search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா பாதிப்பு"

    • மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
    • 80 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவ டிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது. கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் கடந்த நான்கு மாதம் இல்லாத வகையில் ஒரே நாளில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 693 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த ஒருவர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.

    இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 943 பேர் கொரோனா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்து ள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 16 பேர் கொரோனா பாதிப்பு டன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    தற்போது நாளொன்றுக்கு 80 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • பரிசோதனை, சிகிச்சை, கண்காணிப்பு மற்றும் தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்தும்படி சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.
    • தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இதுவரை அடைந்த வெற்றிகளை இழக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. சுமார் 3 மாதங்களுக்கு பிறகு கடந்த 12-ந்தேதி தினசரி பாதிப்பு 500-ஐ தாண்டியிருந்தது. அதன்பிறகு 2 நாட்கள் சற்று குறைந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 618 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 754 பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. எனவே பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில், தொற்று அதிகரித்து வரும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அவசர கடிதம் அனுப்பி உள்ளார். அதில், பரிசோதனை, சிகிச்சை, கண்காணிப்பு மற்றும் தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்தும்படி அறிவுறுத்தி உள்ளார்.

    தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இதுவரை அடைந்த வெற்றிகளை இழக்காமல், தொற்றுநோயைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் ஆபத்து கால அடிப்படையிலான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர்.
    • மருத்துவ பரிசோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி பெருமாள் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 47). இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர்.

    இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சிவகுமாருக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    அதை தொடர்ந்து சிவக்குமார் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் சிவகுமார் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சிவகுமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட உடன், அவரை கைது செய்த போலீசாரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஈரோடு மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
    • 6 பேர் கொரோனா பாதி ப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கி யது. கடந்த சில மாதங்களா கவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியலின்படி ஈரோடு மாவட்ட த்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 673 ஆக உயர்ந்துள்ளது.

    இதேபோல் கொரோனா பாதிப்பில் இருந்து ஒருவர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.

    இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 933 பேர் கொரோனா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மாவட்டம் முழுவதும் 6 பேர் கொரோனா பாதி ப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • ஒமைக்ரான் வைரசின் பிஎப்.7 வகை திரிபு சீனாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
    • சீனாவில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்கவும் பல்வேறு நாடுகள் முடிவு செய்துள்ளன.

    பீஜிங்:

    சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா உச்சத்தில் இருந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒமைக்ரான் வைரசின் பிஎப்.7 வகை திரிபு சீனாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

    இதனை தொடர்ந்து சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை, நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் அமெரிக்கா, கனடா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் என கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும், சீனாவில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்கவும் பல்வேறு நாடுகள் முடிவு செய்துள்ளன.

    இந்நிலையில், தங்கள் நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மாவொ நிங் கூறுகையில், 'தங்கள் நாட்டிற்குள் நுழைய சீன பயணிகளை மட்டும் குறிவைத்து சில நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ அடிப்படை இல்லை, இந்த நடைமுறைகளில் சிலவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. பரஸ்பர கொள்கையின் அடிப்படையில் சீனா எதிர் நடவடிக்கைகளை எடுக்க முடியும்' என்று எச்சரிக்கை விடுத்தார்.

    • புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக ஆர்.டி.-பிசிஆர் பரிசோதனை செய்திருக்க வேண்டும்
    • இந்தியா வந்ததும் 2 சதவீத ரேண்டம் பரிசோதனை மேற்கொள்ளப்படும்

    புதுடெல்லி:

    சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் தொற்று பரவலை தடுப்பதற்காக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய சுகாதாரத்துறை விதித்துள்ளது.

    சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இந்தியா வரும் சர்வதேச விமானங்களில் பயணிப்பவர்களுக்கு 100 சதவீதம் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்றும், புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக ஆர்.டி.-பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    மேலும், அவர்கள் இந்தியா வந்ததும் 2 சதவீத ரேண்டம் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    • பாத யாத்திதையை தடம் புரளச் செய்வதற்கு அரசாங்கம் கொரோனா நாடகத்தை நடத்துவதாக ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டினார்.
    • கொரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற முடியாவிட்டால், யாத்திரையை தற்காலிகமாக நிறுத்த மத்திய மந்திரி வேண்டுகோள்

    பரிதாபாத்:

    அரியானா மாநிலம் பரிதாபாத்தில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

    மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், கொரோனா மீண்டும் பரவுவதால் எனது பாத யாத்திரையை நிறுத்தவேண்டும் என கூறியிருக்கிறார். மற்ற இடங்களில் பாஜகவினர் அவர்கள் விரும்பியபடி பொதுக்கூட்டங்களை நடத்துகின்றனர். ஆனால் இந்திய ஒற்றுமை பயணம் எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் கொரோனா பரவுமாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பின்போது பாஜக அரசை கடுமையாக சாடினார். இந்திய ஒற்றுமை பயணம் குறித்து அவதூறு பரப்பவும், யாத்திரையை தடம் புரளச் செய்வதற்கும் அரசாங்கம் கொரோனா நாடகத்தை திட்டமிட்டு நடத்துவதாக குற்றம் சாட்டினார். அத்துடன், அறிவியல்பூர்வ ஆலோசனையின் அடிப்படையிலான நெறிமுறைகளை காங்கிரஸ் கட்சி பின்பற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.

    கொரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற முடியாவிட்டால், யாத்திரையை தற்காலிகமாக நிறுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

    • நிமோனியா மற்றும் சுவாச கோளாறுகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அரசு தரப்பில் பதிவு
    • உலகில் இதுவரை இல்லாத அளவில் நோய்த் தொற்று பரவுவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

    பீஜிங்:

    சீனாவில் மீண்டும் கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரசால் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. தினமும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவதாகவும், உயிரிழப்புகளும் அதிகமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மயானங்களில் ஏராளமான உடல்கள் குவிந்து கிடப்பதாகவும், இடைவிடாமல் தகனம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுகின்றன. ஆனால் கொரோனா பலி எண்ணிக்கை தொடர்பாக சீனா அரசு சரியாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. நிமோனியா மற்றும் சுவாச கோளாறுகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அரசு தரப்பில் பெரும்பாலான இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில், சீன அரசின் உயர்மட்ட சுகாதார ஆணையத்தின் மதிப்பீடுகளின்படி, இந்த வாரம் ஒரே நாளில் சீனாவில் கிட்டத்தட்ட 37 மில்லியன் (3.7 கோடி) மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும், உலகில் இதுவரை இல்லாத அளவில் நோய்த் தொற்று பரவுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. டிசம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 248 மில்லியன் மக்கள் அல்லது கிட்டத்தட்ட 18 சதவீத மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தகவல் மனித குலத்திற்கு கவலை அளிக்கக்கூடிய வகையில் உள்ளது. இது உண்மையாக இருக்கக்கூடாது என்பதே அனைவரின் பிரார்த்தனையாக உள்ளது.

    டிசம்பர் 20 அன்று மதிப்பிடப்பட்ட தினசரி 37 மில்லியன் பாதிப்பு என்பதற்கும், அந்த நாளில் சீனாவில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட 3,049 நோயாளிகள் என்ற எண்ணிக்கைக்கும் மிகப்பெரிய அளவிலான வித்தியாசம் உள்ளது. தினசரி பாதிப்புக்கான முந்தைய உலக சாதனையை விட இது பல மடங்கு அதிகமாகும்.

    ப்ளூம்பெர்க் தொகுத்த தரவுகளின்படி, தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் தோன்றி பல்வேறு நாடுகளில் பரவியதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 19ம் தேதி தினசரி பாதிப்பு 4 மில்லியனை எட்டியது. இதுவே உலக அளவில் அதிகபட்ச தினசரி பாதிப்பாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

    • கொரோனா பாதிப்பு அதிகரிப்பதும், குறைவது மாக உள்ளது.
    • தொற்று உறுதியானவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதும், குறைவது மாக உள்ளது. இந்த நிலையில் நேற்று சேலம் மாந கராட்சியில் 3 பேர், ஆத்தூர் சுகா தார மாவட்டத்தில் கெங்க வல்லி, தலைவாசல், பன மரத்துப்பட்டி பகுதிகளில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தொற்று உறுதியானவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 60 பேர் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 1.31 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.30 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    • ெகாரோனா பரவல் தற்போது குறைந்து வருகிறது.
    • அதன்படி நேற்று 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் ெகாரோனா பரவல் தற்போது குறைந்து வருகிறது. அதன்படி நேற்று 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சேலம் மாநகராட்சியில் 2 பேர், சேலம் சுகாதார மாவட்டம், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளர். கோவை, நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்க–ளில் இருந்து சேலம் வந்த 4 பேர் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
    • சேலம் மாநகராட்சி பகுதியில் 2 பேர் பாதித்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று புதிதாக 16 பேருக்கு கொரோனா பாதித்து இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதன்படி சேலம் மாநகராட்சி பகுதியில் 2 பேர் பாதித்தனர். பனமரத்துப்பட்டியில் ஒருவர், ஆத்தூரில் 3 பேர் பாதிக்கப்பட்டனர். அதே போன்று ஈரோடு, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சேலத்திற்கு வந்த 10 பேர் என மொத்தம் 16 பேர் பாதிக்கப்பட்டனர்.

    • கொரோனாவுக்கு நேற்று முன்தினம் 22 பேர் பாதிக்கப்பட்டனர்.
    • மேலும் ஈரோட்டில் இருந்து சேலம் வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று முன்தினம் 22 பேர் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று 21 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரி சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 6 பேர், கொளத்தூ ரில் 3 பேர், மேட்டூர், ஓமலூர், காடையாம்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், தாரமங்கலம், மகு டஞ்சாவடி, கொங்க ணாபுரம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் ஈரோட்டில் இருந்து சேலம் வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ×