search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sholinghur Narasimha Swamy Temple"

    • இந்த ஆண்டு வரக்கூடிய 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
    • கார்த்திகை ஞாயிற்று கிழமைகளில் நரசிம்மரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் திருமாலின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இத்தலம் திகழ்கிறது. காசி, கங்கை, கயா போன்ற புண்ணிய தலங்களுக்குச் சமமாக இத்தலம் போற்றப்படுகிறது.

    வருடத்தில் 11 மாதம் யோகநிலையில் இருக்கும் யோக லட்சுமிநரசிம்மர் கார்த்திகை ஒரு மாதத்தில் மட்டும் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இதனால் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து பெரிய மலையில் எழுந்தருளியிருக்கும் யோகலட்சுமி நரசிம்மரை 1,305 படிக்கட்டுகளில் நடந்து சென்று தரிசனம் செய்கின்றனர்.

    கார்த்திகை பெருவிழாவின் முதல் வெள்ளிக்கிழமை இன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இந்த கோவிலில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறுகிறது.

    இந்த ஆண்டு வரக்கூடிய 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. கார்த்திகை ஞாயிற்று கிழமைகளில் நரசிம்மரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். எனவே இந்த நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். கார்த்திகை ஞாயிற்றுகிழமைகளில் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கே திறக்கப்பட்டு அபிஷேகமும், பூஜைகளும் நடக்கும். அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் 900 பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்ட பிறகு அனுமதிக்கப்பட்டனர்.2 ஆண்டுகளுக்கு பிறகு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் கோவிலில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    வேண்டும் வரம் அனைத்தையும் அள்ளித் தருவார். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும் பில்லி சூனியத்தில் இருந்து விடுபடுவதாகவும், குடும்பம் செழிக்கும், குழந்தை பேறு கிடைக்கும் என்று பக்தர்கள் யோக நரசிம்மர் தரிசிக்கின்றனர்.

    பக்தர்களின் அதிக அளவில் வருவார்கள் என்பதால் திருக்கோவில் நிர்வாகம் இரண்டு மலைகளிலும் குடிநீர் வசதி மின்வசதி கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி உள்ளனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க பக்தர்களிள் நடவடிக்கைகள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டுகிறது.

    பக்தர்களை சோதனை செய்த பிறகு அனுமதிக்கப்படுகின்றனர்.

    சோளிங்கர் நரசிம்ம சாமி பெரிய மலைக்கோவிலை 1305 படிகள் ஏறித்தான் செல்ல வேண்டும். இந்த மலைக்கு நேர் எதிரில் யோக ஆஞ்சநேயர் அருளும் சிறிய மலை உள்ளது. அனுமன் கோவிலை அடைய 406 படிகள் ஏறவேண்டும்.

    பெரிய மலை அடிவாரத்திலிருந்து ஆலய நுழைவாயில் ராஜகோபுரம் வரை இளைப்பாற்றிக் கொள்ள 7 மண்டபங்கள் உள்ளன.

    நரசிம்ம சாமி கோவில் அமைந்துள்ள பெரிய மலையில் ஏராளமான குரங்குகள் உள்ளன. படிக்கட்டுகளில் ஒவ்வொரு வளைவிலும் கூட்டம் கூட்டமாக குரங்குகள் காத்திருக்கும்.அவை பக்தர்களை சோதனை செய்யாமல் மேலே விடுவதே கிடையாது. ஒவ்வொரு கூட்டத்திற்கும் தலைவர் போன்ற பெரிய குரங்கு ஒன்று படுத்தபடி கண்காணித்து கொண்டிருக்கும். பக்தர்கள் அருகில் வந்ததும் அனைத்து குரங்குகளும் பயமுறுத்தி பக்தர்களை முழுமையாக சோதனை செய்யும் அளவிற்கு தொல்லைகள் உள்ளன. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குரங்கு தொல்லை இருந்தாலும் சோளிங்கர் கோவிலில் உள்ள குரங்குகள் தான் அடாவடியில் பிரசித்தி பெற்றவை. எனவே கோவில் மலை அடிவாரத்தில் பக்தர்கள் குச்சி, கம்பு போன்றவை வழங்கப்படுகிறது.அதன் உதவியுடன் தான் பக்தர்கள் மலையேறி வருகின்றனர்.

    சோளிங்கர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ரெயில் மூலம் அரக்கோணம் சென்று அங்கிருந்து பஸ் மூலம் எளிதில் சென்றடையலாம்.

    ×