search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்த்திகை மாதம்"

    • கார்த்திகையில் சோமவார விரதம் இருப்பது பாவங்களை விரட்டும்.
    • கார்த்திகை மாதம் செய்யும் தானத்துக்கு இரு மடங்கு பலன் உண்டு.

    திருவண்ணாமலை மகா தீபத்தை காண்பவர்களின் வாழ்க்கை ஒளி பெற்று பிரகாசமாக விளங்கும் என்பது ஐதீகம்.

    கார்த்திகை மாதம் பவுர்ணமி திதி அன்று ஓட்டுச் செடி என்ற நாயுருவி வேரினைப் பறித்து வீட்டுக்கு எடுத்து வந்தால் தனலாபம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    கார்த்திகையில் சோமவார விரதம் இருப்பது பாவங்களை விரட்டும்.

    கார்த்திகை மாதம் காவேரியில் நீராடுவது, தீபம் தானம் செய்வது, வெங்கல பாத்திரம், தானியம், பழம் தானம் செய்தால் செல்வம் சேரும்.

    கார்த்திகை புராணத்தை கேட்டால் நோய், ஏழ்மை அகலும்.

    கார்த்திகை மாதம் செய்யும் தானத்துக்கு இரு மடங்கு பலன் உண்டு.

    கார்த்திகையில் அதிகாலையில் நீராடி கடவுளை வழிபட்டால் துன்பங்கள் விலகும்.

    கார்த்திகை மாதம் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.

    கார்த்திகை மாதம் ஆலயத்தை சுத்தம் செய்தால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.

    கார்த்திகை மாதம் பகவத் கீதை படித்தால் மன அமைதி உண்டாகும்.

    கார்த்திகை மாதம் பவுர்ணமிக்கு பிறகு வரும் சோமவாரம், அல்லது கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்துக்கு பிறகு வரும் சோமவாரத்தில் விரதம் இருந்து கடவுளை வணங்குவதால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

    தீப திருநாளன்று கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.

    • கார்த்திகை சோமவார விரதம் சிவனுக்கு உரியது.
    • சிவத்தலங்களை தரிசிப்பதும் கோடிப்புண்ணியத்தைப் பெற்றுத் தரும்.

    சோமவார விரதம் ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டியதாகும். என்றாலும், கார்த்திகை மாதத்து சோமவாரங்கள் (திங்கள் கிழமைகள்) தனிச் சிறப்பு பெறுகின்றன.

    உலகம் முழுவதும் ஒளி வீசச்செய்யக்கூடிய சந்திரனின் சாபத்தை சிவபெருமான் நிவர்த்தி செய்த தினம் ஒரு கார்த்திகை மாத திங்கட்கிழமை ஆகும். 'க்ஷயரோகம்' என்னும் உடல் தேயும் நோய்க்கு ஆளான சந்திரன் சிவனைச் சரணடைந்து மீண்டும் வளர ஆரம்பித்த தினமே கார்த்திகை சோமவாரமாகக் கொண்டாடப்படுவதாகச் சொல்வர். இத்தகைய கார்த்திகை சோமவாரத்தில் நாம் சிவபெருமானை ஆராதித்து விரதம் இருந்து வழிபடுவதால் நம் வாழ்வின் கஷ்டங்கள் விலகி இஷ்டங்கள் பூர்த்தியாகும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    கார்த்திகை மாதம் இந்துக்களிடையே புனிதமான ஒரு மாதமாகவும் பலவிரதங்களை அனுஷ்டிக்கும் மாதமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. இம்மாதத்தில் பல விரதங்கள் இருப்பினும் கார்த்திகை சோமவார விரதம் சிவனுக்கு உரியது. துன்பங்களை விலக்கி இன்பங்களை வழங்கக்கூடிய விரதமாக சோமவார விரதம் அமைகிறது.

    சந்திரனின் நல்வாழ்வுக்காக அவனுடைய மனைவி ரோகிணி அவனுடன் சேர்ந்து இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள். அன்று முதல், பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், நோய்நொடிகள் இல்லாமல் இருக்கவும், இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

    கார்த்திகை சோமாவார திருநாள்களில் சிவத்தலங்களை தரிசிப்பதும் கோடிப்புண்ணியத்தைப் பெற்றுத் தரும். கார்த்திகை சோம வார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடி அன்றாட அனுஷ்டானங்களை முடித்து சிவ பூஜை செய்ய வேண்டும்.

    ஒரு வயதுமுதிர்ந்த தம்பதியினரை அழைத்து வந்து உபசாரங்கள் செய்து அவர்களுக்குத் தங்களால் இயன்ற அளவு தானங்கள் அளித்து ஆசி பெறுதல் வேண்டும். அன்று பகல்பொழுது உண்ணாமல் இருந்து மாலையில் சிவதரிசனம் செய்து முன்னிரவில் சிறு உணவு உண்டு உபவாசம் முடிக்க வேண்டும்.

    இவ்வாறு செய்ய முடியாதவர்கள் அன்று நீராடி சிவ ஆலயங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு தங்களால் இயன்ற அபிஷேக திரவியங்களை சமர்ப்பித்து வழிபடுதல் வேண்டும்.

    கார்த்திகை திங்கட்கிழமையான சோமவாரத்தில், கணவனும் மனைவியும் ஆலயங்களுக்குச் சென்று வருவது உத்தமம். அதனால் சிவ-சக்தியின் ஆசி கிடைத்து, காலம் முழுவதும் அந்தத் தம்பதி கருத்து வேறுபாடின்றி இணைந்திருப்பார்கள்.

    கார்த்திகை மாதத்தில் ஸ்ரீமன் நாராயணர், ஒவ்வொருவர் வீட்டில் உள்ள நீரிலும் எழுந்தருள்வதாக ஐதிகம். கார்த்திகை மாதத்தில் கஸ்தூரி மஞ்சளால் அபிஷேகம் செய்து, தாமரை மலரால் அர்ச்சனை செய்தால், மகா விஷ்ணுவுடன் லட்சுமிதேவி நம் வீட்டில் நிரந்தரமாகத் தங்கிவிடுவாள் என்கிறார்கள் பக்தர்கள்.

    கார்த்திகை மாதத்தில் சாளக்கிராமத்தை துளசியால் அர்ச்சிப்பவர்கள், வைகுண்டம் செல்லும் பாக்கியத்தை அடைவர். கார்த்திகை சோம வார நாளில், சங்காபிஷேக தரிசனம் செய்தால் கடன் தொல்லையில் இருந்து மீள்வர் என்பது நம்பிக்கை.

    • சகல பாவங்களும் நீங்குவதுடன் புண்ணியங்களும் நம்மை வந்து சேரும்.
    • சிவசக்தியின் பேரருள் கிடைக்கும் என்பது அடியார்களது நம்பிக்கை.

    கார்த்திகை மாதம் துவாதசி நாளில், துளசி தேவி மகா விஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். எனவே, கார்த்திகை மாதம் முழுவதும் விரதம் இருந்து துளசி தளைகளால் மகா விஷ்ணுவை அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால், ஒவ்வொரு துளசி தளைக்கும் ஒவ்வொரு அஸ்வமேதயாகம் செய்த பலன் உண்டு என்பர். துளசி மாலை அணிபவர்களிடம், மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்வாள் என்று சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.

    கார்த்திகை மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும். மகாவிஷ்ணுவை கஸ்தூரியால் அலங்கரித்து, தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தேவாதி தேவர்களால் பெற முடியாத பாக்கியத்தைக் கூட பெறலாம்.

    விஷ்ணுவின் சந்நிதிக்கு நேரே அமர்ந்து கொண்டு, பகவத் கீதையின் விபூதி யோகம், பக்தி யோகம், விஸ்வரூப யோகம் ஆகியவற்றை பாராயணம் செய்தால், சகல பாவங்களும் நீங்குவதுடன் புண்ணியங்களும் நம்மை வந்து சேரும்.

    நவக்கிரக மூர்த்திகள் விரதம் அனுஷ்டித்து, வரம் பெற்ற கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரெண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் பேரருள் கிடைக்கும் என்பது அடியார்களது நம்பிக்கை.

    தன்னைப் பிரிந்த திருமகளுடன் மீண்டும் சேருவதற்காக மகாவிஷ்ணு தவம் மேற்கொண்டு, சிவபெருமானது அருளைப் பெற்ற திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம். இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நடைபெறும் கார்த்திகை ஞாயிறு நீராடல் உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில், அதிகாலை 5 முதல் 6 மணிக்குள் சிவபெருமானும் பார்வதிதேவியும் அஸ்திர தேவரோடு பிரகார வலம் வந்து, குப்த கங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்கி அருளுகின்றனர்.

    கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம், திருடுவதால் வரும் பாவம் மற்றும் மனச் சஞ்சலத்தால் ஏற்பட்ட பாவங்கள் ஆகியவை நீங்கி விடும் என்று பிரும்மாண்ட புராணம் கூறுகிறது.

    கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதிகாலையில் நீராடி, விரதம் இருந்து சிவவிஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் கூறுகின்றன.

    • வஞ்சிரம், வவ்வால், சங்கரா, கானாங்கெழுத்தி, கிழங்கன், பாறை உள்ளிட்ட மீன்களின் விலை வழக்கத்தை விட குறைந்து இருந்தது.
    • கோழி இறைச்சி கிலோ சராசரியாக ரூ.260ஆக உள்ளது.

    சென்னை:

    கார்த்திகை மாதம் கடந்த 17-ந்தேதி தொடங்கியது. இந்த மாதத்தில் சபரிமலை செல்லும் பக்தர்கள் பெரும்பாலானோர் விரதம் இருப்பது வழக்கம். இதனால் மீன், இறைச்சி விலை சற்று குறைந்து உள்ளது.

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பெரிய வகை மீன்கள் வரத்து அதிகமாக இருந்தது. வஞ்சிரம், வவ்வால், சங்கரா, கானாங்கெழுத்தி, கிழங்கன், பாறை உள்ளிட்ட மீன்களின் விலை வழக்கத்தை விட குறைந்து இருந்தது.

    கடந்த வாரத்தை ஒப்பிடும்போது தற்போது ரூ.100 முதல் ரூ.200 வரை விலை குறைந்து இருந்தது. ரூ.1000-க்கு விற்ற வஞ்சிரம் ரூ.800-க்கு விற்கப்பட்டது.

    இதேபோல் கோழி இறைச்சி விலையும் சற்று குறைந்து உள்ளது. கோழி இறைச்சி கிலோ சராசரியாக ரூ.260ஆக உள்ளது. நாட்டுக்கோழி கிலோ ரூ.500க்கு விற்கப்படுகிறது. பண்ணை கோழி கிலோ ரூ.300க்கு விற்பனையானது. ஆனால், ஆட்டு இறைச்சியின் விலை குறையவில்லை. ஒரு கிலோ ரூ.900-க்கு விற்கப்படுகிறது.

    இதுகுறித்து இறைச்சி வியாபாரிகள் கூறும்போது, 'கார்த்திகை மாதம் என்பதால் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து சபரிமலை செல்கிறார்கள். இதனால் இறைச்சி தேவை குறைந்து உள்ளது. இதன் காரணமாக இறைச்சி வியாபாரமும் பாதித்து உள்ளது.

    மீன், கோழி இறைச்சியின் விலையை குறைத்து உள்ளோம். ஆனால் ஆட்டு இறைச்சி விலையில் மாற்றம் இல்லை. கார்த்திகை மாதம் முழுவதும் இது நீடிக்கும்' என்றார்.

    • இக்கோவிலின் நடை அனைத்து நாட்களிலும் திறக்கப்படுவது இல்லை.
    • ஒவ்வொரு திங்கட்கிழமைதோறும் நள்ளிரவு மட்டுமே நடை திறக்கப்படுகிறது.

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது பரக்கலக்கோட்டை கிராமம். இங்கு உள்ள பொதுஆவுடையார் கோவில், பிரசித்திபெற்ற சிவன் கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் சிவபெருமான், ஆலமரத்தில் (வெள்ளாலமரம்) வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த கோவில் இறைவனுக்கு மத்தியபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. மற்ற கோவில்களை போல இக்கோவிலின் நடை அனைத்து நாட்களிலும் திறக்கப்படுவது இல்லை. ஒவ்வொரு திங்கட்கிழமைதோறும் நள்ளிரவு மட்டுமே நடை திறக்கப்படுகிறது.

    ஆண்டுதோறும் தை மாதம் 1-ந் தேதி பொங்கல் பண்டிகை நாளில் மட்டுமே இக்கோவிலின் நடை பகலில் திறந்து இருப்பதை காண முடியும். மற்ற நாட்களில் பகலில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலின் கதவு முன்பாக வழிபாடு செய்கிறார்கள்.

    ஆடு, கோழி, தேங்காய், நெல் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் இந்த கோவிலுக்கு காணிக்கையாக வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆல மரத்தையே ஆலயமாக போற்றி வணங்கப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவார திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை சோமவார விழா நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் சோமவாரத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதுகுறித்து பொது ஆவுடையார் கோவில் செயல் அலுவலர் வடிவேல்துரை கூறுகையில், 'பொது ஆவுடையார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் சோமவார திருவிழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நேற்று முன்தினம் கார்த்திகை முதல் சோமவாரத்தையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் வருகிற 28-ந் தேதி, அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந் தேதி, 12-ந் தேதி ஆகிய 3 நாட்களும் சோமவார திருவிழா நடக்கிறது.

    சோமவாரத்தில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக அனைத்து பகுதிகளில் இருந்தும் பரக்கலக்கோட்டை கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு சோமவாரத்தின் போதும் காணிக்கையாக வருகிற நவதானியங்கள், ஆடு, கோழிகள் மற்றும் பலவகை பொருட்களும் அன்றைய தினமே மாலை 6 மணி அளவில் அதிகாரிகள் முன்னிலையில் ஏலம் விடப்படும்' என்றார்.

    • கார்த்திகை மாத சோம வாரத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பி வழிபாடு நடந்தது.
    • இம்மையிலும் நன்மை தருவார் கோவிலிலும் நடந்தது.

    மதுரை

    ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமைகளில் கார்த்திகை சோமவார வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான கார்த்திகை முதல் சோம வார தினமான இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சுந்தரேசு வரர் சன்னதி முன்பு 1,008 சங்குகளில் புனித நீர் நிரப்பி சிவலிங்க வடிவில் வைத்து சிறப்பு ஹோமம் நடந்தது.

    இதைத்தொடர்ந்து இன்று மாலை சுந்தரேசுவர ருக்கு 1,008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரை கொண்டு சிறப்பு அபி ஷேகம் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இதேபோல் மதுரை இம்மையிலும் நன்மை தருவார்- கோவிலில் ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம் தலைமையில் சோம வார வழிபாடுகள் நடைபெற்றது.

    இைதயொட்டி 1,008 வலம்புரி சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவில் வைத்து சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று மாலை சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரை சிவலிங்கத்திற்கு சிறப்பு அபி ஷேகம் நடைபெறுகிறது. அதன்பின் அலங்காரம், மகாதீபாராதனை நடக்கிறது.

    அபிஷேக பிரியரான சிவபெருமானை கார்த்திகை சோமவாரத்தில் விரதம் இருந்து வழிபடுவதும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. எனவே இன்று பல பக்தர்கள் விரதம் கடைபிடித்து சோம வார வழிபாட்டில் கலந்து கொள்வார்கள்.

    இேதபோல் கார்த்திகை மாதத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்த வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில், உத்தர கோசமங்கை சிவன் கோவில், திருவாதவூர் சிவன் கோவில், மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் சிவன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் சோம வார சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • இந்த ஆண்டு வரக்கூடிய 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
    • கார்த்திகை ஞாயிற்று கிழமைகளில் நரசிம்மரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் திருமாலின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இத்தலம் திகழ்கிறது. காசி, கங்கை, கயா போன்ற புண்ணிய தலங்களுக்குச் சமமாக இத்தலம் போற்றப்படுகிறது.

    வருடத்தில் 11 மாதம் யோகநிலையில் இருக்கும் யோக லட்சுமிநரசிம்மர் கார்த்திகை ஒரு மாதத்தில் மட்டும் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இதனால் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து பெரிய மலையில் எழுந்தருளியிருக்கும் யோகலட்சுமி நரசிம்மரை 1,305 படிக்கட்டுகளில் நடந்து சென்று தரிசனம் செய்கின்றனர்.

    கார்த்திகை பெருவிழாவின் முதல் வெள்ளிக்கிழமை இன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இந்த கோவிலில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறுகிறது.

    இந்த ஆண்டு வரக்கூடிய 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. கார்த்திகை ஞாயிற்று கிழமைகளில் நரசிம்மரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். எனவே இந்த நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். கார்த்திகை ஞாயிற்றுகிழமைகளில் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கே திறக்கப்பட்டு அபிஷேகமும், பூஜைகளும் நடக்கும். அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் 900 பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்ட பிறகு அனுமதிக்கப்பட்டனர்.2 ஆண்டுகளுக்கு பிறகு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் கோவிலில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    வேண்டும் வரம் அனைத்தையும் அள்ளித் தருவார். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும் பில்லி சூனியத்தில் இருந்து விடுபடுவதாகவும், குடும்பம் செழிக்கும், குழந்தை பேறு கிடைக்கும் என்று பக்தர்கள் யோக நரசிம்மர் தரிசிக்கின்றனர்.

    பக்தர்களின் அதிக அளவில் வருவார்கள் என்பதால் திருக்கோவில் நிர்வாகம் இரண்டு மலைகளிலும் குடிநீர் வசதி மின்வசதி கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி உள்ளனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க பக்தர்களிள் நடவடிக்கைகள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டுகிறது.

    பக்தர்களை சோதனை செய்த பிறகு அனுமதிக்கப்படுகின்றனர்.

    சோளிங்கர் நரசிம்ம சாமி பெரிய மலைக்கோவிலை 1305 படிகள் ஏறித்தான் செல்ல வேண்டும். இந்த மலைக்கு நேர் எதிரில் யோக ஆஞ்சநேயர் அருளும் சிறிய மலை உள்ளது. அனுமன் கோவிலை அடைய 406 படிகள் ஏறவேண்டும்.

    பெரிய மலை அடிவாரத்திலிருந்து ஆலய நுழைவாயில் ராஜகோபுரம் வரை இளைப்பாற்றிக் கொள்ள 7 மண்டபங்கள் உள்ளன.

    நரசிம்ம சாமி கோவில் அமைந்துள்ள பெரிய மலையில் ஏராளமான குரங்குகள் உள்ளன. படிக்கட்டுகளில் ஒவ்வொரு வளைவிலும் கூட்டம் கூட்டமாக குரங்குகள் காத்திருக்கும்.அவை பக்தர்களை சோதனை செய்யாமல் மேலே விடுவதே கிடையாது. ஒவ்வொரு கூட்டத்திற்கும் தலைவர் போன்ற பெரிய குரங்கு ஒன்று படுத்தபடி கண்காணித்து கொண்டிருக்கும். பக்தர்கள் அருகில் வந்ததும் அனைத்து குரங்குகளும் பயமுறுத்தி பக்தர்களை முழுமையாக சோதனை செய்யும் அளவிற்கு தொல்லைகள் உள்ளன. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குரங்கு தொல்லை இருந்தாலும் சோளிங்கர் கோவிலில் உள்ள குரங்குகள் தான் அடாவடியில் பிரசித்தி பெற்றவை. எனவே கோவில் மலை அடிவாரத்தில் பக்தர்கள் குச்சி, கம்பு போன்றவை வழங்கப்படுகிறது.அதன் உதவியுடன் தான் பக்தர்கள் மலையேறி வருகின்றனர்.

    சோளிங்கர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ரெயில் மூலம் அரக்கோணம் சென்று அங்கிருந்து பஸ் மூலம் எளிதில் சென்றடையலாம்.

    • கோவிலில் வழக்கமாக நடக்கும் பூஜைகள் நடைபெறும்.
    • ஏராளாமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    திருப்பத்தூர் அருகே உள்ளது பிள்ளையார்பட்டி. இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. குடவரை கோவிலாக உள்ள இக்கோவிலுக்கு தினந்தோறும் ஏராளாமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். ஆங்கில புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி விழா காலங்கள் மற்றும் தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ காலங்களில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்து செல்வார்கள். ஆண்டுதோறும் வரும் கார்த்திகை மாதம் மற்றும் தைப்பூச காலங்களில் ஏராளமான ஐயப்ப பக்தர்களும், முருக பக்தர்களும் தமிழகம் முழுவதும் இருந்து இங்கு வருவது வழக்கம். இதற்காக கார்த்திகை மாதம் தொடக்கம் முதல் தைப்பூசம் வரை பகல் நேரங்களில் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடை திறந்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும்.

    இந்நிலையில் இன்று கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்குவார்கள். இதேபோல் தை பூச திருவிழாவும் நெருங்கி வருவதையொட்டி பழனி கோவிலுக்கு செல்லும் முருக பக்தர்கள் விரதமிருந்து மாலை அணிவிக்க தொடங்குவார்கள்.

    பக்தர்களின் தரிசனத்திற்காக இன்று முதல் பிள்ளையார்பட்டி கோவில் பகல் முழுவதும் நடை திறக்கப்படுகிறது. இதுகுறித்து கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டனூர் என். கருப்பஞ்செட்டியார் மற்றும் ஆத்தங்குடி முத்துப்பட்டினம் சி.சுப்பிரமணியன்செட்டியார் ஆகியோர் கூறியதாவது:-

    பக்தர்கள் விரதம் தொடங்கும் காலங்களில் பிள்ளையார்பட்டி கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். அவர்களின் பயணம் தாமதமின்றி தொடரவும், கூட்ட நெரிசல் இல்லாமல் விரைந்து சாமி தரிசனம் செய்வதற்காகவும் இன்று முதல் கோவிலில் காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடை சாத்தப்படாமல் பகல் முழுவதும் கோவில் திறந்து இருக்கும். அதேபோல் கோவிலில் வழக்கமாக நடக்கும் பூஜைகள் நடைபெறும். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு வசதி மற்றும் கார் பார்க்கிங் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
    • சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருப்பார்கள்.

    மதுரை

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருப்பார்கள். கார்த்திகை மாதம் இன்று பிறந்ததை முன்னிட்டு ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    சாத்தூர் ஓடைப்பட்டி வேட்டுவநாதர் கோவிலில் அய்ப்ப பக்தர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்ட காட்சி.

    மதுரையில் உள்ள பல்வேறு கோவில்களில் இன்று காலை அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர். மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஆனந்த அய்யப்பன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து மாலை அணிந்து கொண்டனர். கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு அங்கு சிறப்பு பூசுகள் நடந்தன. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புதூர் மற்றும் விளாச்சேரியில் உள்ள அய்யப்பன் கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள். மேலும் திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை முருகன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். பழமுதிர்சோலை முருகன் கோவிலில் மாலை அணிந்த பக்தர்கள், முன்னதாக அழகர்கோவில் ராக்காயி அம்மன் கோவிலில் உள்ள நூபுர கங்கை தீர்த்தத்தில் புனித நீராடினர்.

    இதே போன்று மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், காந்தி மியூசியம் அருகே உள்ள பூங்கா முருகன் கோவில்,அண்ணாநகர் சர்வேஸ்வரர் கோவில், மேலமாசி வீதி நேரு ஆலால விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் இன்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள்.

    கார்த்திகை மாதம் முதல் நாளான இன்றே பலர் மாலை அணிய கோவில்களில் திரண்டதால் எங்கு பார்த்தாலும் அய்யப்ப பக்தர்களாக காட்சி அளித்தனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோவில்களிலும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் இன்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். விருதுநகரில் சொக்கநாதர் கோவில், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், ராமர் கோவில் ஆகிய கோவில்களில் ஏராளமானோர் மாலை அணிந்து கொண்டனர்.

    சிவகாசியில் உள்ள அய்யப்பன் கோவிலிலும் பலர் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு அய்யப்ப பக்தர்கள் மாலை அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது. சாத்தூரில் சிவன் கோவிலில் உள்ள அய்யப்பன் சன்னிதானம், வெள்ளகரைப் பிள்ளையார் கோவில், ஓடைப்பட்டி வெற்றி விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர். குருசாமி தளபதி முருகன் கன்னிச்சாமி களுக்கு மாலை அணிவித்து அய்யப்ப சாமிக்கு விரதம் மற்றும் வழிபாடு செய்யும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.


    மானாமதுரை தர்ம சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

     மானாமதுரை வைகை ஆற்று கரையில் பிரசித்தி பெற்ற தர்ம சாஸ்தா கோவில் உள்ளது. கார்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை கோவில் திறக்கப்பட்டு சிறப்பு யாகம் நடந்தது. அதைதொடர்ந்து அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.பின்னர் பக்தர்கள், தாங்கள் கொண்டு வந்த துளசிமணி மாலைகளை சுவாமி பாதத்தில் வைத்து பூஜை செய்து மாலையணிந்து சபரிமலை செல்ல 48 நாள் விரதத்தை தொடங்கினார்கள்.

    சபரிமலை மலையில் கொரோனா கட்டுபாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு மானாமதுரையில் இருந்து சபரிமலை செல்ல ஏராளமான பக்தர்கள் மாலையிட்டனர்.

    ×