search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா பாதிப்பு"

    • ஒரு சில பகுதிகளில் போலீசார் கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
    • போலீஸ் தொந்தரவு இல்லாமல் தொழில் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு பிறகு ஓட்டல்களில் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் 24 மணி நேரமும் செயல்பட மத்திய அரசு வழிவகை செய்து உள்ளது.

    இரவு நேரங்களில் முழுமையாக ஓட்டல்கள் செயல்பட அனுமதி இருந்தும் கூட ஒரு சில பகுதிகளில் போலீசார் கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் முறையான உரிமம் பெற்ற உணவகங்கள் தடையின்றி செயல்படலாம் என்று அரசு உத்தரவு பிறப்பித்த போதிலும் இரவு 11 மணிக்கு மேல் மூடுமாறு போலீசார் கூறுகின்றனர்.

    இதுகுறித்து சென்னை ஓட்டல்கள் சங்க தலைவர் எம்.ரவி கூறுகையில், "சென்னை நகரில் ஒரு சில பகுதிகளில் இரவு 11 மணிக்கு மேல் கடைகளை மூடச்சொல்லி போலீசார் கூறுகிறார்கள். நள்ளிரவு நேரத்தில் சென்னை நகருக்குள் வருபவர்கள் ஒரு கப் காபி அல்லது லேசான டிபன் சாப்பிட விரும்புகிறார்கள்.

    இதுபோன்ற சூழலில் ஓட்டல் இல்லாமல் பாதிக்கப்படுகிறார்கள். எனவே போலீஸ் தொந்தரவு இல்லாமல் தொழில் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

    சங்க செயலாளர் பேராசிரியர் ராஜ்குமார் கூறியதாவது:-

    ஐ.டி. நிறுவனங்கள், விமான நிலையம், கிளாம்பாக்கம் பஸ் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம், சென்ட்ரல், எழும்பூர் போன்ற பகுதிகளுக்கு அதிகாலை வரை மக்கள் பயணமாகி கொண்டே இருக்கின்றனர்.

    இதுதவிர பெரிய மருத்துவமனைகளுக்கு மக்கள் செல்கிறார்கள். பஸ், ரெயில் நிலையங்கள் மட்டுமின்றி மற்ற முக்கிய பகுதிகளில் 24 மணி நேரமும் உணவகங்கள் திறந்து இருந்தால்தான் அரசுக்கு, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்த முடியும். தொழில் செய்யவிடாமல் தடுத்தால் எப்படி வரி கட்டுவது.

    எனவே போலீஸ் இடையூறு இருக்கக் கூடாது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி ஓட்டல்களை மூடச் சொல்வது இத்தொழிலை நசுக்குவதற்கு சமமாகும். டீக்கடைகள், ஓட்டல்கள் அதிகாலையில் திறந்தால் தான் வியாபாரம் செய்ய முடியும் என்றார்.

    இதற்கிடையே இரவு 11 மணிக்கு மேல் அண்ணா சாலை உள்ளிட்ட சில இடங்களில் ஓட்டல்கள் செயல்படுவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    • கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,334 ஆக உயர்வு.
    • கேரளாவில் அதிகபட்சமாக 1,249, தமிழகத்தில் 190 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 761 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொரோனா பாதிப்பால் 12 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,423 இலிருந்து 4,334 ஆக அதிகரித்துள்ளது.

    இதில், கேரளாவில் அதிகபட்சமாக 1,249, கர்நாடகாவில் 1,240, மகாராஷ்டிராவில் 914, தமிழ்நாட்டில் 190, சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் தலா 128 என கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையாக உள்ளன.

    புதியதாக 12 பேர் இறந்துள்ளனர். இதில், ஐந்து பேர் கேரளாவில் இருந்தும், நான்கு பேர் கர்நாடகாவிலிருந்தும், இரண்டு பேர் மகாராஷ்டிராவிலிருந்தும், ஒருவர் உத்தரபிரதேசத்திலிருந்தும் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • கொரோனா மீண்டும் தனது கோர முகத்தை காட்டத் தொடங்கி உள்ளது.
    • கொரோனா தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டுமொத்த உலகையே தனது கட்டுக்குள் வைத்திருந்த கொரோனா மீண்டும் தனது கோர முகத்தை காட்டத் தொடங்கி உள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்துக்கொண்டிருக்கிறது. நம் முன்னோர்கள் உபயோகித்த ஆயுர்வேத பொருட்களை அதிகம் பயன்படுத்துவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து கொரோனா வைரசை விரட்டி அடிக்கலாம்.

     துளசி:

    ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, சளி, காய்ச்சலை கட்டுப்படுத்தும் சிறந்த மூலிகையாக துளசி விளங்குகிறது. அதன் சாறை பருகி வருவது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். சுவாசம் சார்ந்த நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடவும், சுவாசக் கோளாறுகளை போக்கவும் துணை புரியும். மேலும் மனஅழுத்தம், பதற்றம் சோர்வு போன்றவற்றில் இருந்து நிவாரணம் தரும்.

     இஞ்சி:

    இஞ்சியில் நுண்ணுயிர் மற்றும் தொற்று எதிர்ப்பு பண்புகள் உள்ளன. தொண்டை புண்ணுக்கு தீர்வு காண உதவும். நோய் எதிர்ப்பு அமைப்பையும் அதிகரிக்கச் செய்யும். புற்றுநோய் தடுப்பு பண்புகளையும் கொண்டது. இஞ்சி, தேன், துளசி இவை மூன்றையும் சேர்த்து கசாயம் தயாரித்தும் சாப்பிடலாம்.

     நெல்லிக்காய்

    இதுவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத பொருட்களுள் ஒன்றாக விளங்குகிறது. வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாட்டை மேம்படுத்தும் சேர்மங்களும் நெல்லிக்காயில் உள்ளன. தினமும் வெறும் வயிற்றில் நெல்லிச்சாறு பருகி வருவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வருவதும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.

     ஜிலோய்:

    ஆங்கிலத்தில் `ஜிலோய்', தமிழில் `அமிர்தவல்லி' என்று அழைக்கப்படும் இது பல்வேறு ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. உடலில் சேரும் நச்சுகளை வெளியேற்றவும், ரத்தத்தை சுத்தப்படுத்தவும், நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிர் கிருமிகளை எதிர்த்து போராடவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யவும் இது உதவும். சளி மற்றும் இருமலுக்கும் நிவாரணம் தரும். ஜிலோய் தண்டுகளை தண்ணீரில் சில நிமிடங்கள் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்து வாரத்திற்கு இரண்டு முறை பருகி வரலாம்.

     மஞ்சள்:

    இதில் உள்ள குர்குமின் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுமின்றி உடலில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க செய்யும். இரவில் தூங்குவதற்கு முன்பு மஞ்சள் பால் பருகலாம். அது ஆழ்ந்த தூக்கத்திற்கும் வழிவகை செய்யும். குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்கவும் உதவும்.

     அஸ்வகந்தா:

    தூக்கமின்மை பிரச்சினைக்கு தீர்வு காணவும், மன அழுத்தத்தை போக்கவும் இது உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதுடன் மூட்டு சார்ந்த நோய்களுக்கும் சிகிச்சையளிக்க உதவும். அஸ்வகந்தா மாத்திரைகள், பொடியை வெதுவெதுப்பான பால் அல்லது தண்ணீருடன் கலந்து பருகலாம். அதற்கு முன்பு மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமானது.

    • நாடு முழுவதும் பதிவான 358 பாதிப்பில், 300 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
    • கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 211ஆக உள்ளது.

    நாட்டிலேயே அதிக அளவிளாக கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் இந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது இரண்டு ஆயிரத்தை தாண்டிவிட்டது.

    இந்நிலையில், மாநிலத்தில் இதுவரை 2,341 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 300 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் இறந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இன்று காலை 8 மணி வரை நாடு முழுவதும் பதிவான 358 பாதிப்பில், 300 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இதனால், கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,341 ஆக உயர்ந்துள்ளது.

    மாநிலத்தில் பதிவான மூன்று இறப்புகளுடன், கடந்த கால கொரோனா தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 72,059 ஐ எட்டியுள்ளது.

    நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்ட கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 211ஆக உள்ளது.

    கொரோனா தொற்று குறித்து, மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறுகையில், "கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள போதிலும், தொற்றை கையாள மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதால் யாரும் அச்சப்பட வேண்டாம்" என தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று ஒரே நாளில் 16 ஆக உயர்ந்துள்ளது.
    • தொற்றுடன் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும் 50ஐ நெருங்கியது.

    தமிழகத்தில் 7 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்து இரட்டை இலக்கமாக உயர்ந்தது.

    கடந்த டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை தினசரி பாதிப்பு 9 வரை பதிவான நிலையில் இன்று ஒரே நாளில் 16 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும், தமிழகத்தில் கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும் 50ஐ நெருங்கியது.

    தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை பொது சுகாதாரத் துறை அதிகரித்துள்ளது. அதன்படி, தினசரி பரிசோதனை எண்ணிக்கை 300ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    • எட்டு நாட்களில் மட்டும் 825 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு.
    • கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90 சதவீதம் அதிகரிப்பு.

    கேரளா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் அம்மாநிலத்தில் 479 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், டிசம்பர் மாதத்தின் முதல் எட்டு நாட்களில் மட்டும் 825 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  

    கடந்த நவம்பர் மாதம் கொரோனா மூலம் ஒருவர் உயிரிழந்த நிலையில், டிசம்பரில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு கொண்டவர்கள் உயிரிழப்பது மிகவும் அரிதாகி இருக்கும் நிலையில், பாதிப்பின் தீவிரம் மிகவும் குறைவான நிலையிலேயே உள்ளது.

     


    "தற்போது கொரோனா பாதிப்பு அதிவேகமாக அதிகரித்து வருகிறது என்ற போதிலும், அதன் தீவிரம் குறைவாக இருப்பதால், நிலைமை கட்டுக்குள்ளாகவே இருக்கிறது. எனினும், வயதானவர்கள் மற்றும் ஏற்கனவே உடல்நல பாதிப்பு கொண்டவர்களுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது," என மருத்துவர் முகமது நியாஸ் தெரிவித்து உள்ளார். 

    • சேலம் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகமாகி வருகிறது.
    • நேற்று மட்டும் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகமாகி வருகிறது. நேற்று மட்டும் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்

    பட்டுள்ளது. அதே சமயத்தில் நேற்று 38 பேர் குணமடைந்து டிஸ் சார்ஜ் செய்யப்பட்டனர்.

    மாவட்டத்தில் தற்போது வரை மொத்தம் 193 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பாதிப்பு அதிகம் உள்ள வர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளிலும், தனியார் மருத்துவமனை களிலும், மற்றவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கி வீடுகளில் வைத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நோய் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் முககவசம் அணிந்து எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    • பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முககவசம் அணிய வேண்டும்.
    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 5 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    தருமபுரி,

    தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று தமிழகத்தில் 519 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    3660 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்ைச பெற்று வருகிறார்கள்.

    நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து 502 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முககவசம் அணிய வேண்டும். அவ்வாறு அணிந்தால் கொரோனா பரவலை தடுக்க முடியும்.

    வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்த உடன் கைகளை ேசாப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். அவ்வாறு கழுவினால் நோய் தொற்றை பரவாமல் தடுக்கலாம்.

    தருமபுரி நேற்று மட்டும் 5 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களை வீடு மற்றும் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்தம் 39 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 5 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 5 முதல் 7 நாட்களில் குணமாகிவிடுகிறார்கள்.

    தருமபுரி,

    தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது 400-ஐ கடந்து விட்டது.

    இதன் காரணமாக, அனைத்து அரசு மருத்துவ மனைகள் என்று சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்து வர்கள், செவிலியர்கள், மருத்துவ களப் பணியா ளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை 100 சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் தினமும் கொ ரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாக ங்களுக்கு சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

    தருமபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    நேற்று 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில் தற்போது பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிப்பு ஏற்படவில்லை.

    சளி, இருமல், காய்ச்சல், தொண்டையில் கரகரப்பு போன்ற அறிகுறிகள்தான் உள்ளன. புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 5 முதல் 7 நாட்களில் குணமாகிவிடுகிறார்கள்.

    மூக்கில் இருந்து நீர் கொட்டினால் அது வைரஸ் காய்ச்சல். கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு கடுமையான உடல் வலி மற்றும் கடுமையான தலைவலி இருக்கும்.

    எனவே இந்த அறிகுறி களை வைத்து அது வைரஸ் காய்ச்சலா அல்லது கொரோனா தொற்றா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    தற்போது கொரோனா வைரஸ் தருமபுரி மாவட்ட த்தில் பரவ தொடங்கி விட்டது.

    இதனால் பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள முககவசம் அணிய வேண்டும். மேலும் வீட்டிற்கு வந்த உடன் கை, கால்களை நன்கு கழுவ வேண்டும். கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துகொள்ளலாம்.

    தற்போது பரவி வரும் புதிய வகை தொற்று 3 நாட்களுக்குள் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவி வருகிறது.

    இணை நோய் உள்ளவர்கள், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட வர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்கள் வீட்டில் இருக்கக் கூடாது. உடன டியாக மருத்துவ மனையை அனுக வேண்டும்.

    நாம் போட்டுக்கொண்ட கொரோனா தடுப்பூசியும், நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியும் புதிய வகை கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள போதுமானதாக உள்ளது.

    எனவே, பொதுமக்கள் பதற்றம் அடைய தேவை இல்லை. தேவையான இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை தூய்மையாக வைத்து இருக்க வேண்டும்.

    இருமல், தும்மல் வரும்போது கைகளை கொண்டு மூடிக் கொள்ள வேண்டும். அறிகுறி இருந்தால் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

    நல்ல சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக அளவு நீர் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    • மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
    • முககவசம் அணிந்து செல்வது அவசியம் என சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது.

    கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த இரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    இது கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவு பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 729 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த ஒருவர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 975 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 20 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தற்போது தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருவதால் கொரோனா தினசரி பரிசோதனையை அதிகரிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தற்போது நாளொன்றுக்கு 60 முதல் 70 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    இதேப்போல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முககவசம் அணிந்து செல்வது அவசியம் என சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    • மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
    • 60 முதல் 70 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவ டிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது. இந்நிலையில் கடந்த இரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 722 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 3 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 971 பேர் கொரோனா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 17 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தற்போது தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருவதால் கொரோனா தினசரி பரிசோ தனையை அதிகரிக்க சமூக ஆர்வலர்கள் கோரி க்கை வைத்துள்ளனர். தற்போது நாளொன்றுக்கு 60 முதல் 70 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ள னர்.

    • ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது.
    • மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தல்

    காரைக்கால்:

    நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

    இதேபோல் புதுச்சேரி, காரைக்காலிலும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கடந்த மூன்று நாட்களில் 20க்கு மேற்பட்டவருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. காரைக்காலில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், காரைக்கால் மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார். மேலும், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×