ஈரோட்டில் ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு

மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.60 முதல் 70 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
ஈரோட்டில் ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவ டிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது. இந்நிலையில் கடந்த இரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 722 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 3 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 971 பேர் கொரோனா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 17 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருவதால் கொரோனா தினசரி பரிசோ தனையை அதிகரிக்க சமூக ஆர்வலர்கள் கோரி க்கை வைத்துள்ளனர். தற்போது நாளொன்றுக்கு 60 முதல் 70 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ள னர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com