search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காத்திருப்பு போராட்டம்"

    • பணியாளர்கள் கோரிக்கை தினம் நடத்த வேண்டும் .
    • பதவி உயர்வு வழங்கவேண்டும்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மண்டலத்தில் , பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறியும் வகையில் பொது சுகாதார துறையில் மேற்கொள்வது போல், மண்டல பேரூராட்சி உதவி இயக்குனரின் மேற்பார்வையில் பணியாளர்கள் கோரிக்கை தினம் நடத்த வேண்டும் .

    நாகர்கோவில் மண்டலத்தில் உள்ள பேரூராட்சிகளில் 1996 - க்கு முன்னர் பணியமர்த்தப்பட்ட அடிப்படை பணியாளர்களுக்கு , பதவி உயர்வு வழங்கவேண்டும் . அரசு பணியாளர் சங்கம் சார்பாக கொடுக்கப்படும் கோரிக்கை மனுக்களை பெறுவதில் , மாவட்ட பேரூராட்சி நிர்வாகத்திற்கு கடினமான சூழ்நிலையை கண்டித்தும் தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பேரூராட்சி அலுவலகத்தில் 48 மணி நேர காத்திருப்பு போராட்டம் இன்று தொடங்கியது . போராட்டத்திற்கு மாநில தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார்.

    மாநில பொதுச்செயலாளர் முத்து , மாநில பொருளாளர் சேகர் , மாநில அமைப்புச் செயலாளர் சதீஷ், துணைப்பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி , மாவட்ட செயலாளர் தனசேகர் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சுபாஷ்சந்திரபோஸ் , இசக்கிமுத்து , ஓய்வு பெற்ற அலுவலர் சங்க நிர்வாகி நரேந்திரகுமார் , உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஊழியர்கள் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
    • ஆஷா ஊழியர்களுக்கு, அறிவி க்கப்பட்ட ஊக்கத்தொ கை ரூ.3000 உடனே வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் அலுவலக வாயிலில் நலவழித்துறை யில் பணிபுரியும் ஆஷா ஊழியர்கள் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இந்த போரா ட்டத்திற்கு ஆஷா பணி யாளர் சங்க தலைவர் ரோசி தலைமை தாங்கி னார். காரைக்கால் பிரதேச அரசு ஊழியர் சம்மேளன பொருளாளர் மயில்வா கனன், துணை தலைவர் சுப்பராஜ், இணை பொதுச் செயலாளர் கலைச்செல்வன், செய லாளர் ராஜேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    போராட்டத்தில், காரைக்கால் நலவழித்து றையில் பணிபுரியும் ஆஷா ஊழியர்களுக்கு, அறிவி க்கப்பட்ட ஊக்கத்தொ கை ரூ.3000 உடனே வழங்க வேண்டும். முறையான விடுமுறை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.போராட்டத்தில் ஈடு பட்ட ஊழியர்களை, துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் சந்தித்து, ஊழியர்களின் கோரிக்கைகள் அரசுக்கு அனுப்பி சாதகமான பதிலை பெற்றுத்தருவதாக கூறினார். மேலும் இந்த போராட்டத்தில் ஏராள மான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • பொங்கலூர் ஊராட்சி தேவனாம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3,000-க்கு மேற்பட்டோர் வாசித்து வருகின்றனர்.
    • நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஊராட்சி தேவனாம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஐயப்பா நகர், அம்மன் நகர், என்.என்.புதூர், புதுப்பாளையம், காட்டுப்பாளையம் மற்றும் சின்னக்காட்டு பாளையம் பகுதிகளில் சுமார் 3,000-க்கு மேற்பட்டோர் வாசித்து வருகின்றனர். இங்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு, கறிக்கோழி பண்ணைகள், விசைத்தறிக்கூடங்கள் உள்ளன. இப்பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் பல்லடம், திருப்பூர், கோவை ஆகிய வெளியூர்களுக்கு சென்று பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டதால் மக்கள் தங்கள் கையில் வைத்துள்ள செல்போன்களை காட்சி பொருளாகவும் விளையாட்டு பொருளாகவும் மட்டுமே வைத்திருக்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக அவசர உதவி எண்கள் காவல்துறை எண் 100, 108 ஆம்புலன்ஸ் சேவை தீயணைப்புத்துறை சேவை 101 ஆகியவற்றை பெற முடியாமலும் ஸ்மார்ட் கார்டு எனப்படும் குடும்ப அட்டையை கொண்டு கணினி மயமாக்கப்பட்ட நியாய விலை கடைகளில் குடும்பங்களுக்கு தேவையான மாதாந்திர அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை பெற முடியாமலும் அங்குள்ள தபால் நிலையத்தில் இணையதள சேவை முடங்கி இருப்பதால் விரைவு தபால் மற்றும் மத்திய மாநில அரசுகள் வழங்கும் 100 நாள் வேலை திட்டம் பணப்பரிவர்த்தனை ஆகியவற்றை மேற்கொள்ள முடியாமலும் மூன்றாண்டுகளுக்கும் மேலாக கிராமவாசிகள் தவித்து வருகின்றனர். மேலும் கடந்த இருமுறை கொரோனா தொற்று காலகட்டங்களில் இணைய வழி கல்வி சேவையை கல்வித்துறை அமல்படுத்திய போது இப்பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவியர் தங்களிடம் செல்போன்கள் இருந்தும் நெட்வொர்க் கிடைக்காத காரணத்தால் இணையவழிக் கல்வி சேவையில் பங்கு பெற முடியவில்லை. இதன் காரணமாக வெளியூர்களில் உள்ள உறவினர் வீடுகள் மற்றும் வாடகைக்கு வீடு பிடித்து தங்கி கல்வி பயின்று வந்துள்ளனர். இதே நிலை தற்போது வரை தொடர்வதாகவும் அப்பகுதியினர் வேதனை யுடன் கூறுகின்றனர். இந்நிலையில் வம்சம் திரைப்படத்தில் செல்போன் டவர் கிடைக்காததால் மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டு 'ஹலோ' என பேசுவது போல இன்றளவும் மாணவர்கள் பலரும் அப்பகுதியில் உள்ள உயரமான மரங்களின் மீது ஏறி அமர்ந்து கொண்டு பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியைகளுடன் பேசும் அவல நிலையும் தொடர்கதையாக நீடிக்கிறது. இதனிடையே அப்பகுதியைச் சேர்ந்த சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் சிலர் பாரத பிரதமர்,முதல்வர் முதல் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வரை பலமுறை புகார்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என கூறப்படும் நிலையில் அப்பகுதி மக்களின் அவதியும் தொடர்கிறது. மேலும் பிரதான தொழிலான விவசாயத்தில் பலரும் ஈடுபட்டுள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகளின் வேளாண் கடன், பயிர் கடன் உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டு இருப்பதால் பெற முடியாமல் விவசாயிகளின் அவதியும் தொடர்வதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.

    மேலும் இணைய சேவை கிடைக்காமல் ஐ.டி., கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் பிராட் பேன்ட் மற்றும் 20 உயரத்தில் கம்பி அமைத்து அதில் டாங்கிள் பொருத்தி இணையதள பணிகளை செய்வதாகவும் கூறுகின்றனர். எனவே உடனடியாக மத்திய மாநில அரசுகள் தேவனம்பா ளையம் கிராமத்தில் தொலைத்தொடர்பு சேவையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும், தொடர்ந்து காலதாமதப்படுத்தினால் தங்களுக்கு மத்திய,மாநில அரசுகள் வழங்கிய குடும்ப அட்டை வாக்காளர் அட்டை ஆதார் அட்டை களை திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் திரும்ப ஒப்படைத்து விட்டு அங்கேயே குடியேறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    காட்பாடி காந்தி நகரில் உள்ள மின்வாரிய அலுவலக வளாகத்தில் இன்று காலை மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மண்டல செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.தருமன், செந்தில், கிருபாகரன், சுந்தரம், தனசேகரன், சுந்தரராஜன், சாம்ராஜ், நாராயணன், அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பி.பி.2 முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். துணை மின் நிலையங்கள் மற்றும் சில பணிகளை வெளி நபர்களுக்கு விடுவதை திரும்ப பெற வேண்டும். அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    மின் ஊழியர்கள் போராட்டத்தால் மின்வாரிய அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிலாளர்கள் சார்பாக போராட்டம் நடைபெற்றது.
    • போராட்டம் காரணமாக மின்வாரிய அலுவலக பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    மீனாட்சிநாயக்கன்பட்டி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    1.2.2019 முதல் வழங்கவேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத்தொகை உடனே வழங்கவேண்டும். பஞ்சப்படி உள்ளிட்ட 23 சலுகைகளை பறிக்கும் வாரிய ஆணையை ரத்து செய்யவேண்டும். மின்வாரியத்தில் காலியாக உள்ள 56 ஆயிரம் பணியிடங்களை நிரப்பவேண்டும்.

    அரசு உத்திரவாதத்துடன் கூடிய முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

    எச்.எம்.எஸ். மாநில துணை செயலாளர் சையது தலைமை வகித்தார். அய்யாமணி, சுந்தர்ராஜன், திருமலைச்சாமி, முத்தையா, மணிகண்டன், பால்ராஜ், நல்லகண்ணு, ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டம் காரணமாக மின்வாரிய அலுவலக பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    • 18 நாட்கள் ஆகியும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.
    • ஊதியத்தை குறித்த காலத்தில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.

    கோவை, ஆக

    கோவை மாநகரட்சி மத்திய மண்டலம் 25,81, மற்றும் வடக்கு மண்டலம் 3-வது வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களுக்கு மாதந்தோறும் முறையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை என்று நீண்ட காலமாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.இந்தநிலையில் இந்த மாதம் தொடங்கி 18 நாட்கள் ஆகியும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் இன்று பணிக்குச் செல்லாமல் அந்தந்த மண்டல அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறும்போது,

    ஒவ்வொரு மாதமும் எங்களுக்கான ஊதியம் இழுத்தடிப்பு செய்யப்படுகிறது. இதனால் பணத் தேவை அதிகரித்து சிரமம் அடைகிறோம். எங்களுக்கு முறையான ஊதியத்தை குறித்த காலத்தில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.

    • குருமன்ஸ் பழங்குடி மக்கள் சங்கம் மாநாட்டில் அறிவிப்பு
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

    திருப்பத்தூர்:

    குருமன்ஸ் பழங்குடி மக்கள் சங்கம் மாநில மாநாடு திருப்பத்தூர் சைவ வேளாளர் திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைவர் எல்.சிவலிங்கம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ் காளியப்பன் கொடியேற்றி வரவேற்றார், ஜி. கரிபீரன், வி. தட்சிணாமூர்த்தி, டி..கோடியப்பன் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் பொதுச் செயலாளர் ரா. சரவணன், தொடக்க உரை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. பி. டில்லி பாபு கலந்து கொண்டு பேசினார்.

    நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் வீரபத்திரன் பொருளாளர் கோ. அரங்கநாதன் உட்பட பல பேசினார்கள்.

    நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் எஸ் விஜயன் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    குருமன்ஸ் பழங்குடி இன மக்களுக்கு இனச் சான்றிதழ் உடனடியாக வழங்க வேண்டும், வனஉரிமை பாதுகாப்பு சட்டம் 2006 உறுதியுடன் அமல்படுத்த வேண்டும், ஜவ்வாதுமலையில் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்களை உருவாக்கி கொடுக்க வேண்டும், காலம் காலமாக வசித்து வரும் மக்களை அப்புறப்படுத்தாமல் அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பின்னர் முன்னாள் எம்எல்ஏ டில்லி பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில்:-

    சென்னை ஐகோர்ட்டு வழக்கு தீர்ப்புப்படி பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அறிச்சையின்படி குருமன்ஸ் இன மக்களின் கலாச்சாரம் அடிப்படையை கொண்டு குருமன்ஸ் இனபழங்குடியின மக்களுக்கு இனச் சான்றிதழ் வழங்க வேண்டும் இல்லையென்றால் தாலுகா அலுவலகம் முன்பு சாதி சான்றிதழ் வழங்கும் வரை அங்கேயே சமைத்து காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்றார்.

    • மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதற்கு மாநில பொருளாளர் பொன்னையன் தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    தமிழக கிராம ஊராட்சி தூய்மைக் காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்கள் நலச்சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு மாநில பொருளாளர் பொன்னையன் தலைமை தாங்கினார்.

    தர்மபுரி மாவட்ட செய்தி தொடர்பாளர் மணி வரவேறற்றார். மாநிலத் தலைவர் கிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் பாண்டியன், மகளிர் அணி மாநிலத் தலைவர் மகேஸ்வரி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராமலிங்கம், மாநில செய்தி தொடர்பாளர் கிருஷ்ணசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

    இந்த போராட்டத்தில் டேங்க் ஆபரேட்டர்களுக்கு தொகுப்பூதியமாக 250 ரூபாய் வழங்கப்படுகிறது. இவற்றை மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் அல்லது காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தூய்மைக் காவலர்களுக்கு வழங்கப்படும் 3600 மாத ஊதியத்தை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். தூய்மைப்பணியாளர்கள் மூன்று ஆண்டுகள் பணி செய்த பின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அரசாணை உள்ளது. ஆனால் இந்த அரசாணை இதுவரை அமல்படுத்தாமல் உள்ளது. ஆகவே பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.

    தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவித்திருந்த ஓய்வூதியம் இதுவரை வழங்காமல் நிலுவையில் உள்ளது. இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தூய்மைப்பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து மாதம் 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    இந்த காத்திருப்பு போராட்டத்தில், ஊத்தங்கரை, மத்தூர், பர்கூர், வேப்பனப்பள்ளி, சூளகிரி, கெலமங்கலம், ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோஷங்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசமூர்த்தி மாற்று திறனாளிகளிடன் பேச்சுவார்த்தை நடத்தி னார்

    வேப்பனபள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்தில் தங்களுடைய ஊரக வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோஷங்களுடன் காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இதையடுத்து அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசமூர்த்தி மாற்று திறனாளிகளிடன் பேச்சுவார்த்தை நடத்தி னார். நீண்ட நேர பேச்சுவார்த்தையில் மாற்று திறனாளிகளின் கோரிக்கையை நிறை வேற்றியதை அடுத்து போராட்டத்தை கைவி டப்பட்டனர்.

    இந்த போராட்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்பாட்டத்தில் வேப்பனப்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • மாதாந்திர உதவித் தொகையை 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும்
    • 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

    திருப்பூர் :

    காது கேளாதவருக்கான மாதாந்திர உதவித் தொகையை 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும் , காது கேளாதவருக்கான ஓட்டுநர் உரிமம் வழங்கும் முகாம் நடத்திட வேண்டும் , ஆவின் பாலகம் அமைத்துக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக திருப்பூர் மாவட்ட காதுகேளாதோர் நலச்சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் அடங்கிய வாசகங்களை கொண்ட பதாகைகளை ஏந்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கறம்பக்குடியில் அடிப்படை வசதிகள் கேட்டு மாணவர்கள் வகுப்புகளை புறகணித்து பள்ளியின் வளாகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி உள்ளது. அங்கு படிக்கும் மாணவர்கள் அடிப்படை வசதிகள் கேட்டு வகுப்புகளை புறகணித்து பள்ளியின் வளாகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச லேப்டாப், மிதிவண்டி, குடி தண்ணீர் மற்றும் பஸ் பாஸ், பள்ளிக்கு ஆசிரியர் பற்றாக்குறை, சிறு சிறு அடிப்படை வசதிகள் இவைகள் வழங்காததை கண்டித்து நூற்றுக்கும்மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கோஷமிட்டனர். பின்னர் பள்ளியின் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் காவல் ஆய்வாளர் கார்த்திக்சாமி சப் இன்ஸ்பெக்டர் பெரிய சாமி, மற்றும் பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் மாணவர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் நடத்தினர்.

    பேச்சு வார்த்தையில் 15 தினங்களுக்குள் கோரிக்கையை நிறைவேற்றி வழங்குவதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை விட்டு வகுப்பிற்கு சென்றனர். இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரப்பு ஏற்பட்டது.
    ×