search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவிலில்"

    • செல்வமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது
    • 9-ஆம் ஆண்டை முன்னிட்டு நடந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் 15-வது வார்டு புதிய காலனியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீசெல்வமாரியம்மன் கோவிலில் 9-ஆம் ஆண்டு ஆடி மாத பால்குட ஊர்வலம் வெகு சிறப்பாக நடந்தது.

    பெரம்பலூர் ஆலம்பாடி ரோடு, 15 வது வார்டு புதிய காலனியில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ செல்வமாரியம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ நாககன்னி அம்மன் திருக்கோவில் 9 ஆம் ஆண்டு ஆடி மாத பால்குடம், விளக்கு பூஜை நடந்தது.இதில் பக்தர்கள் பால் குடம் எடுத்து மேளதாளங்கள் முழங்க ஊர்லமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலா பிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பி க்கப்பட்டது. பின்னர் குத்துவிளக்கு பூஜை நடந்தது. இதில் நகராட்சி கவுன்சிலர் சிவக்குமார், திமுக கிளை செயலாளர் பரிதி நீலமேகம் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • ஆலந்துறையார் கோவிலில் மண்டலாபிஷேக விழா நடைபெற்றது.
    • மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன

    அரியலூர்

    அரியலூர் சிவன் கோவில் தெருவில் உள்ள ஆலந்துறையார் அருந்தவ நாயகி கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி நடைபெற்றது. இதையொட்டி மண்டலாபிஷேக விழா நேற்று நடந்தது. காலை சிறப்பு யாகங்கள் செய்யப்பட்டு மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை சுற்று பிரகாரத்தில் கர்நாடக இசை கச்சேரிகள், பாட்டு, பட்டிமன்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஓம் நமச்சிவாயா அறக்கட்டளை குழுவினர் செய்து இருந்தனர்.

    • கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றது.
    • 250-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் ஈடுபட்டனர்

    அரியலூர்

    கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணிஅரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் சென்னையில் இருந்து 250-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் உழவாரப்பணியில் ஈடுபட்டனர். கோவில் பிரகாரங்களில் படிந்திருக்கும் தூசிகள், எண்ணை கரைகள், விபூதி கரைகள் உள்ளிட்டவைகளை தண்ணீர் தொட்டு துணிகளால் துடைத்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கங்கைகொண்ட சோழபுரம் கோவில் செயல் அலுவலர் செந்தமிழ் செல்வி மற்றும் கோவில் நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் புத்திரகவுண்டன் பாளையம் பகுதியில் ஸ்ரீ கூத்தாண்டவர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
    • இந்த கோவிலில் கடந்த ஒரு வார காலமாக மாரியம்மன், ஸ்ரீ கூத்தாண்டவர் ஆகியோர் தோரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் புத்திரகவுண்டன் பாளையம் பகுதியில் ஸ்ரீ கூத்தாண்டவர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த ஒரு வார காலமாக மாரியம்மன், ஸ்ரீ கூத்தாண்டவர் ஆகி யோர் தோரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற் றது. இதில் ஆயிரக்கணக்கா னோர் கலந்து கொண்டனர்.

    மேலும் நேற்று கூத்தாண் டவர் சாமி படுகளம் செய் யும் வழிபாடு நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பெண்களும், ஆண்களும் திரளாக கலந்து கொண்ட னர்.

    இதில் திருநங்கைகள் தாலி கட்டிக் கொண்டு அவர்கள் தங்கள் தாலியை அறுத்து வெள்ளை புடவை அணிந்தும் தலை விரி கோலத்தில் நடனம் ஆடி னார்கள். மேலும் சாமி ஆற்றங்கரைக்கு எடுத்துச் சென்று அங்கு படுகளம் செய்யப்பட்டது.

    பின்னர் குழந்தை வேண்டி நூற்றுக் கணக்கான பெண்கள் வெள்ளை புடவை அணிந்து, ஆற்றங்க ரைக்கு வந்து அக்னி தாண்டி பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டு தங்கள் வேண்டுதலை வைத்தனர். இதில் குழந்தை இல்லாத வர்களுக்கு இந்த வேண்டு தல் வைத்தால் குழந்தை பிறக்கும் என ஐதீகம், இவ்விழாவில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • வைகாசி மாத பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
    • வேத மந்திரங்கள் ஓத, கொடிமர பூஜைகள் நடந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த திருவதி கையில் அமைந்துள்ளது வீரட்டானேஸ்வரர் கோவில். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 6 மணிக்கு மூலவரான வீரட்டானேஸ்வரர், பெரியநாயகி அம்மன் ஆகியோருக்கு பால், தயிர், சந்தனம், தேன் மற்றும் மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து உற்சவர்களான சாமி-அம்பாள், தனி அம்பாள், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் கோவிலில் இருந்து விசேஷ மலர் அலங்காரத்தில் பஞ்ச மூர்த்தி சாமிகள் புறப்பட்டு கோவிலுக்கு வெளியே வந்து கொடிமரம் அருகில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதனை தொடர்ந்து காலை 9 மணி அளவில் கோவில் முன்பு தயார் நிலையில் இருந்த கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, கொடிமர பூஜைகள் நடந்தது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு கொடியேற்றம் நடந்தது.

    இதனை தொடர்ந்து அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள், ஹரகர மகா தேவா, ஓம் நமச்சிவாய, சிவாயநம, தென்னாடுடைய சிவனே போற்றி என்று பக்தி கோஷமிட்டனர். கொடியேற்றத்தில் சுப்பராய செட்டியார் பெண்கள் பள்ளி செயலாளர் மாதவன், சபாபதி, வானவில் ராஜா, கணேசன் மற்றும் கவுன்சிலர்கள், கோவில் நிர்வாகத்தினர், உற்சவ தாரர்கள், உபயதாரர்கள், கட்டளைதார்கள், கிராம முக்கியஸ்தர்கள், கிராம பொதுமக்கள், வர்த்தக சங்க பிரமுகர்கள், இந்துசமய ஆன்மீக பேரவை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பிரமோற்சவத்தை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலையில் பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா நடைபெற உள்ளது. முக்கிய திருவிழாவான திருத்தேரோட்டம் ஜூன் 1-ந்தேதி வியாழகிழமை காலை 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.

    அன்று இரவு 7 மணிக்கு திரிபுரசம்ஹாரம் எனும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி திருவதிகை பிரசித்தி பெற்ற சரநாராயண பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் எழுந்தருள உள்ளார். பின்னர் தேரில் வீற்றிருந்த திரிபுரசம்ஹாரமூர்த்தி, 3 அரக்கர்களையும் அவர்க ளது 3 கோட்டைகளையும் எரித்து சம்ஹாரம் நிகழ்த்தும் ஐதீக பெருவிழா நடக்கவுள்ளது.

    • திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது.
    • ஜூன் 2- ந் தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் வைகாசி பிரம்மோற்சவ விழா மற்றும் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நாளை( 25- ந்தேதி) பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற ஜூன் 2- ந் தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது.

    இதனைத் தொடர்ந்து கோவில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வந்ததோடு, எல்லைக்கட்டும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று முக்கிய விழாவான பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் பிடாரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி முக்கிய மாடவீதியில் வீதி உலா நடைபெற்றது. முன்னதாக ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    பூஜைக்கான ஏற்பாடுகளை நாகராஜ் குருக்கள், ராகேஷ் குருக்கள் மற்றும் பலர் செய்திருந்தனர். விழா விற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • சேலம் சுகவனேசுவரர் சுவாமி கோவி லில் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 2-ந்தேதி தேரோட்டம் நடைப்பெற உள்ளது.
    • தேர்த்திருவிழா வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை) கொடி யேற்றத்துடன் தொடங்கு கிறது. இதனைத் தொடர்ந்து 29-ந்தேதி சுகவனேசுவரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைப்பெற உள்ளது.

    சேலம்:

    பிரசித்தி பெற்ற சேலம் சுகவனேசுவரர் சுவாமி கோவி லில் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 2-ந்தேதி தேரோட்டம் நடைப்பெற உள்ளது. தேர்த்திருவிழா வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை) கொடி யேற்றத்துடன் தொடங்கு கிறது. இதனைத் தொடர்ந்து 29-ந்தேதி சுகவனேசுவரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைப்பெற உள்ளது. 25-ந் தேதி முதல் ஜூன் மாதம் 2-ந் தேதி வரை தினமும் காலை மற்றும் மாலை சாமி புறப்பாடு நடைப்பெறும். மேலும் மாலை வேளையில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. எனவே அனைத்து பக்கதர்களும், பொதுமக்களும் இந்த நிகழ்வுகளில் பங்கேற்று இறைவன் அருள் பெற வேண்டும் என அறங்காவலர் குழு தலைவர் சோனா வள்ளியப்பா மற்றும் அறங்காவலர்கள் கேட்டுக்கொண்டனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில், கோவில் வெளி வாசலில் இருந்து சுமார் 40 அடி தூரத்தில் அமைந்துள்ள, கருவறையில் உள்ள சிவலிங்கம் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுவது இக்கோவிலின் சிறப்பாகும்.
    • இந்த அதிசய சூரிய தரிச னத்தைக் காண உள்ளூரில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல் - திருச்சி மெயின் ரோட்டில், கரைபோட்டான் ஆற்றின் கரையோரத்தில், ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

    புராண சிறப்பு பெற்ற இக்கோவிலில், சிவனும், அம்பாளும் தெற்கு நோக்கிய நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்ற னர். மேலும் இக்கோவிலின் 4 கோபுரங்களும், உள்மண்ட பமும் பிரமிடு வடிவில் அமைந்துள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில், கோவில் வெளி வாசலில் இருந்து சுமார் 40 அடி தூரத்தில் அமைந்துள்ள, கருவறையில் உள்ள சிவலிங்கம் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுவது இக்கோவிலின் சிறப்பாகும். இந்த அதிசய சூரிய தரிச னத்தைக் காண உள்ளூரில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    இந்த ஆண்டு நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 13-ந் தேதி (மாசி 27, 28, 29) ஆகிய 3 நாட்கள், மூலவர் சிவனின் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடைபெறும். ஒவ்வொரு நாளும் காலை சுமார் 6.20 மணிக்கு தொடங்கி சுமார் 15 நிமிடம் வரை இந்த அபூர்வ நிகழ்வு நடைபெறும்.

    அதைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிசேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகத்தி னர் தெரிவித்துள்ளனர்.

    • பரமத்திவேலூர் பேட்டை ஸ்ரீ மகாபகவதி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக 8-ம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை நடைபெற்றது.
    • சிறப்பு அபிஷேக ஆராதனையை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை ஸ்ரீ மகாபகவதி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக 8-ம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை நடைபெற்றது. சிறப்பு அபிஷேக ஆராதனையை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    அதனை தொடர்ந்து விநாயகர், பகவதிஅம்மன், மற்றும் முருகப் பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், பன்னீர் ,இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பகவதி அம்மன், விநாயகர், முருகப்பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    பாண்டுரங்கர் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி தீர்த்தக் குட ஊர்வலம் நடந்தது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் விட்டலபுரி பகுதியில் உள்ள விடோபா சமேத பாண்டுரங்கர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் சம்புரோஷனம் விழாவையொட்டி காவிரி ஆற்றிலிருந்து திருமஞ்சன தீர்த்தக்குடங்கள் எடுத்து வருதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. யானை மீது தீர்த்தக்குடம் ஏந்தியவாறு பக்தர் வர, மேளங்கள் முழங்க ஏராளமான பெண்கள் தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்தனர். நேற்று மாலை, முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

    சேலம், வேலு நகரில் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடினர்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி வேலு நகரில் பஸ் ஸ்டாப் அருகே மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு பூஜை முடித்த பின்பு வழக்கம்போல பூஜாரி கோவிலை பூட்டி சென்றார்.

    இந்த நிலையில் இன்று காலை கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்து. மேலும் அதில் இருந்த ரூ.15 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது. யாரோ மர்ம நபர்கள் உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற அறிந்த கோயில் நிர்வாகிகள் சம்பவம் குறித்து அன்னதானபட்டி போலீசில் புகார் அப்படி சொன்னார்.அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.

    மேலும் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குமாரபாளையம் விட்டலபுரி பகுதியில் உள்ள பாண்டுரங்கர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் விட்டலபுரி பகுதியில் உள்ள விடோபா சமேத பாண்டுரங்கர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் சம்புரோஷனம் விழா நேற்று விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

    இன்று காவிரி ஆற்றிலிருந்து திருமஞ்சன தீர்த்தக்குடங்கள் எடுத்து வருதல், இன்று மாலை முதல் கால யாகசாலை பூஜை, நாளை 2-ம் கால பூஜை மற்றும் கொடிமரம் வைத்தல், 3-ம் கால பூஜை, வருகிற 17-ந் தேதி 4-ம் கால பூஜை, காலை 9 மணியளவில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றுதல் நடைபெறவுள்ளது.

    தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது. அதே நாள் இரவு புஷ்ப பல்லக்கில், கருட வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா நடைபெறவுள்ளது. விழாக்குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    ×