search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ் பிரமுகர்"

    புதுவை அருகே இன்று காலை காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை அருகே ஏம்பலத்தை அடுத்த மணக்குப்பம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சபரி (வயது31). காங்கிரஸ் பிரமுகரான இவர் சமீபத்தில் நடந்த மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார்.

    சபரிக்கு திருமணமாகி ஹேமாவதி என்ற மனைவியும் ஒரு மகளும் பிறந்து 3 நாட்களே ஆன கைக்குழந்தையும் உள்ளன. ஹேமாவதி கைக்குழந்தையுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று இரவு சபரி தனது தாய் ராஜேஸ்வரி, தம்பி சுரேந்தர் மற்றும் மகளுடன் தூங்கி கொண்டு இருந்தார். இன்று அதிகாலை 4 மணியளவில் யாரோ மர்ம நபர்கள் சபரி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் தூங்கிக்கொண்டு இருந்த ராஜேஸ்வரி மீது வெடிகுண்டு சிதறல்கள் விழுந்து படுகாயம் அடைந்தார்.

    உடனே ராஜேஸ்வரி மற்றும் சபரி அவரது தம்பி சுரேந்தர் வீட்டில் இருந்து வெளியே அலறியடித்து ஓடிவந்தனர். மேலும் வெடிகுண்டு வெடித்த சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மங்கலம் மற்றும் வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அரசியல் விரோதம் காரணமாக சபரி வீட்டில் வெடிகுண்டு வீசி இருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    கேரள மாநிலத்தில் 15 வயது பழங்குடியின சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வயநாடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஓ.என். ஜார்ஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். #KerelaCongressleader #ONGeorge #POCSO
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம், வயநாடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரான ஓ.என்.ஜார்ஜ் சுல்தான் பத்தேரி பஞ்சாயத்து முன்னாள் தலைவராக பதவி வகித்தார்.

    இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக சுல்தான் பத்தேரி பகுதிக்குட்பட்ட 15 வயது பழங்குடியின சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.



    இதனால் மனமுடைந்த அந்த சிறுமி சமீபத்தில் தற்கொலைக்கு முயன்றபோது இவ்விவகாரம் சிறுமியின் தாயாருக்கு தெரியவந்தது. சிறுமியின் பெற்றோர்  ஜார்ஜை சந்தித்து நியாயம் கேட்டபோது பணத்தை தந்து சமரசம் செய்து கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.

    இதை ஏற்றுக்கொள்ளாத சிறுமியின் பெற்றோர் ஜார்ஜ் மீது போலீசில் புகார் அளித்தனர். சிறார் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக இருக்கும் ஜார்ஜை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையில்,  காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து ஓ.என். ஜார்ஜை நீக்கியுள்ளதாக கேரள மாநில காங்கிரஸ் தலைமை இன்று பிற்பகல் தெரிவித்துள்ளது. #KerelaCongressleader #ONGeorge #POCSO
    புதுக்கோட்டையில் காங்கிரஸ் பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பழனியப்பா நகரை சேர்ந்தவர் முகமது ஜாவுதீன். காங்கிரஸ் பிரமுகரான இவர் தனது வீட்டை பூட்டி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான குடும்பத்தினருடன் சென்றிருந்தார். தனது மகளை மட்டும் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு சென்றார். 

    இந்த நிலையில் இன்று காலை முகமது ஜாவு தீனின் மகள் வீட்டிற்கு சென்ற போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்றபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. தனி அறையில் உள்ள பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.13 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது. முகமது ஜாவுதீன் வெளியூர் சென்றதை  நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து நகை, பணத்தை திருடி சென்றுள்ளனர்.

    இது குறித்து முகமது ஜாவுதீனின் மகள் திருக்கோகர்ணம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் கருணாகரன்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தி உள்ளது.
    விழுப்புரம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி காங்கிரஸ் பிரமுகரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
    விழுப்புரம்:

    செஞ்சி அருகே உள்ள பெரியகரம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 63), காங்கிரஸ் பிரமுகர். இவருடைய மகன் சக்திவேல் (25). இவர் பி.இ. மெக்கானிக்கல் முடித்துள்ளார். சண்முகத்திற்கும் செஞ்சி- திருவண்ணாமலை சாலை புதுத்தெருவை சேர்ந்த அரங்ககாந்தி (53) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    அப்போது அரங்ககாந்தி, டெல்லியில் தனக்கு அரசு அதிகாரிகள் சிலரை நன்கு தெரியும், அவர்கள் மூலமாக சக்திவேலுக்கு மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக சண்முகத்திடம் கூறியுள்ளார்.

    இதை நம்பிய சண்முகம், அரங்ககாந்தியிடம் எப்படியாவது தனது மகனுக்கு மத்திய அரசு பணி வாங்கித்தரும்படி கூறினார். அதற்கு பணம் செலவாகும் என்று கூறிய அரங்ககாந்தி, சண்முகத்திடம் இருந்து ரூ.8 லட்சத்து 16 ஆயிரத்தை பெற்றார்.

    பின்னர் சில மாதங்கள் கழித்து வேலைக்கான உத்தரவு வந்துவிட்டதாக கூறி பல்வேறு ஆவணங்களை சண்முகத்திடம் அரங்ககாந்தி கொடுத்துள்ளார். அந்த ஆவணங்களை கொண்டு வேலைக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டபோது அந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சண்முகம், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட அரங்ககாந்தியை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று செஞ்சியில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற அரங்ககாந்தியை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். # tamilnews
    காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து எஸ்.முகம்மது இஸ்மாயில் நீக்கப்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Thirunavukkarasar #Congress
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மண்ணிவாக்கத்தை சேர்ந்த எஸ்.முகம்மது இஸ்மாயில், தமிழ்நாடு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக எக்காலத்திலும் அறிவிக்கப்படவில்லை. அவர் தன்னை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் என்று கூறிக் கொண்டு தொலைக்காட்சிகளிலும், ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாக கருத்துக்களை தெரிவித்து செயல்படுவதால், காங்கிரஸ் கட்சியின் எந்த பதவியிலும் இல்லாத எஸ்.முகம்மது இஸ்மாயில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார்.

    இவரோடு காங்கிரஸ் கட்சியினர் மற்றும் ஊடகத்துறை நண்பர்கள் கட்சி ரீதியாக எவரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    முகமது இஸ்மாயில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருநாவுக்கரசருக்கும் குஷ்புவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டபோது குஷ்புவுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. #Thirunavukkarasar #Congress
    ×