search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குணா"

    • மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இதுவரை உலகளவில் 235 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    • இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி மலையாளத்தில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் என்ற படம் வெளியானது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேரளாவில் ரிலீசான இந்த படம் தமிழ்நாடு மற்றும் உலகம் முழுக்க வெளியிடப்பட்டது.

    மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த பலரும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் என பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டினர். 

    கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி அவர் குணா படத்தில் நடக்கும் போது ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.

    மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை இயக்கிய சிதம்பரம் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் படத்தை இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியது. மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இதுவரை உலகளவில் 235 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள திரையுலகில் மிக்பெரிய வசூலை குவித்த படங்களின் பட்டியலில்  இத்திரைப்படம் முதல் இடத்தில் இருக்கிறது.

    படத்தின் டிஜிட்டல் உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வாங்கியுள்ளது. தற்பொழுது படம் வரும் மே 3 ஆம் தேதி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படம் வெளியாகி 4 நாட்களில் 40 கோடி வசூலித்து கேரளா சினிமாவில் சாதனைப் படைத்துள்ளது.
    • மீண்டும் இப்பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

    சமீபத்தில் வெளியாகி கேரளாவில் பெரும் ஆதரவு பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் படம் தமிழ்நாட்டிலும் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டு மக்களிடமும் பெரும் ஆதரவு மற்றும் வரவேற்பை பெற்ற இந்த படத்தை பரவா பில்ம்ஸ் நிறுவனம் தயாரித்தது.

    இதில் ஷோபின் ஷஹிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் போன்ற முன்னணி கதாப்பாத்திரங்கள் நடித்த படத்தை மலையாள இயக்குனர் சிதம்பரம் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு "ஜான்-இ-மான்"படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். இந்நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் படம் வெளியாகி 4 நாட்களில் 40 கோடி வசூலித்து கேரளா சினிமாவில் சாதனைப் படைத்துள்ளது. தமிழ்நாட்டிலும் இப்படம் பெரும் வசூலினை பெற்று வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

    தமிழ் சினிமா முன்னணி பிரபலங்களான நடிகர் விக்ரம், நடிகர் தனுஷ், இயக்குனர் கார்த்தி சுப்பராஜ், நடிகர் சித்தார்த், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை பார்த்து படகுழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளனர். இப்படத்தில் கமல் நடித்த குணா படத்தில் உள்ள கண்மணி அன்போடு காதலன் என்னும் பாடல் இப்படத்தின் இறுதி கட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

    இதனால் மீண்டும் இப்பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. இதையொட்டி மார்ச் 1 -ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன், மஞ்சும்மாள் பாய்ஸ் படக்குழுவினர் அனைவரையும் அவரின் அலுவகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி, குணா படத்தின் போது ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

    • சமூக வலைத்தளங்களில் பலரும் குணா திரைப்படம் பற்றியும் அப்படத்தில் வரும் குணா குகை பற்றியும் பதிவிட்டு வருகின்றனர்.
    • 1991-ம் ஆண்டு, தீபாவளியையொட்டி, ‘தளபதி', 'குணா' ஆகிய படங்கள் வெளியாயின. அதில் ‘தளபதி' வசூல் குவிக்க, ‘குணா' அப்போட்டியில் சறுக்கியது.

    அண்மையில் வெளியான மலையான திரைப்படமான `மஞ்சுமேல் பாய்ஸ்' தமிழ்நாட்டிலும் வரவேற்பை பெற்றுள்ளது. காரணம் படத்தின் ஒட்டுமொத்த கதையுமே `குணா' குகையை மையப்படுத்தியதுதான். அதனால் சமூக வலைத்தளங்களில் பலரும் குணா திரைப்படம் பற்றியும் அப்படத்தில் வரும் குணா குகை பற்றியும் பதிவிட்டு வருகின்றனர்.

    1991-ம் ஆண்டு, தீபாவளியையொட்டி, 'தளபதி', 'குணா' ஆகிய படங்கள் வெளியாயின. அதில் 'தளபதி' வசூல் குவிக்க, 'குணா' அப்போட்டியில் சறுக்கியது. எனினும், 25 ஆண்டுகள் கழித்தும் குணா படத்திற்கு ரசிகர்கள் தரும் ஆதரவு அதனை 'கல்ட்' கிளாசிக் படமாக மாற்றியுள்ளது.

    'குணா' படத்தில் வரும் குகை குறித்து 1991ல் நடிகர் கமல்ஹாசன் ஒரு பேட்டி அளித்துள்ளார்.

    அதில், "கொடைக்கானலில் இதுவரை படப்பிடிப்பே நடக்காத, மனித நடமாட்டமே அறியாத பிரதேசங்களிலெல்லாம் 'குணா' படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். இதற்கான லொகேஷன் தேடி நானும் இயக்குநர் சந்தானபாரதியும் 7 கி.மீ அலைந்தும் திருப்தியான இடம் அமையவில்லை.

    'இன்னும் 1 கி.மீ போய் பார்ப்போமே' என்று போய்ப் பார்த்தால் அப்படி ஒரு அருமையான லொகேஷன் எங்களுக்குக் கிடைத்தது. அது ஒரு மலை உச்சி! அங்கே ஒரு சர்ச் செட்டை அமைத்து படப்பிடிப்பு நடத்தினோம். எங்கள் யூனிட் அங்கே போவதற்கு புதிதாக ஒரு பாதையே அமைத்தோம். படத்தின் பல காட்சிகளை எடுக்க யூனிட் முழுவதுமே 700 அடி பள்ளத்தாக்கில் கயிறு கட்டி இறங்கிப் போக வேண்டியிருந்தது" என்று கமல் பேசியிருப்பார்

    ×