search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
    X

    இலுப்பைக்குளம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டப்பணிகளை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார். 

    வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

    • வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • தண்டபாணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஜெயசீ லன் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், கல்குறிச்சி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.15.18 லட்சம் மதிப்பில் மந்தை ஊரணி வரத்துக் கால்வாயில் உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டு வருவதையும், சமத்துவ புரத்தில் ரூ.23.40 லட்சம் மதிப்பில் வரத்துக் கால்வா யில் உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டு வருவதை யும் கலெக்டர் பார்வை யிட்டார்.

    தொடர்ந்து பந்தனேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.3.25 லட்சம் வகுப்பறை புனரமைக்கப்பட்ட பணி களையும், ஜோகில்பட்டி ஊராட்சியில், முதலமைச் சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.59.02 லட்சம் மதிப்பில் திருச்சி - தூத்துக்குடி சாலை முதல் கனக்கனேந்தல் - கரியனேந்தல் சாலை மேம்படுத்தும் பணிகளை யும் ஆய்வு செய்தார்.

    வக்கனாங்குண்டு ஊராட்சியில் முதலமைச்ச ரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.157.30 லட்சம் மதிப்பில் கரியனேந்தல்- சித்துமூன்றடைப்பு சாலைப் பணிகள் நடைபெற்று வருதையும், டி.வேப்பங் குளம் ஊராட்சியில் ரூ.1.96 லட்சம் மதிப்பில் சிறிய சுகாதார வளாகம் கட்டப்பட்டப்பட்டு வருவதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.45 லட்சம் மதிப்பில் வரத்து கால்வாயில் உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டு வருவதையும் கலெக்டர் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் நடைபெற்று வரும் பணிகளையும் விரை வாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×