search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாதி சான்றிதழ் கேட்டு தாலுகா அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்
    X

    குருமன்ஸ் இன பழங்குடியின மாநாட்டில் மாநிலத் தலைவரும் முன்னாள் எம்.எம்.ஏ.வுமான டில்லி பாபு பேசியபோது எடுத்த படம்.

    சாதி சான்றிதழ் கேட்டு தாலுகா அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்

    • குருமன்ஸ் பழங்குடி மக்கள் சங்கம் மாநாட்டில் அறிவிப்பு
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

    திருப்பத்தூர்:

    குருமன்ஸ் பழங்குடி மக்கள் சங்கம் மாநில மாநாடு திருப்பத்தூர் சைவ வேளாளர் திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைவர் எல்.சிவலிங்கம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ் காளியப்பன் கொடியேற்றி வரவேற்றார், ஜி. கரிபீரன், வி. தட்சிணாமூர்த்தி, டி..கோடியப்பன் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் பொதுச் செயலாளர் ரா. சரவணன், தொடக்க உரை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. பி. டில்லி பாபு கலந்து கொண்டு பேசினார்.

    நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் வீரபத்திரன் பொருளாளர் கோ. அரங்கநாதன் உட்பட பல பேசினார்கள்.

    நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் எஸ் விஜயன் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    குருமன்ஸ் பழங்குடி இன மக்களுக்கு இனச் சான்றிதழ் உடனடியாக வழங்க வேண்டும், வனஉரிமை பாதுகாப்பு சட்டம் 2006 உறுதியுடன் அமல்படுத்த வேண்டும், ஜவ்வாதுமலையில் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்களை உருவாக்கி கொடுக்க வேண்டும், காலம் காலமாக வசித்து வரும் மக்களை அப்புறப்படுத்தாமல் அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பின்னர் முன்னாள் எம்எல்ஏ டில்லி பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில்:-

    சென்னை ஐகோர்ட்டு வழக்கு தீர்ப்புப்படி பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அறிச்சையின்படி குருமன்ஸ் இன மக்களின் கலாச்சாரம் அடிப்படையை கொண்டு குருமன்ஸ் இனபழங்குடியின மக்களுக்கு இனச் சான்றிதழ் வழங்க வேண்டும் இல்லையென்றால் தாலுகா அலுவலகம் முன்பு சாதி சான்றிதழ் வழங்கும் வரை அங்கேயே சமைத்து காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்றார்.

    Next Story
    ×