என் மலர்
உள்ளூர் செய்திகள்

வள்ளுவம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு
- மாணவ, மாணவிகளுக்கு உணவினை பரிமாறினார்
- உணவு பொருட்கள் தரம் குறித்து சோதனை
ராணிப்பேட்டை:
வாலாஜா அடுத்த வள்ளுவம்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு முதல் -அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை பள்ளியில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி திடீர் ஆய்வு செய்தார்.
பள்ளி மாணவ, மாணவி களுக்கு உணவினை பரிமாறி, உணவின் சுவை, சமையல் கூடத்தில் பயன்ப டுத்தப்படும் உணவு பொருட்கள் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
அப்போது பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
Next Story






