என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
    X

    மஞ்சகொடம்பு கிராமத்தில்,மலைவாழ் மக்கள் குடியிருப்புகளை கலெக்டர் சாந்தி பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.   

    ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

    • தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் மாவட்ட சுற்றுலா துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் சாந்தி ஆய்வு செய்தார்.
    • வனப்பகுதியில் உள்ள இருளர் மக்களுக்கு கட்டப்பட்டு வரும் குடியிருப்பு பணிகளை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலாத்துறை மூலம் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோன்று ஊரக வளர்ச்சித் துறை மூலமும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இப் பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி, நேரில் பார்வையிட்டு பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

    மேலும் ஒகேனக்கலை அடுத்த மஞ்சகொடம்பு என்ற வனப்பகுதியில் இருளர் மக்களுக்கு கட்டப்பட்டு வரும் குடியிருப்பு பணிகளை நேரில் பார்வையிட்ட பின் அங்குள்ள பள்ளி மாணவர்களிடையே கலெக்டர் சாந்தி உரையாடினார்.

    பள்ளி வயது குழந்தைகள் அனைவரும் தவறாமல் பள்ளிக்கு தொடர்ந்து செல்ல வேண்டும் என்றும், கல்வியை பெற்று எதிர்காலத்தில் சிறந்த வர்களாக திகழ வேண்டும் என்றும் மாணவிகளிடையே கலெக்டர் தெரிவித்தார்.

    தமிழகத்தின் மிக முக்கியமான சுற்று லாத்தலமான ஒகேனக்கலில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை நேரில் பார்வையிட்டு அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், நவீனப்ப டுத்தப்பட்டுள்ள மருத்துவ வசதிகள் குறித்தும் கலெக்டர் கேட்டறிந்தார்.

    இந்நிகழ்வில் வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×