக தப்பு மேளம் அடித்துக்கொண்டு புறப்பட்டு முத்துப்பேட்டை மின்சார வாரியம் சென்று மனு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மின் கட்டணம் உயர்வை கண்டித்து நகர செயலாளர் செல்லத்துரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. முன்னதாக பேரூராட்சி அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அங்கிருந்து கண்டன பேரணியாக தப்பு மேளம் அடித்துக்கொண்டு புறப்பட்டு முத்துப்பேட்டை மின்சாரம் வாரியம் சென்று மனு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு, நிர்வாகிகள் கனகசுந்தரம், காளிமுத்து ஆகியோர் பேசினார்கள். இதில் நகர நிர்வாகிகள் மதிவாணன், ரமேஷ், ஜெயராமன், இந்திராணி, சரவணன், மந்திர மூர்த்தி, சாந்தி உட்பட கட்சியினர் பலரும் கலந்துக்கொண்டு கண்டன கோசங்கள் எழுப்பினர்.

    • சிவகங்கையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
    • சொத்துவரி, மின்கட்டணம், கட்டுமான பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வுக்கு காரண மான தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தமிழகத்தில் நடை பெறும் பாலியல் வன்முறை காவல்நிலைய மரணங்கள், போதை பொருட்கள் விற்பனை, மக்களை வஞ்சிக்கும் சொத்துவரி, மின்கட்டணம், கட்டுமான பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வுக்கு காரண மான தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்பாஸ்கரன், அவை தலைவர் நாகராஜன் நகர் செயலாளர் ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள். குண சேகரன், நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் ஸ்டிபன், கோபி, சேவியர், ஸிதர், பாரதி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட பொருளாளர் சரவணன், மேலும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த வேண்டும்.
    • மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்க வேண்டும்.

    மன்னார்குடி:

    தேர்தல் நேரத்தில் கொடுத்தபடி தி.மு.க. அரசு அனைத்து வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த வேண்டும், மாணவ- மாணவிகளுக்கு கல்வி கடனை அரசே ஏற்க வேண்டும், மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்க வேண்டும், குஜராத் மாநிலம் போல் தமிழகத்திலும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும், கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் வாங்கிய நகைக்கடன்களை அரசே ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    அதன்படி திருவாரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் மன்னார்குடி தேரடியில் மாவட்டத் தலைவர் ச. பாஸ்கர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. நகரத் தலைவர் ஆர். ரகுராமன் வரவேற்றார்.

    மாவட்ட பொது செயலாளர்கள் வி.கே. செல்வம், சி. செந்தில் அரசன், எஸ். ராஜேந்திரன், ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் பால பாஸ்கர், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் கமாலுதீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சதாசிவம், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் வி. பாலகிருஷ்ணன், வெளிநாடு, வெளி மாநில தமிழர் நலப் பிரிவு தலைவர் போல்ட் ராஜகோபால், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக திருவாரூர் மாவட்ட பார்வையாளர் பேட்டை பி. சிவா கலந்து கொண்டு பேசினார்.

    போராட்டத்தின் போது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் எம். ராகவன், சி.எஸ். கண்ணன், பட்டியல் அணி மாநில துணைத்தலைவர் கோ. உதயகுமார், வர்த்தக பிரிவு மாநில செயலாளர் சிவ. காமராஜ், விவசாய அணி மாநில செயலாளர் கோவி. சந்துரு, ஓ.பி.சி. அணி மாநில செயற்குழு உறுப்பினர் டி.ஆர். துரையரசு, ஐ.டி. பிரிவு மாநில செயலாளர் எல்.எஸ்.பாலா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    இந்தப் போராட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கே. ரஜினி கலைமணி, சி. ரெங்கதாஸ், கே.டி. ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அக்னிபத் திட்டத்தை கண்டித்து தஞ்சை ரெயில் நிலையம் முன்பு மாநகர,மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தின் போது அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தஞ்சாவூர்:

    அக்னிபத் திட்டத்தை கண்டித்து இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அதன்படி தஞ்சை ரயில் நிலையம் முன்பு மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதற்கு முன்னாள் மாவட்ட தலைவரும் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான நாஞ்சி கி வரதராஜன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாநகர காங்கிரஸ் நிர்வாகிகள் லட்சுமி நாராயணன், பழனியப்பன், வயலூர் ராமநாதன், ராஜு, மாநகராட்சி கவுன்சிலர் ஹைஜாக்கனி, விவசாயப் பிரிவு மணிவண்ணன், கதர் வெங்கடேசன், சந்திரசேகர், கரந்தை கண்ணன், அடைக்கலசாமி, கூத்தாஞ் சாவடி ஜோசப், மானம்புச்சாவடி பிரபாகரன், மாதாகோட்டை மரிய சூசை, அகஸ்டின், யாத்திரை கணேசன், விசிறி சாமியார், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு விரைவு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை நியமிக்கும் அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் உள்ள அரசு விரைவு போக்குவர த்துக்கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு சி.ஐ.டியூ. மாநில செயலாளர்ஜெயபால் தலைமை தாங்கினார். முன்னாள் நகர செயலாளர் குருசாமி, மாவட்ட துணை த்தலைவர் அன்பு,ஆட்டோ ஓட்டுனர்சங்க நகர செயலா ளர்ராஜா, நிர்வாகிகள் வடிவேலன், மில்லர்பிரபு, வெங்கடேசன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலா ளர் செங்குட்டுவன் வர வேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் ராணுவ த்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை நியமிக்கும் அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி கோஷங்கள் எழுப்ப ப்பட்டன. இதில் சி.ஐ.டி.யூ. போக்குவரத்துக்கழக ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×