search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்மன் வீதி உலா"

    • மகாதீபாராதணை நடைபெற்றது
    • கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நேற்று 4-ம் ஆடி வெள்ளி விழா நடைபெற்றது.

    இவ்விழாவை முன்னிட்டு அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து மகாதீபாராதணை நடைபெற்றது.

    பின்னர் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். ரத்தினகிரி பாலமுரு கனடிமை சுவாமிகள், முன்னாள் எம் எல் ஏ பன்னீர்செல்வம், ஆரணி ஜோதிடர் குமரேசன் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் தந்தனர்.

    கோயில் சார்பில் கணேஷ் சிவாச்சாரியார் பிரசாதங்கள் வழங்கினார். மாலையில் நாதஸ்வர கச்சேரி நடந்தது. இரவில் நாக வாகனத்தில் மகாலட்சுமி அலங்காரத்தில் மாடவீதி உலா நடைபெற்றது.

    ஊர்வலத்தில் கரகாட்டம், நையாண்டி மேளதா ளத்துடன் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் இ.ஜீவானந்தம், செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் கோயில் அலுவலர்கள் மகாதேவன், சீனிவாசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது.
    • ஜூன் 2- ந் தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் வைகாசி பிரம்மோற்சவ விழா மற்றும் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நாளை( 25- ந்தேதி) பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற ஜூன் 2- ந் தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது.

    இதனைத் தொடர்ந்து கோவில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வந்ததோடு, எல்லைக்கட்டும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று முக்கிய விழாவான பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் பிடாரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி முக்கிய மாடவீதியில் வீதி உலா நடைபெற்றது. முன்னதாக ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    பூஜைக்கான ஏற்பாடுகளை நாகராஜ் குருக்கள், ராகேஷ் குருக்கள் மற்றும் பலர் செய்திருந்தனர். விழா விற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • அமைதி கூட்டம் நடந்தது
    • திருவிழா பிரச்சினை முடிவுக்கு வந்தது

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே கிராம தேவதையான செல்லியம்மன் கோவில் தோட்டப்பாளையத்தில் கிராம தேவதையான சோளாபுரி அம்மன் கோவில் உள்ளது.

    ஆண்டுதோறும் ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமை அடுத்த செவ்வாய்க்கிழமை சோளாபுரி அம்மனுக்கு உற்சவம் நடைபெறும்.இந்த உற்சவத்தின் போது செல்லியம்மன் கோவிலில் இருந்து உற்சவர் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் சோளாபுரி அம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்ட நிலையில் அங்கு போதுமான அளவுக்கு இட வசதி உள்ளதால் அங்கிருந்தே உற்சவர் அலங்கரித்து வீதி உலா செல்ல வேண்டும் என்று ஒரு தரப்பினர் தெரிவித்தனர். ஆனால் வழக்கமான நடைமுறையில் சோளாபுரி அம்மன் உற்சவம் நடக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதன் காரணமாக இந்த கோவில் திருவிழா நடத்துவதில் சிக்கல் நீடித்தது. இது தொடர்பாக வேலூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலையில் அமைதி கூட்டம் நேற்று நடந்தது.

    இதில் இருதரப்பினரும் சோளாபுரி அம்மன் உற்சவத்தை தனித்தனியாக நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்தனர். அதன்பேரில் வழக்கமான முறையில் செல்லியம்மன் கோவிலில் இருந்து தொடங்கும் உற்சவம் வரும் 12-ந் தேதியும், சோளாபுரி அம்மன் கோவிலில் இருந்து தொடங்கும் உற்சவம் வருகிற 16-ந் தேதி நடத்திக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது

    இதில் இருதரப்பினருக்கும் இடையே உடன்பாடும் ஏற்பட்டதால் சோளாபுரி அம்மன் கோவில் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

    ×