காட்பாடியில் மின் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
காட்பாடி காந்தி நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
காட்பாடி காந்தி நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
Published on

வேலூர்:

காட்பாடி காந்தி நகரில் உள்ள மின்வாரிய அலுவலக வளாகத்தில் இன்று காலை மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மண்டல செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.தருமன், செந்தில், கிருபாகரன், சுந்தரம், தனசேகரன், சுந்தரராஜன், சாம்ராஜ், நாராயணன், அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பி.பி.2 முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். துணை மின் நிலையங்கள் மற்றும் சில பணிகளை வெளி நபர்களுக்கு விடுவதை திரும்ப பெற வேண்டும். அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மின் ஊழியர்கள் போராட்டத்தால் மின்வாரிய அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com