search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குண்டுவெடிப்பு"

    • போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • 10க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    லண்டன்:

    பிரான்ஸ் அருகே ஜெர்சி தீவின் தலைநகரான செயின்ட் ஹீலியரில் இன்று மூன்று தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென குண்டுவெடித்தது போன்று பலத்த சத்தம் எழுந்தது. சத்தம் வந்த சில வினாடிகளில் கட்டிடம் இடிந்து விழுந்தது.

    இதில் கட்டிடம் முழுமையாக சிதைந்து தரைமட்டமானது. அதில் வசித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொணடனர். அருகில் உள்ள குடியிருப்பு கட்டிடமும் சேதமடைந்தது.

    விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆம்புலன்ஸ்களும் வரவழைக்கப்பட்டன. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 10க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. அவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

    இந்த விபத்தில் உயிரிழந்தவாக்ளுக்கு ஜெர்சி முதல்வர் கிறிஸ்டினா மூர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் குண்டுவெடிப்பால் இடம்பெயர்ந்தவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.

    • வெடிகுண்டு வெடித்ததில் பேருந்து, அருகில் உள்ள வாகனம் மற்றும் கடைகள் சேதமடைந்தன.
    • கொராசன் மகாண ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதல் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இஸ்லாமாபாத்:

    ஆப்கானிஸ்தானில் இன்று காலையில் அரசு ஊழியர்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பால்க் மாகாணத்தின் மசார்-இ ஷரிப் நகரில் சாலையோரம் இருந்த வண்டிக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. ஹியரடன் எரிவாயு மற்றும் பெட்ரோலியத் துறை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து அப்பகுதியை கடந்தபோது, வெடிகுண்டு வெடித்தது. இதில் பேருந்து கடுமையாக சேதமடைந்தது. மேலும் அருகில் உள்ள வாகனம் மற்றும் அங்கிருந்த கடைகளும் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்தன.

    இந்த தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஐஎஸ் அமைப்பின் துணை அமைப்பான கொராசன் மகாண ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தலிபான்களின் போட்டி அமைப்பான இந்த ஐஎஸ் அமைப்பானது, ஆப்கானிஸ்தானில் 2021ல் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
    • ஐஎஸ் அமைப்பால் முன்னர் நடத்தப்பட்ட தாக்குதல்களின் போது இஸ்திக்லால் அவென்யூ கடுமையாக பாதிக்கப்பட்டது

    இஸ்தான்புல்:

    துருக்கியின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல் நகரின் மையப்பகுதியில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இஸ்திக்லால் கடை வீதியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் அப்பகுதியில் நின்றிருந்த மக்கள் தூக்கி வீசப்பட்டனர். குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதும் மக்கள் பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அந்த இடமே போர்க்களம்போல் காட்சியளித்தது.

    குண்டுவெடிப்பு குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் இறந்ததாகவும், மேலும் சிலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

    2015-2016 காலகட்டத்தில் துருக்கியை குறி வைத்து ஐஎஸ் பயங்கரவாத அமைப்பால் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களின் போது இஸ்திக்லால் அவென்யூ கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது தீப்பொறி பறந்து தீப்பற்றியது.
    • பாலத்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு உக்ரைன் தரப்பு பொறுப்பேற்கவில்லை.

    மாஸ்கோ:

    ரஷியாவுடன் கிரீமியா தீபகற்ப பகுதி இணைக்கப்பட்ட பின்னர், ரஷிய அதிபர் புதின், புதிய பாலம் ஒன்றை உருவாக்கி 2018-ம் ஆண்டு திறந்து வைத்தார். கெர்ச் ஜலசந்தியின் குறுக்கே 19 கி.மீ. தொலைவுக்கு கட்டப்பட்ட இந்த பாலம் ஆனது ரஷியாவின் முக்கிய நிலப்பரப்புடன் கிரீமியாவை இணைக்கின்றது. இந்த பாலத்தில் ரெயில்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்வதற்கு என இரு பிரிவுகள் அமைக்கப்பட்டு உள்ளன. 2020-ம் ஆண்டு முழு அளவில் இந்த பாலம் செயல்பாட்டுக்கு வந்தது.

    இந்த நிலையில், ரஷியாவுடன் கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தின் மீது இன்று குண்டுவெடிப்பு நடத்தப்பட்டு உள்ளது. ஒரு லாரியில் வெடிபொருட்களை நிரப்பி அதை வெடிக்க செய்துள்ளனர். இதன் காரணமாக பாலத்தின் இரண்டு பகுதிகள் இடிந்து விழுந்தன. அப்போது பாலத்தின் வழியாக வாகனத்தில் பயணித்த 3 பேர் வெடிவிபத்தில் பலியாகினர்.

    ரெயில்வே தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீதும் தீப்பொறி பறந்து தீப்பற்றியது. இதில், எரிபொருள் நிரப்பப்பட்ட 7 ரெயில் பெட்டிகள் தீப்பிடித்தன. இதனை தொடர்ந்து அந்த பாலத்தில், ரெயில் மற்றும் வாகன போக்குவரத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில், குண்டு வெடிப்புக்கு காரணமான அந்த வாகனத்தின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டார் என்று ரஷியாவின் விசாரணைக் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    கிரிமியாவின் பிராந்திய நாடாளுமன்றத்தின் சபாநாயகர், குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு உக்ரைன் மீது குற்றம் சாட்டினார். எனினும் உக்ரைன் தரப்பு இதற்கு பொறுப்பேற்கவில்லை.

    இச்சம்பவம் குறித்து உக்ரைன் அதிபரின் ஆலோசகர் மைக்கைலோ போடோலியாக் கூறுகையில், "சட்டவிரோதமான அனைத்தும் அழிக்கப்பட வேண்டும், திருடப்பட்ட அனைத்தும் உக்ரைனுக்குத் திரும்ப வேண்டும், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்தும் வெளியேற்றப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டு வெடித்துள்ளது
    • சமீபத்தில் கல்வி நிலையத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 53 பேர் கொல்லப்பட்டனர்

    காபூல்:

    ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்துறை அமைச்சக வளாகத்தில் உள்ள மசூதியில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த விபத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். 25 பேர் காயமடைந்துள்ளனர்.

    குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை ஆளும் தலிபான் அமைப்பு உறுதி செய்தது. அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் அந்த மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டு வெடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்காலம் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் மக்களை கடும் பீதியில் ஆழ்த்தி உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன் கல்வி நிலையத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 53 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • உதம்பூர் நகரில் சில மணி நேரங்களுக்குள் நடந்த இரண்டாவது குண்டுவெடிப்பு சம்பவம் இதுவாகும்.
    • வாகனம் பலத்த சேதம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளன.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உதம்பூர் நகரில் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் இன்று காலை குண்டுவெடித்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

    உதம்பூர் நகரில் சில மணி நேரங்களுக்குள் நடந்த இரண்டாவது குண்டுவெடிப்பு சம்பவம் இதுவாகும். நேற்று இரவு டோமெயில் சௌக்கில் உள்ள பெட்ரோல் பம்ப் அருகே நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் இருவர் காயமடைந்தனர்.

    இன்று அதிகாலை 5.40 மணியளவில் நடந்த இரண்டாவது குண்டுவெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், வாகனம் பலத்த சேதம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளன.

    • 3 தளங்கள் கொண்ட அந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
    • போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்

    சிகாகோ:

    அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் இன்று திடீரென குண்டுவெடித்தது போன்ற பயங்கர சத்தம் கேட்டது. 3 தளங்கள் கொண்ட அந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் கட்டிடத்தின் ஒரு பகுதி கடுமையாக சேதமடைந்தது. ஏராளமான செங்கற்கள் மற்றும் பிற சிமெண்ட் துண்டுகள் தெருவில் சிதறி விழுந்தன. இதனால் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் சேதமடைந்தது.

    இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

    6 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் சிலர் இடிபாடுகளியில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீக்கிய குருத்வாரா அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

    காபூல், ஜூன்.18-

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கிய குருத்வாரா உள்ளது. இங்கு இன்று காலை 30 பேர் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

    குருத்வாரா கர்கே பர்வான் பகுதியில் குண்டுகள் வெடித்தன. இதனால் குருத்வாராவுக்குள் இருந்த சீக்கியர்கள் அதிர்ச்சி அடைந்து வெளியே ஓடி வர முயன்றனர்.

    அப்போது தீவிரவாதிகள் குருத்வாராவுக்குள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் குருத்வாரா வின் காவலாளி அகமது என்பவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

    உடனே பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் விரைந்து வந்தனர். அவர்கள் குருத்வாராவுக்குள் புகுந்த தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் துப்பாக்கியால் சுடும் சத்தங்கள் கேட்டபடி இருந்தது. குருத்வாரா வளாகத்தில் இரண்டு குண்டுகள் வெடித்தன. இதனால் பெரும் கரும்புகை வெளியேறியது.

    தீவிரவாதிகள் தாக்கு தலால் குருத்வாராவில் இருந்து வெளியேற முடியா மல் ஏராளமான சீக்கியர்கள் சிக்கி உள்ளனர்.

    தாக்குதல் தொடங்கிய போது 3 பேர் வெளியே வந்து விட்டனர். இன்னும் 15-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தெரிகிறது. அவர்களை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சீக்கிய பக்தர் ஒருவர் உயிரிழந்தார் என்று தகவல் வெளியாகி உள்ளது. மற்றவர்கள் நிலைமை பற்றி தெரியவில்லை. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறும் போது, காபூலில் உள்ள புனித குருத்வாரா மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து காபூலில் இருந்து வெளியான தகவல்களால் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம். அங்குள்ள நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். கூடுதல் விவ ரங்களுக்காக காத்தி ருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

    வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் கூறும்போது, 'குருத்வாரா மீதான கோழைத்தனமான தாக்குதலை அனைவரும் வன்மையாக கண்டிக்க வேண்டும். தாக்குதல் பற்றிய தகவல் கிடைத்ததில் இருந்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். எங்களின் முதல் மற்றும் முதன்மையான அக்கறை சமூகத்தின் நலனில் உள்ளது என்றார்.

    குருத்வாரா மீதான தாக்குதலை ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தி உள்ளனர் என்று ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான ஐ.எஸ். கொரோசன் பிரிவு சமீபத்தில் 2020-ம் ஆண்டு நடந்த குருத்வாரா தாக்குதல் மீண்டும் நடத்தப் போவதாக மிரட்டல் வீடியோ வெளி யிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    2020-ம் ஆண்டு மார்ச் மாதம் காபூலின் ஷார்ட் பஜார் பகுதியில் உள்ள குருஹர்ராய் சாகிப் குருத்வா ராவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 சீக்கியர்கள் கொல்லப் பட்டனர்.

    கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அங்கிருந்து ஏராள மான சீக்கியர்கள் இந்தியாவுக்கு வந்தனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள பழைய இரும்புக்கடையில் இன்று திடீரென குண்டுவெடித்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
    லக்னோ :

    உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர்நகரின் கச்சி சதக் பகுதியில் உள்ள பழைய இரும்புக்கடையில் இன்று திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் சிதறி பலியாகியுள்ளனர். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும், வெடிக்காத நிலையில் வேறு ஏதேனும் வெடிகுண்டுகள் உள்ளதா என்று குண்டுகளை செயலிழக்க செய்யும் அதிகாரிகள் குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த திடீர் குண்டிவெடிப்புக்கான காரணம் குறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×