search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்த்திகை தீபம்"

    • கார்த்திகை மாதம் என்பதே ஒரு சிறப்பு மிக்க மாதம்.
    • திருவண்ணாமலையில் ஏற்றக்கூடிய தீபம் மிக சிறப்பு மிக்க தீபம்.

    கார்த்திகை தீபம் அது சாதாரண தீபமல்ல.

    ஏனென்றால் திருவண்ணாமலையில் ஏற்றக்கூடிய தீபம் மிக சிறப்பு மிக்க தீபம்.

    கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் ஏற்றக்கூடிய தீபம்.

    கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த

    திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோவில்களில் பிரகாசமான

    தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.

    கார்த்திகை மாதம் என்பதே ஒரு சிறப்பு மிக்க மாதம்.

    ஏனென்றால் இந்தக் கார்த்திகை மாதத்தில்தான் நம்முடைய உடம்பில் உள்ள நாடி நரம்புகளெல்லாம்

    சம ஓட்டத்தில் இருக்கும் என்று சொல்வார்கள்.

    அப்படி நாடி நரம்புகள் சம ஓட்டத்தில் இருக்கும் போது தியானம் செய்யாதவர்களுக்கும் ஞானம் சித்தியாகும்.

    அப்பொழுது இறைவன் ஒளிப்பிழம்பாக வெளிப்படுகிறான்.

    இந்தக் கார்த்திகை மாதத்தில்தான் அண்ணாமலையார் எல்லாம் வல்ல ஆவுடையார் சிவனே ஒளிப்பிழம்பாக வெளிப்படுவதாக ஐதீகம்.

    • பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்ற பட்டு வருகிறது.
    • இதன்படி 41-ம் ஆண்டு மகா கார்த்திகை தீபம் வரும் 26-ந்தேதி ஏற்றப்பட உள்ளது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்ற பட்டு வருகிறது. இதன்படி 41-ம் ஆண்டு மகா கார்த்திகை தீபம் வரும் 26-ந்தேதி ஏற்றப்பட உள்ளது.

    இதையொட்டி எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் அமைந்துள்ள அன்னை காகன்னை ஈஸ்வர் ஆலயத்தில் 2,100 மீட்டர் திரி தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே தீபம் ஏற்றும் 5 அடி உயரத்திலான செம்பு கொப்பரைக்கு பூஜை செய்யப்பட்டது. மாதாஜி ரோகிணி ராஜகுமார், தவயோகி தவசிநாதன் பூஜையை நடத்தினர்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கார்த்திகை தீபம் அன்று 2,100 மீட்டர் திரி ,ஆயிரத்து 8 லிட்டர் எண்ணெய்,108 கிலோ கற்பூரம் கொண்டு தீபம் ஏற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒவ்வொரு பண்டிகைக்கும் விசேஷமான உணவு படைக்கப்படுவது வழக்கம்.
    • கார்த்திகை தீபத்தன்று, அவல் பொரி உருண்டை படைத்து வழிபடுவது வழக்கம்.

    நம் மரபில் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு விசேஷமான உணவு நைவேத்தியமாகச் செய்து படைக்கப்படுவது வழக்கம். விநாயகர் சதுர்த்திக்குக் கொழுக்கட்டை, மகர சங்கராந்திக்குச் சர்க்கரைப் பொங்கல், நவராத்திரிக்குச் சுண்டல் என்பதுபோல திருக்கார்த்திகைக்குப் பொரி உருண்டை. கார்த்திகை தீபத்தன்று, அவல் பொரி உருண்டை, அப்பம் செய்து கடவுளுக்கு படைத்து வழிபடுவது வழக்கம். வாங்க பொரி உருண்டை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    நெல் பொரி- 500 கிராம்

    வெல்லம்- 250 கிராம்

    நெய்- தேவையான அளவு

    தேங்காய்- 3 ஸ்பூன்

    ஏலக்காய்தூள்- ஒரு ஸ்பூன்

    செய்முறை:

    ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வெல்லம் சேர்த்து அது மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றி பாகு எடுக்க வேண்டும். இதற்கு பாகுபதம் என்பது மிகவும் முக்கியம். பாகு இறுகி வரும் வரை அதாவது அதிரசம் செய்வதற்கு பாகு காய்ச்சுவதுபோல் பாகுபதம் பார்த்து பாகு எடுக்க வேண்டும்.

    வெல்லப்பாகு தயாரானதும் அதனை தண்ணீரில் போட்டு பார்த்தால் அது தண்ணீரில் கரையாமல் உருண்டு வர வேண்டும். அதுவே பதம். அப்போது ஏலக்காய் தூள் போட வேண்டும். பின்னர் தேங்காயை பல் பல்லாக வெட்டி அதனை நெய்யில் வறுத்து இதனுடன் சேர்க்க வேண்டும். அதன்பிறகு பொரியை வெல்லப்பாகில் கொட்டி அடுப்பில் இருந்து இறக்கி கிளர வேண்டும். நன்றாக வெல்லப்பாகில் கிளரி எடுக்க வேண்டும். அப்போது ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து இளஞ்சூடாக இருக்கும்போதே பொரி உருண்டைகளாக உருட்டி எடுக்க வேண்டும்.

    • தீபத்தை சிறப்பிக்கும் மாதம்தான் திருக்கார்த்திகை.
    • கார்த்திகை மாதத்தில், நமது வீடுகளில் 27 இடங்களில் தீபங்கள் ஏற்றிவைக்க வேண்டுமாம்.

    தீபத்தை சிறப்பிக்கும் மாதம்தான் திருக்கார்த்திகை.

    இந்த மாதத்தில் திரு விளக்கேற்றி வழிபடுவது அவ்வளவு விசேஷம்.

    கார்த்திகை மாதத்தில், நமது வீடுகளில் 27 இடங்களில் தீபங்கள் ஏற்றிவைக்க வேண்டுமாம்.

    அவை எந்தெந்த இடங்கள், அந்த இடங்களில் தீபம் ஏற்றுவதால் என்னென்ன பலன்கள் என்பது குறித்து விரிவாக அறிவோம்.

    கோலமிடப்பட்ட வாசலில்: ஐந்து விளக்குகள்

    திண்ணைகளில்: நான்கு விளக்குகள்

    மாடக்குழிகளில்: இரண்டு விளக்குகள்

    நிலைப்படியில்: இரண்டு விளக்குகள்

    நடைகளில்: இரண்டு விளக்குகள்

    முற்றத்தில்: நான்கு விளக்குகள்

    இந்த இடங்களில் எல்லாம் தீபங்கள் ஏற்றிவைப்பதால் நமது இல்லம் லட்சுமி கடாட்சத்தை வரவேற்கத் தயாராகி விடும்.

    தீய சக்திகள் விலகியோடும்.

    பூஜைஅறையில்: இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றிவைக்கவேண்டும். இதனால் சர்வமங்கலங்களும் உண்டாகும்.

    சமையல் அறையில்: ஒரு விளக்கு அன்ன தோஷம் ஏற்படாது.

    தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில்: யம தீபம் ஏற்றவேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.

    பின்கட்டு பகுதியில்: நான்கு விளக்குகளை ஏற்றிவைக்க விஷ ஜந்துக்கள் அணுகாது.

    ஆனால், அபார்ட்மென்ட் மற்றும் மாடி வீடுகள் அதிகம் உள்ள தற்காலத்தில் மேற்சொன்ன முறைப்படி விளக்கு ஏற்ற முடியாது.

    ஆகையால் வசதிக்கு ஏற்ப வீட்டுக்குள்ளேயும் வெளியிலுமாக 27 விளக்குகளை ஏற்றிவைத்து பலன் பெறலாம்.

    தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால் தீபம் ஏற்றியதும் தீபலட்சுமியே நமோ நம என்று கூறி வணங்குவது அவசியம்.

    • தாமரை நூல் திரியில் தீபம் ஏற்றி எரிய விடுவது நமது வீட்டில் உள்ள வாஸ்து குற்றங்களை சரி செய்யும்.
    • குழந்தைகள் செய்யும் சேஷ்டைகள் குறையும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.

    முதலில் கிழக்கு நோக்கி ஒரு திரியும், 2வது வடக்கு நோக்கி ஒரு திரியும், 3வது மேற்கு நோக்கி இரு திரியும் ஏற்ற வேண்டும்.

    தெற்கு நோக்கி தீபம் ஏற்றக்கூடாது.

    குளிர்விக்கும்போது, முதலில் மேற்கே உள்ள திரிகளையும், 2வது வடக்கே உள்ள திரியையும்,

    3வது கிழக்கே உள்ள திரியையும் குளிர்விக்க வேண்டும்.

    ஊதி அணைக்க கூடாது.

    மேற்கூறிய முறைப்படி, 8 நாட்களுக்கு தினமும் 1 மணி நேரம் வீதம் நெய்யில்  தாமரை நூல் திரியில் தீபம் ஏற்றி 

    எரிய விடுவது நமது வீட்டில் உள்ள வாஸ்து குற்றங்களை சரி செய்யும்.

    குழந்தைகள் செய்யும் சேஷ்டைகள் குறையும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.

    குத்துவிளக்கும் குடும்பப்பெண்ணும்

    குத்துவிளக்கின் 5 முகங்களிலும் தீப ஒளி பிரகாசிப்பதுபோல, குலவிளக்காகத் திகழும் குடும்பப் பெண்ணும்

    அன்பு, மனஉறுதி, நிதானம், சமயோசிதபுத்தி, சகிப்புத்தன்மை என்னும் 5 குணங்களுடன்

    சிறப்பாகப் பிரகாசிக்க வேண்டும் என்பதற்காகவே, திருமணம் ஆகி மறுவீடு வந்ததும் மணப்பெண்ணை

    முதலில் குத்துவிளக்கு ஏற்றச் சொல்வது நடைமுறையில் வழக்கமாக உள்ளது.

    • 108 முறைக்கு குறையாமல் தினமும் பின்வரும் மந்திரம் ஜபித்து வரவேண்டும்.
    • சரியாக 90 தினங்களுக்குள் தீபம் உங்களுடன் பேசுவதை நீங்கள் சூட்சுமமாக உணர முடியும்.

    ஏதாவது ஒரு அமாவாசை அன்று 50 கிராம் பசுநெய்யும், 50 கிராம் நல்லெண்ணையும்,

    தாமரை நூல் திரியும் வாங்கிக் கொள்ள வேண்டும்.

    இதை நம் வீட்டில் இருக்கும் திருவிளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

    விளக்கில் இருந்து நான்கு அடி தூரம் தள்ளி சுத்தமான மஞ்சள் விரிப்பு விரித்து அதில் நிமிர்ந்து உட்கார வேண்டும்.

    நமது புருவமத்திக்கு நேராக தீபம் எரிய வேண்டும்.

    108 முறைக்கு குறையாமல் தினமும் பின்வரும் மந்திரம் ஜபித்து வரவேண்டும்.

    "ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி தீபிகா ஜோதி சொரூபணி

    ஆகர்ஷய ஆகர்ஷய வாவா ஸ்வாஹா"

    சரியாக 90 தினங்களுக்குள் தீபம் உங்களுடன் பேசுவதை நீங்கள் சூட்சுமமாக உணர முடியும்.

    உங்கள் எதிர்காலத்தையும், உங்கள் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வையும்,

    எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தடங்கல்களை தாண்டும் வழிமுறைகளையும், நீங்கள் கண்கூடாக உணர முடியும்.

    இந்த பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்ததும் கண்டிப்பாக அசைவம், மது, புகை தவிர்க்க வேண்டும்.

    • கார்த்திகை மாத முப்பது நாட்களிலும் தீபகானம் செய்ய வேண்டும்.
    • பொதுவாக தீபம் சந்ததியை வளர்க்கும் என்பது சமய குரவர்களின் கூற்றாகும்.

    கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்திற்கு முதல் நாள் பரணி தீபம், மறுநாள் கார்த்திகை தீபம்,

    கார்த்திகை மாத முப்பது நாட்களிலும் தீபகானம் செய்ய வேண்டும்.

    வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் பவுர்ணமி முதல் மூன்று நாட்களாவது

    தங்களுடைய வீட்டில் வரிசையாக தீபம் ஏற்ற வேண்டும்.

    தீபம் எங்கெல்லாம் பிரகாசமாக ஜொலிக்கின்றதோ அங்கே லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

    பொதுவாக தீபம் சந்ததியை வளர்க்கும் என்பது சமய குரவர்களின் கூற்றாகும்.

    வசதிக்கேற்றபடி நெய், நல்லெண்ணெய், இலுப்பெண்ணெய், தீபங்கள் ஏற்றலாம்.

    • கணவன்-மனைவி உறவு நலம் பெறவும் வேப்பெண்ணை தீபம் உகந்தது.
    • எள் எண்ணெய் (நல்லெண்ணை) தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது.

    நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித சந்தோஷமும் இல்லத்தில் நிறைந்திருக்கும்.

    நல்லெண்ணை எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட,

    குடும்பத்தை ஆட்டிப்படைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும்.

    விளக்கெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும்.

    வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.

    நெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி

    அம்மனை வணங்கினால் தேவியின் அருள் கிட்டும்.

    கிழக்கு திசையில் தீபம் ஏற்றி வணங்கிட துன்பம் அகலும், கிரகங்களின் சோதனை விலகும்.

    மேற்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, சனிப்பீடை, கிரக தோஷம்,

    பங்காளி பகை ஆகியவை நீங்கும்.

    வடக்கு திசையில் தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.

    திருமணத்தடை, கல்வித் தடை ஆகியவை நீங்கி சர்வமங்களம் உண்டாகும்.

    தெற்கு திசையில் தீபம் ஏற்றக்கூடாது. அது அபசகுணம் என அஞ்சப்படுகிறது.

    கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.

    கணவன்-மனைவி உறவு நலம் பெறவும் வேப்பெண்ணை தீபம் உகந்தது.

    அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது ஆமணக்கு எண்ணெய் தீபம்.

    எள் எண்ணெய் (நல்லெண்ணை) தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது.

    நவக்கிரகங்களை திருப்தி செய்யவும் ஏற்றது.

    மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய்

    மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.

    மந்திரசித்தி பெற வேண்டுவோர் விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய்,

    நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கேற்ற வேண்டும்.

    கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது.

    மனக்கவலையையும், தொல்லைகளையும் பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணெய்யின் தீபங்கள்.

    • ஐப்பசி பவுர்ணமி-அமாவாசை: பசிப்பிணி அகலும்.
    • ஆவணி பவுர்ணமி-அமாவாசை: புத்திரப்பேறு உண்டாகும்.

    ஒவ்வொரு மாதத்திலும் சூரிய சந்திரர்கள் ஒன்று சேருகின்ற அமாவாசையன்றும்,

    நேர் எதிரே சந்திக்கின்ற பவுர்ணமி அன்றும் திருவிளக்கு ஏற்றி அதை மகாலட்சுமியாக எண்ணி

    பூஜை செய்ய வேண்டும்.

    அதனால் ஏற்படும் பலன்களாவன:-

    சித்திரை பவுர்ணமி -அமாவாசை: தான்யம் உண்டாகும்

    வைகாசி பவுர்ணமி-அமாவாசை: செல்வம் உண்டாகும்

    ஆனி பவுர்ணமி-அமாவாசை: திருமணம் நடைபெறும்

    ஆடி பவுர்ணமி-அமாவாசை: ஆயுள் விருத்தி உண்டாகும்

    ஆவணி பவுர்ணமி-அமாவாசை: புத்திரப்பேறு உண்டாகும்

    புரட்டாசி பவுர்ணமி-அமாவாசை: பசுக்கள் விருத்தி உண்டாகும்

    ஐப்பசி பவுர்ணமி-அமாவாசை: பசிப்பிணி அகலும்

    கார்த்திகை பவுர்ணமி-அமாவாசை: நற்கதி உண்டாகும்

    மார்கழி பவுர்ணமி-அமாவாசை: ஆரோக்கிய வாழ்வு உண்டாகும்

    தை பவுர்ணமி-அமாவாசை: வாழ்க்கையில் வெற்றி உண்டாகும்

    மாசி பவுர்ணமி-அமாவாசை: துன்பம் அகலும்

    பங்குனி பவுர்ணமி-அமாவாசை: தர்ம சிந்தனையை உண்டு பண்ணும்

    • ஏகமுக தீபத்தை, “பகவதி தீபம்” என்றும், “ஸ்ரீதுர்கா தீபம்” என்றும் ஆதிகாலம் முதல் கூறி வருகிறார்கள்.
    • ஸ்ரீ துர்க்கா சகஸ்ரநாம ஒருமுக தீப பூஜை மிகவும் மகத்தானது. சிறந்த பலனைத் தரவல்லது.

    வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் தீப விளக்கிற்குப் பாவாடை அணிவித்து மலர்மாலை சாற்றி பூஜிக்க,

    சகல நன்மைகள் பெறலாம்.

    வீட்டில் விளக்கேற்றி வரும் இடத்தை விட்டு மாற்றக் கூடாது.

    காலை, மாலை விளக்கேற்றும் போது கல்கண்டை நிவேதனமாகப் படைத்து குழந்தைகளுக்கு கொடுக்க

    சகல நன்மைகளும் உண்டாகும்.

    ஏகமுக தீபம்!

    ஏகமுக தீபத்தை, "பகவதி தீபம்" என்றும், "ஸ்ரீதுர்கா தீபம்" என்றும் ஆதிகாலம் முதல் கூறி வருகிறார்கள்.

    சர்வசக்திகளும் தன்னுள் இருக்க, தான் ஒருத்தியே ஏகமாக பிரகாசிப்பதை ஏகமுக தீபம் குறிக்கிறது.

    எனவே தான் லலிதா சகஸ்ரநாம பூஜைக்கு ஐந்துமுக தீபமும், துர்கா பூஜைக்கு ஏகமுக தீபமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    ஏகமுக தீபத்தில் "ஸ்ரீதுர்க்கா" தேவியை ஆவாகணம் செய்து சகஸ்ரநாமத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம்.

    ஸ்ரீ துர்க்கா சகஸ்ரநாம ஒருமுக தீப பூஜை மிகவும் மகத்தானது. சிறந்த பலனைத் தரவல்லது.

    • “நிம்பதீபம்” என்பது இலுப்பை எண்ணெய் விளக்கு ஆகும்.
    • மாரியம்மன் திருவருள் பெற இந்த விளக்கை முறைப்படி ஏற்ற வேண்டும்.

    சுமங்கலிப் பெண்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை தினசரி குளித்த பின்பு,

    திருவிளக்கு ஏற்றி அதன் முன் அமர்ந்து பயபக்தியுடன் ஒன்பது முறை வணங்கி வழிபட,

    வீட்டில் அஷ்டலட்சுமி வாசம் செய்வதோடு, மாங்கல்யம் பலம் பெற்று

    கணவன் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் வசதியாக வாழ்வீர்கள்.

    நிம்ப தீபம்!

    "நிம்பதீபம்" என்பது இலுப்பை எண்ணெய் விளக்கு ஆகும்.

    இதைப் பேய்கள் அகலுவதற்காக ஏற்றுவதுண்டு.

    மாரியம்மன் திருவருள் பெற இந்த விளக்கை முறைப்படி ஏற்ற வேண்டும்.

    சங்கல்பப்படி, மடி, ஆசாரத்துடன் மாரியம்மன் சன்னதியில் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.

    இதைப் புதுஅகண்டம், அகல் இவைகளில் ஏற்ற வேண்டும். வீடுகளிலும் இத்தீபத்தை ஏற்றலாம்.

    பஞ்ச தீப எண்ணெய்

    தேங்காய் எண்ணெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய் மற்றும் பசு நெய் கலந்த எண்ணெய்யே பஞ்ச தீப எண்ணெய் எனப்படும்.

    • துர்க்கைக்கு 9 தீபங்கள் ஏற்ற வேண்டும்.
    • ஈஸ்வரனுக்கு 11 தீபங்கள் ஏற்ற வேண்டும்.


    1. ராகு தோஷம்-21 தீபங்கள்

    2. சனி தோஷம்- 9 தீபங்கள்

    3. குரு தோஷம் -33 தீபங்கள்

    4. துர்க்கைக்கு-9 தீபங்கள்

    5. ஈஸ்வரனுக்கு-11 தீபங்கள்

    6. திருமண தோஷம்-21 தீபங்கள்

    7. புத்திர தோஷம்- 51 தீபங்கள்

    8. சர்பப் தோஷம்-48 தீபங்கள்

    9. கால சர்ப்ப தோஷம்-21 தீபங்கள்

    10. களத்திர தோஷம்-108 தீபங்கள்

    ×