search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொரி உருண்டை"

    • ஒவ்வொரு பண்டிகைக்கும் விசேஷமான உணவு படைக்கப்படுவது வழக்கம்.
    • கார்த்திகை தீபத்தன்று, அவல் பொரி உருண்டை படைத்து வழிபடுவது வழக்கம்.

    நம் மரபில் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு விசேஷமான உணவு நைவேத்தியமாகச் செய்து படைக்கப்படுவது வழக்கம். விநாயகர் சதுர்த்திக்குக் கொழுக்கட்டை, மகர சங்கராந்திக்குச் சர்க்கரைப் பொங்கல், நவராத்திரிக்குச் சுண்டல் என்பதுபோல திருக்கார்த்திகைக்குப் பொரி உருண்டை. கார்த்திகை தீபத்தன்று, அவல் பொரி உருண்டை, அப்பம் செய்து கடவுளுக்கு படைத்து வழிபடுவது வழக்கம். வாங்க பொரி உருண்டை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    நெல் பொரி- 500 கிராம்

    வெல்லம்- 250 கிராம்

    நெய்- தேவையான அளவு

    தேங்காய்- 3 ஸ்பூன்

    ஏலக்காய்தூள்- ஒரு ஸ்பூன்

    செய்முறை:

    ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வெல்லம் சேர்த்து அது மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றி பாகு எடுக்க வேண்டும். இதற்கு பாகுபதம் என்பது மிகவும் முக்கியம். பாகு இறுகி வரும் வரை அதாவது அதிரசம் செய்வதற்கு பாகு காய்ச்சுவதுபோல் பாகுபதம் பார்த்து பாகு எடுக்க வேண்டும்.

    வெல்லப்பாகு தயாரானதும் அதனை தண்ணீரில் போட்டு பார்த்தால் அது தண்ணீரில் கரையாமல் உருண்டு வர வேண்டும். அதுவே பதம். அப்போது ஏலக்காய் தூள் போட வேண்டும். பின்னர் தேங்காயை பல் பல்லாக வெட்டி அதனை நெய்யில் வறுத்து இதனுடன் சேர்க்க வேண்டும். அதன்பிறகு பொரியை வெல்லப்பாகில் கொட்டி அடுப்பில் இருந்து இறக்கி கிளர வேண்டும். நன்றாக வெல்லப்பாகில் கிளரி எடுக்க வேண்டும். அப்போது ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து இளஞ்சூடாக இருக்கும்போதே பொரி உருண்டைகளாக உருட்டி எடுக்க வேண்டும்.

    ×