search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைப்பந்து போட்டி"

    • அரசு, மாநகராட்சி, தனியார் பள்ளிகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
    • போட்டி முடிவில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் 27-வது நிட்சிட்டி கைப்பந்து போட்டிகள் சிறுபூலுவப்பட்டியில் உள்ள டிசெட் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட அரசு, மாநகராட்சி, தனியார் பள்ளிகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் மாணவர்களுக்கான மூத்தோர் பிரிவில் வித்ய விகாசினி பள்ளி முதலிடமும், பிரண்ட்லைன் பள்ளி 2-ம் இடமும், கே.எஸ்.சி. அரசு பள்ளி 3-ம் இடமும், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் பள்ளி 4-ம் இடமும் பிடித்தது. இதேபோல் மாணவர்களுக்கான மிகமூத்தோர் பிரிவில் வேலவன் பள்ளி முதலிடமும், பெருமாநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி 2-ம் இடமும், பிரண்ட்லைன் பள்ளி 3-ம் இடமும், ஏ.வி.பி. டிரஸ்ட் பள்ளி 4-ம் இடமும் பிடித்தது.

    மாணவிகளுக்கான மூத்தோர் பிரிவில் வித்ய விகாசினி பள்ளி முதலிடமும், செயிண்ட் ஜோசப் பள்ளி 2-ம் இடமும், இன்பன்ட் ஜீசஸ் பள்ளி 3-ம் இடமும், லிட்டில் கிங்டம் பள்ளி 4-ம் இடமும் பிடித்தது. மாணவிகளுக்கான மிக மூத்தோர் பிரிவில் வித்ய விகாசினி பள்ளி முதலிடமும், வேலவன் பள்ளி 2-ம் இடமும், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளி 3-ம் இடமும், ஏ.வி.பி. டிரஸ்ட் பள்ளி 4-ம் இடமும் பிடித்தது.

    இந்த போட்டியில் வித்ய விகாசினி பள்ளி அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. போட்டி முடிவில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. டிசெட் தலைவர் நிக்கான்ஸ் வேலுச்சாமி வரவேற்றார். பொருளாளர் தேவராஜன், துணைத் தலைவர் காந்திராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாவட்ட கைப்பந்து கழகத்தின் தலைவர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார். முடிவில் டிசெட் செயலாளர் துரைசாமி நன்றி கூறினார். போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சாம்பியன் கோப்பையும், கலந்து கொண்டு வீரர்-வீராங்கனைகளுக்கு தனிநபர் கோப்பையும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

    • இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. கே.சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
    • நேரு ஸ்டேடியத்தில் இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது.

    தமிழ்நாடு கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.என்.ஜே. நிறுவன ஆதரவுடன் 70- வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. நேரு ஸ்டேடியத்தில் இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது.

    லீக் மற்றும் நாக்- அவுட் முறையில் நடத்தப்படும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம்., இந்தியன் வங்கி, தமிழ்நாடு போலீஸ், சென்னை ஸ்பைக்கர்ஸ், சுங்க இலாகா, வருமன வரி, ஐ.ஓ.பி.செயின்ட் ஜோசப் உள்பட 32 அணிகளும், பெண்கள் பிரிவில் டாக்டர் சிவந்தி கிளப், தமிழ்நாடு போலீஸ், பி.கே.ஆர்.(கோபி) எஸ்.ஆர்.எம்., எஸ்.டி.ஏ.டி, ஜி.கே.எம்., ஐ.சி.எப். தமிழ்நாடு தபால் துறை பாரதியார் (ஆத்தூர்) செயின்ட் மேரிஸ், ராணி மேரி கல்லூரி உள்பட 49 அணிகளும் பங்கேற்கின்றன.

    இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. கே.சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.

    மேற்கண்ட தகவலை தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச் செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர் தெரிவித்துள்ளார்.

    • எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் 3 நாட்கள் போட்டி நடைபெறுகிறது.
    • வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு தொகையுடன் சான் அகாடமி கோப்பைகள் வழங்கப்படும்.

    சென்னை:

    சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் சான் அகாடமி ஆதரவுடன் மாவட்ட பள்ளிகள் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (3-ந்தேதி) தொடங்குகிறது. 5-ந்தேதி வரை 3 நாட்கள் போட்டி நடைபெறுகிறது.

    சிறுவர்கள் பிரிவில் 25 பள்ளிகளும், சிறுமிகள் பிரிவில் 16 பள்ளிகளும் ஆக மொத்தம் 41 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு தொகையுடன் சான் அகாடமி கோப்பைகள் வழங்கப்படும். இது தவிர தனி நபர் பரிசு தொகையும் அளிக்கப்படும்.

    மேற்கண்ட தகவல்களை சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜுன் துரை தெரிவித்துள்ளார்.

    • தீயணைப்பு வீரர்களுக்கான பயிற்சி முகாமில் கைப்பந்து போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

    கரூர்:

    வேட்டமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தீயணைப்பு வீரர்களுக்கும், அதே கல்லூரியில் போலீஸ் பயிற்சி சென்டரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்கும் கல்லூரி வளாகத்தில் கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் தீயணைப்பு பயிற்சி வீரர்கள் வெற்றி பெற்றனர். பயிற்சி மாணவர்கள் 2 வது இடத்தை பெற்றனர். இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.

    • முதல் பரிசை மதுரை சி.இ.ஓ.எ. மெட்ரிக் பள்ளி அணியும், 2-ம் பரிசை ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளி அணியினரும் பெற்றனர்.
    • போட்டியில்வெற்றி பெற்ற அணிக்கு வெற்றிக் கோப்பைகள், பரிசு தொகை வழங்கப்பட்டது.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மடத்தூர் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் இந்து நடுநிலைப்பள்ளியில் மடத்தூர் எஸ்.கே.பி. குத்தாலிங்கம் நாடார் நினைவாக, பள்ளியின் நிர்வாகி கதிர்வேல் முருகன் தலைமையில் மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான 14 மற்றும் 17 வயதிற்கான கைப்பந்து போட்டிகள் நடத்தப்பட்டது.

    14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் முதல் பரிசை மதுரை சி.இ.ஓ.எ. மெட்ரிக் பள்ளி அணியும், 2-ம் பரிசை ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளி அணியினரும், 3-ம் பரிசை மடத்தூர் இந்து நடுநிலைப்பள்ளி அணியினரும், 4-ம் பரிசை மதுரை ரிசர்வ் லைன் மேல்நிலைப்பள்ளி அணியினரும் பெற்றனர்.

    17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் முதல் பரிசை புல்லுக்காட்டுவலசை அரசு மேல்நிலைப்பள்ளி அணியினரும், 2-ம் பரிசை மதுரை சி.இ.ஓ.எ. மெட்ரிக் பள்ளி அணியினரும்,3-ம் பரிசை மதுரை ரிசர்வ் லைன் மேல்நிலைப்பள்ளி அணியினரும், 4-ம் பரிசை அம்பை கேம்பிரிட்ஜ் மெட்ரிக் பள்ளி அணியினரும் பெற்றனர்.

    போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கு வெற்றிக் கோப்பைகள், பரிசு தொகை மற்றும் அணி வீரர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    விழாவில் கீழப்பாவூர் வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ண பாரதி மற்றும் புல்லுக்காட்டு வலசை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை ராஜேஷ், பிரவீன், அகஸ்டின் மற்றும் ஆனந்த் ஆகியோர் செய்திருந்தனர்.

    • ராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான யூத் சாம்பியன்ஷிப் கைப்பந்து போட்டி 6-ந் தேதி தொடங்குகிறது.
    • போட்டியில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு தங்கும் இடம், உணவு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்ட கைப்பந்துக் கழகத்தின் தலைவர் செல்வகணேஷ், பொருளாளர் துரை சிங், தலைமையக செயலாளர் பொன்னியின்செல்வன், பொருளாளர் விநாயகமூர்த்திஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகத்தின் திட்டங்களில் ஒன்றான மாநில யூத் சாம்பியன்ஷிப் போட்டிகள் ராஜபாளையத்தில் நடைபெற உள்ளது.

    இதில் தமிழகத்தின் 38 மாவட்டங்கை சேர்ந்த ஆண், பெண் அணிகள் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டியில் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்த போட்டிகள் விருதுநகர் மாவட்ட கைப்பந்து கழகத்தின் சார்பாக வருகிற 6-ந்தேதி தொடங்கி 9-ந்தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.

    ராஜபாளையம் ரெயில்வேபீடர் ரோட்டில் உள்ள கிருஷ்ணம ராஜபாளையம் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட நாடார் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம், ராம்கோ ஊர்காவல்படை மைதானத்தில் நடைபெறும்.

    இந்த போட்டிகளுக்காக 5மைதானங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் 3 மைதானங்களில் மின் ஒளி வசதி செய்யப்பட்டுள்ளது.

    போட்டியில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு தங்கும் இடம், உணவு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    போட்டிகளின் தொடக்க விழா போட்டி வருகிற 6-ந்தேதியன்று மாலை 3 மணி அளவில் நாடார் மேல்நிலை பள்ளியில் நடைபெறும்.

    இதில் 1000 போட்டி யாளர்கள், 50 நடுவர்கள் மற்றும் தேர்வுகுழு உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள். பார்வையாளர்கள் அமர்ந்து விளையாட்டை கண்டு ரசிக்க காலரி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டி.எஸ்.பி. பெனாசீர்பாத்திமா கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்தார்.
    • போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியம், தென்கரை கோட்டையில் காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் நல்லுறவு ஏற்படுத்தும் வகையில் தருமபுரி மாவட்ட காவல் துறை சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் அறிவுறுத்தலின் பேரில் அரூர் டி.எஸ்.பி. பெனாசீர்பாத்திமா கலந்து கொண்டு கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்தார்.

    இதில் கோபிநாதம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா மற்றும் போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். போலீசார் மற்றும் தென்கரை கோட்டை வடகரை ஆகிய பகுதிகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.

    இதில் தென்கரை கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் விஜயாசங்கர், ஊராட்சி செயலர் கிருஷ்ணமூர்த்தி, பா.ஜ.க முன்னாள் மாவட்ட பொரு ளாளரும், முன்னாள் ராணுவ வீரருமான குமரவேல், பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நம்பியூர் குமுதா பள்ளி மைதானத்தில் 2 நாள் நடைபெறும் மேற்கு மண்டல அளவிலான கைப்பந்து போட்டி தொடக்க விழா நடைபெற்றது.
    • இப்போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடும் வீரர்கள் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் குமுதா பள்ளி மைதானத்தில் 2 நாள் நடைபெறும் மேற்கு மண்டல அளவிலான கைப்பந்து போட்டி தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு குமுதா பள்ளியின் தாளாளரும், கமிட்டி சேர்மனுமான கே.ஏ.ஜனகரத்தினம் தலைமை தாங்கினார். குமுதா பள்ளியின் செயலாளர் டாக்டர். அரவிந்தன், துணை செயலாளர் டாக்டர்.மாலினி, இணை தாளாளர் சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மாநில கைப்பந்து கழக பொதுச்செயலாளர் மார்ட்டின் சுதாகர் கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    தமிழகத்தில் 4 மண்டல ங்களில் நடைபெறும் மண்டல அளவிலான கைப்பந்து போட்டியில் ஒவ்வொரு மண்டலத்திலும் 8 மாவட்ட அணிகள் பங்குகொண்டு லீக் மற்றும் நாக்அவுட் முறையில் விளையாடினர். கைப்பந்து போட்டியில் வெற்றி பெறும் முதல் 4 அணிகளை தேர்வு செய்து அடுத்த மாதம் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    இப்போட்டிக்காக அரியலூர், நாகர்கோயில், வேலூர், ஈரோடு மண்டல அளவிலான போட்டிகள் நடைபெற்று கொண்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் போட்டியில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, தருமபுரி, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இப்போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடும் வீரர்கள் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் குமுதா பள்ளியில் முதல்வர் மஞ்சுளா, தலைமை ஆசிரியை வசந்தி மற்றும் தமிழ்நாடு கைப்பந்து கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×