search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் ஆய்வு"

    • மாணவ, மாணவிகளுக்கு உணவினை பரிமாறினார்
    • உணவு பொருட்கள் தரம் குறித்து சோதனை

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த வள்ளுவம்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு முதல் -அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை பள்ளியில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி திடீர் ஆய்வு செய்தார்.

    பள்ளி மாணவ, மாணவி களுக்கு உணவினை பரிமாறி, உணவின் சுவை, சமையல் கூடத்தில் பயன்ப டுத்தப்படும் உணவு பொருட்கள் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    அப்போது பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் முத்துக்காளிப்பட்டி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் உமா ஆய்வு செய்தார்.
    • குழந்தைகளுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள், பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் முத்துக்காளிப்பட்டி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் உமா ஆய்வு செய்தார். அப்போது குழந்தைகளுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள், பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.

    குழந்தைகளுக்கு வழங்கப்படும் இணை உணவுகள், கற்பிக்கப்படும் ஆரம்ப கல்வி உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அங்கன்வாடி பணியா ளரிடம் கேட்டறிந்தார். மேலும் குழந்தைகளின் உயரம், எடை ஆகியவற்றை போஷன் அபியான் செயலியில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.

    மதிய உணவு

    அதேபோல் முத்துக் காளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள மதிய உணவு கூடத்தில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவு, பயன்பெறும் மாண வர்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களை விரிவாக கேட்டு அறிந்து மாணவர்களுக்கு உணவு களை சுகாதார மாகவும் தரமானதாகவும் வழங்கிட வேண்டுமென பணியா ளர்களிடம் அறிவுறுத்தினார்.

    அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அரசு காலனியில் அங்கன்வாடி மேற்கு பகுதியில் கழிவுநீர் கால்வாய் மற்றும் செங்குத்து உறிஞ்சி குழாய் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து முத்துக்கா ளிப்பட்டியில் இணைய வழி பட்டா வழங்குவதற்காக வரண்முறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் மேகலா மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • கிருஷ்ணகிரியில் ரேஷன் கடை, மாணவர் விடுதிகளில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
    • வாசிப்பு திறன்களை அதிகரிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுத்தினார்.

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு, கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பழைய பேட்டை ஐஇஎல்சி நடுநிலைப்பள்ளி, காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி போகனப்பள்ளி நியாய விலைக்கடை, அங்கன்வாடி மையம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் விடுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது ஐ.இ.எல்.சி நடுநிலைப்பள்ளியில், மாணவர்களின் கற்றல் திறனை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுக்கு கணிதம் மற்றும் ஆங்கில வாசிப்பு திறன்களை அதிகரிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுத்தினார்.

    போகனப்பள்ளி நியாய விலைக்கடையில் பொருட்களின் இருப்பு, குடும்ப அட்டை தாரர்களின் விபரங்கள் மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் சரியான அளவில் வழங்கப்படுகிறதா என்பதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர்,

    குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள், குழந்தைகளின் உயரம், எடை மற்றும் கற்றல் திறன் குறித்து அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அங்கன்வாடி மையத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் விடுதியை நேரில் பார்வையிட்டு, விடுதியில் மாணவர்களுக்கு சமைக்கப் படும் உணவு, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளில் நடத்தப்படும் பாடத் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.

    • ரூ.1.71 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளையும், கரடிவாவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • குருபிரசாந்த், செந்தில் வடிவேல்,மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.71 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதன்படி பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் ஊராட்சி நேரு நகர் ஆதிதிராவிடர் காலனியில் நமக்குநாமே திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ் நிலை நீர் தேக்கதொட்டியையும், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.69.17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 2 கூடுதல் வகுப்பறை கட்டடத்தினையும், செம்மிபாளையம் பகுதியில்ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் சமையலறை கூடத்தையும், ரூ.10.93 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டடத்தையும், இதேபோல பல்லடம் ஊராட்சி ஒன்றியம், மாணிக்காபுரம் ஊராட்சியில் ரூ.52.53 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப்பணிகளையும்,இதேபோல கரடிவாவி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்ரூ.6.30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கான்கிரீட் சாலை பணிகள் எனமொத்தம் ரூ.1.71 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளையும், கரடிவாவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.முன்னதாக கரடிவாவி ஊராட்சியில் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் சார்பில் தேசிய திட்ட விளக்க பிரச்சார ஊர்தியை கொடியசைத்து துவக்கி வைத்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

    . இந்த ஆய்வின் போது, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, செம்மிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஷிலா புண்ணியமூர்த்தி, கல்விக் குழு தலைவர் புண்ணியமூர்த்தி , மாணிக்காபுரம் ஊராட்சி தலைவர் நந்தினி சண்முகசுந்தரம், கரடிவாவி ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சிதா பகவதி கிருஷ்ணன்,மற்றும் பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன், உதவிப் பொறியாளர்கள் குருபிரசாந்த், செந்தில் வடிவேல்,மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட ப்பணிகளை கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.
    • வளர்ச்சித்திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

    தேனி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மரிக்குண்டு, ஒக்கரைப்பட்டி, மொட்டனூத்து மற்றும் பிச்சம்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட ப்பணிகளை கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது, ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தி ற்குட்பட்ட மரிக்குண்டு ஊராட்சி ப்பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிட மும் முடிவுற்ற பணியினை யும், வீருசின்னம்மாள்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சமையல் அறை கட்டுமான பணியினையும், ஒக்கரைப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.77 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நியாய விலைக்கடை கட்டுமான பணியினையும், மொட்ட னூத்து ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்தி ட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை முடிவுற்ற பணியினையும்,

    ராமச்சந்திராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் சமையல் அறை கட்டுமான பணியினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் குளம் புனர மைத்தல் பணியினையும், நீரார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட த்தின் கீழ் ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சமையல் அறை கட்டுமான பணியினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.05 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் மாணவியர்கள் கழிப்பறை கட்டுமானப் பணிகளையும்,

    கொப்பையம்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.15 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கும் பணியினையும், பிச்சம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட த்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் வரத்துக் கால்வாய் மற்றும் நீர் செறிவூட்டு குழி அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் எம்.சுப்புலாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பாள்ளி யில் மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார். வளர்ச்சித்திட்ட ப்பணி களை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலருக்கு அறிவுறுத்தி னார்.

    • கடந்த 4 மாதங்களுக்கு மேலாக வீடுகள், வெல்ல ஆலைகள் மற்றும் அங்கிருந்த குடியிருப்புகளுக்கு தீ வைப்பது, விவசாய கருவிகள், வாழை மற்றும் 3200-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பது போன்ற வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
    • மீண்டும் நேற்று முன்தினம் இரவு தர்மலிங்கம், நல்லசிவம், புலவர் சுப்பிரமணி ஆகியோரது தோட்டத்தில் இருந்த 2000-க்கும்‌ மேற்பட்ட வாழை மரங்கள், பாக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சேதப்படுத்தி உள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக வீடுகள், வெல்ல ஆலைகள் மற்றும் அங்கிருந்த குடியிருப்புகளுக்கு தீ வைப்பது, விவசாய கருவிகள், வாழை மற்றும் 3200-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பது போன்ற வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    இதனை தடுக்கவும் குற்றவாளிகளை பிடிக்கவும் அப்பகுதியில் 600-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். மேலும் கோவை மண்டல போலீஸ் துறைத் தலைவர் சுதாகர் தலைமையில் சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி மற்றும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் இரவு ஜேடர்பாளையம் அருகே உள்ள கொத்தமங்கலம் பகுதியில் தர்மலிங்கம், நல்லசிவம், புலவர் சுப்பிரமணி ஆகியோரது தோட்டத்தில் இருந்த 2000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள், பாக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சேதப்படுத்தி உள்ளனர். இச்சம்பவம் குறித்து அறிந்த நாமக்கல் கலெக்டர் டாக்டர் உமா பரமத்திவேலூர் எம்.எல்.ஏ. என்ஜினீயர் சேகர், பரமத்திவேலூர் தாசில்தார் கலைச்செல்வி, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ சுகந்தி மற்றும் வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களிடம் விசாரணை நடத்தி இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    மரங்கள் வெட்டி சாய்த்த மர்ம நபர்களை கண்டுபிடிக்கும் வகையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூட்டுறவுத் துறையின் கீழ் 892 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 115 மொபைல் ரேசன் கடைகள் நடைபெற்று வருகின்றன.
    • மொபைல் ரேசன் கடைகள் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் 12,893 ரேசன் கார்டுதாரர்கள் பயன் பெறுகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் 892 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 115 மொபைல் ரேசன் கடைகள் நடைபெற்று வருகின்றன. மொபைல் ரேசன் கடைகள் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் 12,893 ரேசன் கார்டுதாரர்கள் பயன் பெறுகின்றனர். சிலுவம்பட்டி, பொம்மைகுட்டைமேடு, ஆரியூர், அணியாபுரம், லத்துவாடி உள்ளிட்ட பகுதிகளில் மொபைல் ரேசன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    ஆய்வு

    மொபைல் ரேசன் கடைமூலம் நாமக்கல் சிலுவம்பட்டி, போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மொபைல் ரேஷன் கடை மூலம் பயன்பெறும் ரேசன் கார்டுகள், வழங்கப்படும் பொருட்கள் உள்ளிட்ட விவரங்களை கலெக்டர் உமா கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க வேண்டும், தரமான உணவுப் பொருட்களை சரியான அளவில் வழங்கிட வேண்டும் என விற்பனையாளருக்கு அறிவுறுத்தினார்.

    முன்னதாக திருச்செங்கோடு தாலுகா, புத்தூர் கிராமத்தில் ஆன்லைன் மூலம் வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்காக நிலங்கள் வரன்முறைபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • தண்டபாணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஜெயசீ லன் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், கல்குறிச்சி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.15.18 லட்சம் மதிப்பில் மந்தை ஊரணி வரத்துக் கால்வாயில் உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டு வருவதையும், சமத்துவ புரத்தில் ரூ.23.40 லட்சம் மதிப்பில் வரத்துக் கால்வா யில் உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டு வருவதை யும் கலெக்டர் பார்வை யிட்டார்.

    தொடர்ந்து பந்தனேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.3.25 லட்சம் வகுப்பறை புனரமைக்கப்பட்ட பணி களையும், ஜோகில்பட்டி ஊராட்சியில், முதலமைச் சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.59.02 லட்சம் மதிப்பில் திருச்சி - தூத்துக்குடி சாலை முதல் கனக்கனேந்தல் - கரியனேந்தல் சாலை மேம்படுத்தும் பணிகளை யும் ஆய்வு செய்தார்.

    வக்கனாங்குண்டு ஊராட்சியில் முதலமைச்ச ரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.157.30 லட்சம் மதிப்பில் கரியனேந்தல்- சித்துமூன்றடைப்பு சாலைப் பணிகள் நடைபெற்று வருதையும், டி.வேப்பங் குளம் ஊராட்சியில் ரூ.1.96 லட்சம் மதிப்பில் சிறிய சுகாதார வளாகம் கட்டப்பட்டப்பட்டு வருவதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.45 லட்சம் மதிப்பில் வரத்து கால்வாயில் உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டு வருவதையும் கலெக்டர் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் நடைபெற்று வரும் பணிகளையும் விரை வாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலம் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதை கலெக்டர் டாக்டர்.உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • உழவன் செயலியில் பதிவு செய்த விவசாயிகளின் விவரங்கள் வேளாண் அலுவலர்கள் மூலம் பெறப்படும்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் பிலிக்கல் பாளையத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலம் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதை கலெக்டர் டாக்டர்.உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    விவசாயிகளிடம் மேற்கொள்ளப்பட்டுள்ள வேளாண் பணிகள், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் வழங்கப் பட்ட மானிய தொகை, நிலம் மேம்பாடு உள்ளிட்ட விபரங்கள் குறித்து கலந்துரையாடினார்.

    நிலத்தடி நீர்

    இதையடுத்து கலெக்டர் உமா கூறியதாவது:-

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களுக்கு முன்னுரிமை அளித்து தரிசு நில மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தரிசு நிலமுடைய 8 அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் குழுவாக ஒன்று சேர்ந்து 15 ஏக்கர் தரிசு நிலத் தொகுப்பினை ஏற்படுத்தி குழுவாக சாகுபடி செய்வதற்கு உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    உழவன் செயலியில் பதிவு செய்த விவசாயிகளின் விவரங்கள் வேளாண் அலுவலர்கள் மூலம் பெறப்படும். பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் தரிசு நிலத் தொகுப்புகளில் நிலத்தடி நீர் மட்டம், நீர் ஆதாரங்களை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து ஆழ்துளைக் கிணறு அல்லது குழாய் கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் தரிசு நிலத்திலும் சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் வருவாய் ஈட்டலாம்.

    அந்த வகையில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் 2021 -– 2022- ன் கீழ் கபிலர்மலை வட்டம் பிலிக்கல்பாளையத்தில் 15 விவசாயிகளை உள்ளடக்கி 15.50 ஏக்கர் பரப்பளவில் தரிசு நிலம் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்தரிசு நிலத் தொகுப்பில் ஆழ்துளை கிணறு, மின் இணைப்பு மற்றும் மின் மோட்டர் முழு மானியத்தில் வழங்கப்பட்டு நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வில் வேளாண் இணை இயக்குநர் துரைசாமி, தோட்டக்கலைத்துறை (துணை இயக்குநர்) கணேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகன், கபிலர் மலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பிலிக்கல் பாளையம் ஊராட்சி தலைவர் மணிமேகலை லோக நாதன் மற்றும் பயனாளிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • தண்ணீரை மூடி வைக்க அறிவுறுத்தல்
    • துப்புரவு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் டவுன் சிவராஜ் பேட்டை 3-வது வார்டு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (45). இவருடைய மனைவி சுமித்ரா(35). தம்பதியினர் மகன்கள் பிரித்திகா (15), தாரணி (13), யோகலட்சுமி (7), அபிநிதி (5) மகன் புருஷோத்தமன் (8 மாதம்). மணிகண்டன் கடந்த ஆண்டு மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார். சுமித்ரா தனது பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் யோகலட்சுமி, அபிநதி, புருஷோத்தமன் ஆகிய 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    பின்னர் 3 பேரும் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

    இதில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அபிநதி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.

    திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் சிவராஜ் பேட்டை அனைத்து தெருக்களிலும் நடந்து சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது பொதுமக்களிடம் தூய நீரில் தான் டெங்கு வேகமாக பரவும். எனவே தண்ணீரை மூடி வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    மேலும் கழிவுநீர் கால்வாய்களில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்வதோடு, போர்க்கால அடிப்படையில் ஒட்டுமொத்த துப்புரவு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    • 2,270 சமையல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்
    • பலர் கலந்து கொண்டனர்

    ேவங்கிக்கால்:

    திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் கிராம ஊராட்சியில் உள்ள அரசு மாதிரி ஆரம்ப பள்ளியில் முதல் அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தும் முறை குறித்து கலெக்டர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார்.

    மேலும் பள்ளி மாணவர்களுக் கலெக்டர் உணவு பரிமாறினார். தொடர்ந்து பேசிய ஆட்சியர் திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் 1,581 பள்ளிகளில் படிக்கும் 88 ஆயிரத்து 988 மாணவ மாணவிகள் பயன்பெறுகிறார்கள்.

    இதற்காக 2,270 சமையல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்தார். இதில் மகளிர் திட்ட இயக்குநர் சையித் சுலைமான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருணாசலம், பிரித்விராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் மாவட்ட சுற்றுலா துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் சாந்தி ஆய்வு செய்தார்.
    • வனப்பகுதியில் உள்ள இருளர் மக்களுக்கு கட்டப்பட்டு வரும் குடியிருப்பு பணிகளை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலாத்துறை மூலம் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோன்று ஊரக வளர்ச்சித் துறை மூலமும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இப் பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி, நேரில் பார்வையிட்டு பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

    மேலும் ஒகேனக்கலை அடுத்த மஞ்சகொடம்பு என்ற வனப்பகுதியில் இருளர் மக்களுக்கு கட்டப்பட்டு வரும் குடியிருப்பு பணிகளை நேரில் பார்வையிட்ட பின் அங்குள்ள பள்ளி மாணவர்களிடையே கலெக்டர் சாந்தி உரையாடினார்.

    பள்ளி வயது குழந்தைகள் அனைவரும் தவறாமல் பள்ளிக்கு தொடர்ந்து செல்ல வேண்டும் என்றும், கல்வியை பெற்று எதிர்காலத்தில் சிறந்த வர்களாக திகழ வேண்டும் என்றும் மாணவிகளிடையே கலெக்டர் தெரிவித்தார்.

    தமிழகத்தின் மிக முக்கியமான சுற்று லாத்தலமான ஒகேனக்கலில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை நேரில் பார்வையிட்டு அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், நவீனப்ப டுத்தப்பட்டுள்ள மருத்துவ வசதிகள் குறித்தும் கலெக்டர் கேட்டறிந்தார்.

    இந்நிகழ்வில் வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    ×