ஈரோட்டில் ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு

மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.முககவசம் அணிந்து செல்வது அவசியம் என சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.
ஈரோட்டில் ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது.

கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த இரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இது கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவு பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 729 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த ஒருவர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 975 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 20 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருவதால் கொரோனா தினசரி பரிசோதனையை அதிகரிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தற்போது நாளொன்றுக்கு 60 முதல் 70 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

இதேப்போல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முககவசம் அணிந்து செல்வது அவசியம் என சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com